இன்று உலகம் முழுவதும் கொண்டாடப் படும் சர்வதேச
மகளிர் தினம் உருவானதே ஒரு போராட்டக் களத்தில்தான். 1900ஆம் ஆண்டின் முதல் 10 ஆண்டுகளில்
பெண்கள் பொருளாதாரரீதியாகவும் சமூகரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இவற்
றிற்கு எதிராக உலகம் முழுவதும் பெண்கள் வெகுண்டெழுந்து போராடிக்கொண்டிருந் தனர். சில
நாடுகளில் பெண்களுக்கான அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன.
சர்வதேச மகளிர் தினம் தோற்றம்
1907-ல் ஜெர்மனியில், ஸ்டட்கார்ட்
என்ற நகரில் முதன் முதலாக ‘சோசலிச பெண்கள் மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் 15
நாடுகளிலிருந்து 59 பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். உலகம் முழுவதுமுள்ள பெண்கள்
அமைப்புகளை ஒருங்கிணைப்ப தற்கு ஒரு சர்வதேச பெண்கள் அமைப்பு இம்மாநாட்டில் உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பிற்கு கிளாரா ஜெட்கின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
1908-ம் ஆண்டு முதன்முதலில் நியூ யார்க்
நகரில், 15000-க்கும் மேற்பட்ட பெண் கள் பேரணியாக சென்று தங்களின் வேலை நேரத்தை குறைக்க
வலியுறுத்தியும், தேர் தலில் வாக்களிப்பதற்கான உரிமை கோரி யும், தங்களுக்கு நியாயமான,
சமவேலைக்கு சமஊதியம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
1909-ல் ஆடை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த மகளிர் தங்களுக்கு
நியாய மான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத் தம் மேற்கொண்டனர்.
அமெரிக்காவின் சோச லிஸ்ட் கட்சி தேசிய அளவிலான முதல் மகளிர் மாநாட்டை பிப்ரவரி 28-ம்
தேதி நடத் தியது. அன்றைய தினத்திலிருந்து 1913 வரை பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை
சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டது.
ஜெர்மனியில், 1910-ல் கோபன்ஹேகன் நகரில் ஜெர்மனியின் சோசலிச
ஜனநாயக கட்சி இரண்டாவது மகளிர் மாநாட்டை நடத் தியது. இதில் 17 நாடுகளிலிருந்து 100க்கும்
மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். இவர்கள் பல்வேறு நாடுகளின் தொழிற்சங் கங்களின் பிரதிநிதிகளாகவும்,
சோசலிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளாகவும், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகளாகவும் இருந்த
னர். பின்லாந்து நாட்டின் நாடாளுமன்றத் திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும்
பிரதிநிதிகளாக வந்திருந் தனர். இந்த மாநாட்டில் சோசலிஸ்ட் ஜனநா யக கட்சியின் மகளிர்
பிரிவு தலைவராக இருந்த கிளாரா ஜெட்கின், பெண்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒவ்வொரு
ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தை நடத் திட வேண்டும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்தார்.
இந்த தீர்மானம் அனைத்து பிரதி நிதிகளாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ரொட்டியும் ரோசாப்பூவும்
தொடர்ந்து 1911-ல் சர்வதேச மகளிர் தினம் முதன்முதலாக ஆஸ்திரியா, டென் மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடு களில் மார்ச் மாதம் 19-ந்தேதி கொண்டாடப் பட்டது. இந்த நாடுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட பேரணி கள் நடைபெற்றன. இந்த பேரணிகளில் பெண்கள் வேலை செய்வதற்கான உரிமை. தேர்தல்களில் வாக்களிப்பதற்கான உரிமை, பயிற்சி பெறுவது, பொது அலுவலகங்களில் வேலை செய்வது, சமூகத்தில் பாகுபாடின்றி நடத்தப்பட வேண்டும் போன்ற கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.
தொடர்ந்து 1911-ல் சர்வதேச மகளிர் தினம் முதன்முதலாக ஆஸ்திரியா, டென் மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடு களில் மார்ச் மாதம் 19-ந்தேதி கொண்டாடப் பட்டது. இந்த நாடுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட பேரணி கள் நடைபெற்றன. இந்த பேரணிகளில் பெண்கள் வேலை செய்வதற்கான உரிமை. தேர்தல்களில் வாக்களிப்பதற்கான உரிமை, பயிற்சி பெறுவது, பொது அலுவலகங்களில் வேலை செய்வது, சமூகத்தில் பாகுபாடின்றி நடத்தப்பட வேண்டும் போன்ற கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.
அதே ஆண்டில் மார்ச் மாதம் 25-ந்தேதி அன்று நியூயார்க் நகரில்
நடைபெற்ற ஒரு முக்கோண தீ விபத்தில், பணியில் ஈடுபட் டிருந்த 140 பெண்கள் உயிரிழந்தனர்.
இவர் களில் பெரும்பாலானோர் இத்தாலி நாட் டைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்து அன் றைய
தினம் அமெரிக்க நாட்டில் பெண்க ளுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்ததை வெளிப்படுத்தியது.
இதன் பின்னர், தொழி லாளர் சட்டங்களை கடுமையாக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட
இந்த நிகழ்ச்சி அடிகோலாக அமைந்தது. இதே ஆண்டில் பெண்கள் நடத்திய ‘ரொட்டியும் ரோசாப்பூவும்’
என்ற இயக்கம் பெண்களின் கோரிக்கை களை வலியுறுத்துவதாக அமைந்தது. இத்த கைய தொடர்ச்சியான
போராட்டங்கள் மூலமே பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை யும் வேலை செய்யும் உரிமையும்
சம ஊதியம் பெறும் உரிமையும் பிற்காலத்தில் கிடைத்தன.
மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினம்
மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினம்
1913-14-ல் ரஷ்ய நாட்டில் முதன் முறை யாக சர்வதேச பெண்கள் தினம் கொண் டாடப் பட்டது. 1913-ம் ஆண்டு பிப்ரவரி கடைசி ஞாயிறு அன்று நடைபெற்ற மாநாட்டில் மார்ச் 8 பெண்கள் தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. 1914-ல் போருக்கு எதிராக பெண்கள் ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பேரணி நடத்தினர். 1917-ல் ரஷ்ய பெண்கள் ‘ரொட்டிக்காகவும் போருக்கு எதிராகவும்’ பிப்ரவரி கடைசி ஞாயிறு அன்று வேலை நிறுத்தம் செய்தனர். அப்போது நடைபெற்ற போரில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருந்தனர். இந்த வேலை நிறுத்தத்தை தடைசெய்ய ஆரம்பத் தில் அரசு முயற்சி செய்தபோதும் பின்னர் ரஷ்ய நாட்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை முதல் முறையாக தந்தது குறிப் பிடத்தக்கது. அந்த வீரஞ்செறிந்த வேலை நிறுத்தம் ரஷ்ய ஜூலியன் காலண்டர் படி பிப்ரவரி 23 என்றாலும் உலகம் முழுவதும் கடைப்பிடித்து வரும் காலண்டர் படி மார்ச் 8 ஆகும். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளே நாம் இன்று கொண்டாடும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாகும்.
இன்று சர்வதேச மகளிர் தினம் உலகில் அனைத்து நாடுகளிலும் உற்சாகமாக
கொண் டாடப்படுகிறது. சீனா, வியட்நாம், ஒன்றுபட்ட ரஷ்ய நாடுகளில் இன்று மகளிர் தினத்திற்கு
அரசு விடுமுறை விடப்படுகிறது. அமெரிக் காவில் மார்ச் மாதம் முழுவதும் பெண்கள் வரலாற்று
மாதம் (றுடிஅநn’ள ழளைவடிசல அடிவோ) கொண்டாடப்படுகிறது.
இந்திய நாட்டில் பெண்கள் நிலை
நமது நாட்டிலும் மகளிர் தின கொண்
டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வணிக நிறுவனங்கள் இந்த நாளை பயன் படுத்திக்கொண்டு
ஆடை அணிகலன்கள் விற்பனைக்கு, விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால் இந்திய
நாட்டில் பெண்கள் நிலை மிகவும் மோசமாகவுள்ளது.
இந்திய நாட்டில் பணிபுரியும் பெண் களுக்கு பாதுகாப்பற்ற நிலை
உள்ளதாக ‘அசோசெம்’ அமைப்பு சேகரித்த புள்ளி விப ரங்கள் கூறுகின்றன. இரவு நேரங்களில்,
தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற் றும் பெண்களும், விமானப் போக்குவரத்துப் பணியில்
பணியாற்றும் பெண்களும், மருத்து வமனையில் பணியாற்றும் பெண்களும் பாதுகாப்பற்ற நிலையில்
உள்ளனர் என்றும், நிறுவனங்கள் இவர்களுக்கு போதுமான பாதுகாப்பை தரத்தவறியுள்ளன என்றும்
சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது தலைநகர் தில்லியில் அதிகபட்சமாக 65சதவீதமும் ஹைதராபாத்தில்
28சதவீதமும் மும்பையில் 28சதவீதமும் என உள்ளது.
பெங்களூரில் உள்ள 2200 தொழில் நிறுவனங்களில் 1600 நிறுவனங்கள்
மட்டும் தொழில்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் 75000 முதல்
95000 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். மருத் துவமனைகள், விமானப்போக்குவரத்து, தகவல்
தொழில்நுட்பத் துறைகளில் பணி யாற்றும் இவர்களில் 56சதவீத பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில்
உள்ளனர் என ‘அசோசெம்’ புள்ளிவிபரம் கூறுகிறது.
மகாத்மா காந்தி, பண்டிட் ஜவஹர்லால் நேரு, தந்தை பெரியார்
போன்றவர்கள் பெண் களுக்கு சம உரிமை வழங்குவது குறித்து பேசியிருந்தாலும், பெண்களுக்கென
தனிச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், அவை யெல்லாம் ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளன.
நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு பிரச்சனையில்
இன்று இந்திய அரசியல்வாதிகளின் முகமூடிகள் கிழித்தெறி யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இடதுசாரிக் கட்சித் தலைவர்களை தவிர ஏனையோர் இரட்டை நிலைப்பாடு கொண்டி ருப்பது வெட்ட
வெளிச்சமாகிவிட்டது. மாநி லங்களவையில் நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு மசோதா, மக்களவையில்
நிறை வேற்ற முடியாமல் உள்ளது வெட்கக்கேடானது.
இன்று பெண்கள் தினத்தை கொண்டாடு வதில்
ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் உள்ளது. அதே போல் உழைப்பாளி மக்களுக் கும் ஒரு நோக்கம்
உள்ளது.
பெண்களுக்கு, சமூகம்,
அரசியல், பொரு ளாதாரம் மற்றும் தொழிற்சங்கத்தில் சமத்து வம் கிடைத்திடவும், சொத்து
உரிமை, சட்டம் இயற்றக் கூடிய அவைகளில் இடம் பெற்றிடவும்,
வேலை செய்யுமிடங்களில் ஆண்- பெண் என்ற பாகுபாடு இல்லாமலிருக்கவும், வேலை செய்யுமிடங்களில் பாதுகாப் பினை உத்தரவாதப்படுத்திடவும், குழந்தைகள் காப்பகங்கள் ஏற்படுத்திடவும், பாலியல் பலாத்காரத்தை தடுத்து நிறுத்திடவும், வரதட்சணைக் கொடுமைகளை களைந்திட வும், பெண்களை வணிக விளம்பரத்திற்கு அருவருக்கத்தக்க முறையில் பயன்படுத் துவதை தடுத்து நிறுத்திடவும், சாதியக் கொடுமைகளிலிருந்தும், மதரீதியான, சம்பிர தாய, மூட பழக்க வழக்கங்களிலிருந்தும் பெண்களை மீட்டெடுத்திடவும், உலகமயத் தினால் முதலில் பாதிக்கப்படுவது பெண் என் பதால் அவற்றிற்கு எதிரான போராட்டங்களில் பெண்களை ஈடுபடுத்துவதும்
இன்று உழைப்பாளி மக்கள் முன் உள்ள தலையாயக் கடமைகளாகும். இந்த உணர் வோடு சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவோம்
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக