இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு உயிரினம்டைனாசர்கள். அவைகளில் சிறியவை, பெரியவை, வலிமையுள்ளவை,வெட்கப்படுபவை எனப் பல வகைகளாய் வாழ்ந்து வந்தன. மனிதன் இன்றுஆட்சி செய்யும் இதே பூமியில், டைனாசர்கள் வாழ்ந்து, நாம் தோன்றியஇலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மாண்டு விட்டன.
டைனாசர் - வகைகள் :
ஆயிரத்திற்கும் மேற்பட்ட டைனாசர் இனங்கள் இதுவரை கண்டறிய பட்டுள்ளன.டைரனௌசரஸ், ப்ராகியோசாரஸ்,
ஸ்டீகோசாரஸ், ட்ரைசெராடாப்ஸ்,வெலாசிரப்டர், ஏங்கிலோசாரஸ், அபாடோசாரஸ், மற்றும் டிப்லோடாகஸ்போன்றவை நம் ஞாபகத்தில் முதலிடம் பெறுபவை ஆகும். டைனாசர்களில்எத்தனை இனங்கள் உண்டு என்பது நாம் அறியாத போதும் ஒவ்வொரு ஆண்டு,பல்வேறு புதிய இனங்கள் கண்டறியப் பட்டன. அவைகளில் சிலவை தாவரஉண்ணிகளாகவும், பலவை மாமிச பட்சிணிகளாகவும் திகழ்ந்தன.
டைனாசர்கள் வாழ்ந்த காலம் :
பூமியின் வரலாற்றில் டைனாசர்கள் மூன்று கால கட்டங்களில் வாழ்ந்துவந்தன. அவற்றில் முதன்மையான காலம் 'ட்ரையாஸிக் காலம்'
(251 - 199கோடி ஆண்டுகள் முன்பு) என அறியப்படுகிறது. நாம் பெரும்பாலும் கேள்விபட்ட டைனாசர் இனங்கள் இந்த காலக் கட்டம் சார்ந்தவை அல்ல.
'ஜுராஸிக் காலம்' (199 - 145 கோடி ஆண்டுகள் முன்பு) என்பது, அவைகள்வாழ்ந்த இரண்டாம் கால நிலை என அறியப் படுகிறது. அந்த சமயத்தில்வாழ்ந்தவை தான் ப்ராகியோசாரஸ் மற்றும் ஸ்டீகோசாரஸ் வகைடைனாசர்கள்.
மூன்றாம் மற்றும் கடைசி காலக் கட்டத்தை 'க்ரெடேஷியஸ் காலம்'
(145 - 65கோடி ஆண்டுகள் முன்பு) என்று அழைக்கிறார்கள். டைனாசர்களில் கடைசிஇனங்களான ட்ரைசெராடாப்ஸ், டைரனௌசரஸ், மற்றும் வெலாசிரப்டர் இந்தகாலத்தில் வாழ்ந்தன. இந்த இனம், ஏறக்குறைய 65 கோடி ஆண்டுகளுக்குமுன்பு அழிந்து விட்டன.
மனித குலம் தோன்றி, இரண்டு கோடி ஆண்டுகள் மட்டுமே ஆகிறது என்பதுவியத்தகு செய்தி ஆகும்.
டைனாசர் - வாழ்விடம் :
டைனாசர்கள் உலகத்தின் எல்லா பகுதிகளிலும் வியாபித்து இருந்தன. அவை
வாழ்ந்த காலத்தில், இன்றைய வெப்பநிலையை விட மிக கூடுதலாக தட்பவெப்பநிலை நிலவியது.
பச்சை மரங்கள், மாஸ் வகை செடிகள் ( Mosses ), ஃபெரணி வகை செடிகள் ( Ferns )
காணப்பெற்றாலும், மலர்கள் தோன்றி இருக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக