Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 22 மார்ச், 2019

சகுனங்களும் வாழ்கையும் !




சிறு வயதில் நிறைய பேர் சகுனங்கள் பார்ப்பதை பார்த்திருக்கிறேன். "நமக்கு நல்லது நடக்கிறதா இருந்தா சில பல சகுனங்கள் நமக்குஉணர்த்தும்" என்று என்னுடைய பாட்டி சொல்லி கேட்டிருக்கிறேன். சகுனங்கள் என்பது உண்மையா?, சகுனங்கள் நமக்கு எதனைஉணர்த்துகின்றன. நிறைய பேர் "எனக்கு இப்போ நடக்கிறதெல்லாம்பார்த்தா நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்" என்று சொல்வதைகேட்டிருக்கிறேன்..அப்படியானால் நமக்கு சுற்றிலும் நடப்பவைநமக்கு எதையோ உணர்த்துகின்றனவா? இவை எல்லாம் எனக்குநிறைய நேரம் எழும் கேள்விகள்.

சில மாதங்களாக வேலைக்கு முயற்சி செய்து ஒன்றும் சரியாக கிளிக்ஆகாத நிலையில் மனது வெறுத்து இருந்தேன். அந்த நேரத்தில் சிலநாட்களுக்கு முன் பாலோ கேல்ஹோ அவர்களின் தி அல்கெமிஸ்ட்என்ற புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது.

- The Alchemist- : பாலோ கேல்ஹோவின் முக்கியமான புத்தகம். ஒருமனிதனின் விதியை தேடிய பயணத்தை பற்றியது இந்த புத்தகம். அது தன்னம்பிக்கை புத்தகமா அல்லது கதையா, நாவலா எதிலும் வகைப்படுத்த முடியாத படியான அருமையான புத்தகம் அது. இப்போது படிக்கும் போது ஒரு வகையான எண்ணங்களை தருகிறதுஇந்த புத்தகம், ஒரு வேலை சில வருடங்கள் கழித்து படிக்கும் போதுவேறு எண்ணங்கள் எனக்கு தோன்றக்கூடும்.


ஒரு மனிதன் தன்னுடைய விதியை நோக்கி பயணம் செய்யும் போதுஇந்த உலகமும் அதனை சார்ந்த அனைத்தும் உதவும் என்று அந்தபுத்தகத்தில் படித்தேன். எத்தனை தூரம் இது உண்மை.

சில காரியங்களை செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் எல்லாமேநல்ல படியாக நடப்பது போன்று இருக்கும், ஆனால் நாட்கள் ஆக ஆக தடைகள் ஒன்றன் பின் ஒன்றாக தலை எடுக்கும். பின் ஒரு கட்டத்தில்எல்லாமே முடிந்து விட்டது நமக்கு இதில் எதிர் காலமே இல்லை என்றுஅந்த காரியத்தை ஊத்தி மூட நினைப்போம், அப்போது எல்லாமேநல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். இவை எல்லாம் எதனைகுறிக்கின்றன?

அந்த புத்தகத்தின் படி இயற்கை/விதி எதுவோ ஒன்று நம்மை ஒருசெயலில் ஈடுபடுத்த முதலில் நம்பிக்கை தருவது போல சில லக் ஐதரும் அது பிகிநேர்ஸ் லக் என்கிறார். பிறகு காலம் செல்ல செல்ல வாழ்கையை/உலகத்தை புரிய வைக்க நமக்கு கஷ்டத்தை தருகிறது. பலர் இந்த கஷ்டம் தாங்க முடியவில்லையே என்று வருந்திமுயற்சியை கை விட்டு விடுகிறார்கள். அவர்கள் losers ஆகிறார்கள். ஆனால் முயற்சியை கைவிடாமல் கடைசி வரை முயல்பவன்ஜெயிக்கிறான்.

அதனை தான் ஒரு வேலை

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். "

என்று வள்ளுவர் குறிப்பிட்டாரோ, தெரியவில்லை.

எப்படியோ அந்த புத்தகம் கிருஸ்துவ நம்பிக்கைகளை அங்கங்கேதூவினாலும் அது சொல்லும் கருத்துகள் மறுக்க முடியாததாகஉள்ளன.

சில நாட்களுக்கு முன் CNN ஹீரோவான மதுரையை சேர்ந்தநாராயணன் கிருஷ்ணன் அவர்கள் இங்கு நியூ ஜெர்சி வந்திருந்தபோது ஒன்று குறிப்பிட்டதாக நண்பர் ஒருவர் கூறியது ஞாபகத்திற்குவந்தது, "நல்ல காரியம் செய்யனும்னு நான் ஆரம்பிச்சது தாங்க, நல்லகாரியம்னு ஆரம்பிச்சவுடன் fund தானா வர ஆரம்பிச்சது, எனக்குபின்னால யாரவது இதனை தொடர்ந்து நடத்த ஆள் கட்டாயம்வருவார்" இது நாராயணன் கிருஷ்ணன் சொன்னது. இதனை தான்சகுனங்கள் என்பதோ?

டிஸ்கி: இந்த பதிவு புத்தக விமர்சனமா, அனுபவமா அல்லது கொசுவர்த்தியா எனக்கே தெரியவில்லை! 


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக