பொதுவாக
தெய்வ சிலைகள் எல்லாம் கருங்கல் கொண்டு செதுக்கப்படுகின்றது. ஆனால் அதற்கு காரணம்
இதுவரை யாரும் கண்டறியாத ரகசியமாகவே உள்ளது.
பெரும்பாலும்
கர்ப்பகிரகங்களில் உள்ள தெய்வச் சிலைகள் கருங்கற்களை கொண்டுதான்
வடிக்கப்பட்டிருக்கும். எல்லாவற்றிற்கும் ஒரு சாத்திரம் வைத்திருக்கும் நம்
முன்னோர்கள் இதற்கும் ஒரு ரகசியத்தை சொல்கின்றனர்.
பொதுவாக
உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமாக இருப்பதால்,
கருங்கல் எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மை உடையது.
இத்தகைய
சிறப்பு வாய்ந்த கருங்கல்லானது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐந்து
வகை பஞ்சபூதங்களினுடைய தன்மைகளையும் தன்வசம் கொண்டுள்ளது.
கருங்கல்லில்
நீர் இருப்பதால் தான், கல் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறது.
பஞ்ச
பூதங்களில் ஒன்றாக கருதப்படும் நிலம் கல்லில் உள்ளது. அதனால் தான், கல்லில் செடி,
கொடிகள் வளர்கின்றது.
கற்களை
உரசும் போது அதிலிருந்து தீப்பொறி வருவதால், அது நெருப்பையும் தன் வசம்
கொண்டுள்ளது.
கல்லில்
தேரைகள் உயிர் வாழ்வதால், அதனுள் காற்று இருப்பதும் புலனாகிறது.
ஆகாயத்தைப்
போல, வெளியில் உள்ள சப்தத்தை உள்வாங்கிக் கொண்டு, வெளியிடும் சக்தி கல்லுக்கு
உள்ளது. அதனால்தான் கருங்கல்லில் கட்டப்பட்ட கோவில்கள் நாம் சொல்வதை நமக்கு
எதிரொலிக்கிறது.இதுவே சிலைகள் பெருமாலும் கருங்கற்களின் வடிப்பதற்கான முக்கிய
காரணமாகும்.
இத்தகைய
சிறப்பு சக்திகள் வேறு எந்த வகையான உலோகத்திலும் வெளிப்படுவதில்லை. கருங்கல்லினால்
வடிவமைக்கப்பட்ட கோவிலில் அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது,
அந்த கோவிலின் பஞ்ச பூதங்களின் தன்மை அதிகரிக்கிறது.
அத்தகைய
கோவிலில் நாம் வணங்கும் போது, நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகுவதுடன், நம்
வாழ்வில் நல்ல பலன்களும் கிடைக்கிறது. இந்த காரணத்தினால் தான் கோவில்களில் உள்ள
சிலைகள் கருங்கல்லில் வடிவமைக்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக