Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

அந்த இரு ஜனாதிபதிகள்

ஆபிரகாம் லிங்கன் மற்றும் ஜான் எப். கென்னடி க்கான பட முடிவு


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்



ஆபிரகாம் லிங்கன் மற்றும் ஜான் எப். கென்னடி இவர்களை குறித்து அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் இவர்கள் இருவரின் வாழ்விலும் நடந்த சில நிகழ்வுகள் சரித்திரத்தில் ஒரு வியப்பு என்றால் அது மிகை ஆகாது.
ஆபிரகாம் லிங்கன் அவர்கள் US காங்கிரசுக்கு 1846 ம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜான் எப்.கென்னடி அவர்கள் US காங்கிரசுக்கு 1946 ம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆபிரகாம் லிங்கன் அவர்கள் அமெரிக்காவின் குடியரசு தலைவராக 1860ம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜான் எப்.கென்னடி அவர்கள் அமெரிக்காவின் குடியரசு தலைவராக 1960 ம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
லிங்கனின் உதவியாளரின் பெயர் கென்னடி. கென்னடியின் உதவியாளரின் பெயர் லிங்கன்.
லிங்கனை கொலை செய்த ஜான் வில்கெஸ் பூத் 1839 வருடத்தில் பிறந்தான். கென்னடியை கொலை செய்த லீ ஹார்வே ஆஸ்வால்ட் 1939 ம் வருடத்தில் பிறந்தான்.
லிங்கன் போர்ட் என்று அழைக்கப் பட்ட தியேட்டரின் முன் சுடப்பட்டார். கென்னடி போர்ட் கம்பனியின் லிங்கன் என்ற காரில் செல்லும்போது சுடப்பட்டார்.
லிங்கனை தியேட்டரில் சுட்டபிறகு தியேட்டரில் இருந்து பண்டக சாலைக்கு கொலைகாரன் தப்பிச் சென்றான். கென்னடியை சுட்டவுடன் பண்டக சாலையில் இருந்து தியேட்டருக்கு கொலைகாரன் தப்பிச் சென்றான்.
இருவரும் மனித உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள்.
இருவரின் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வசிக்கும் போது தங்கள் குழந்தைகளை இழந்தவர்கள்.
இருவரும் வெள்ளிக்கிழமையில் தலையில் சுடப்பட்டு இறந்தார்கள்.
பூத் மற்றும் ஆஸ்வால்ட் இரண்டு பேரும் வழக்கு முடிவதற்கு முன்பு கொல்லப்பட்டனர்.
இப்படியாகப் பல விஷயங்களில் ஓன்றுபட்டிருக்கும் மாண்புமிகு லிங்கன் மற்றும் கென்னடி ஆகியவர்களின் சரித்திரம் ஒரு அமானுஷ்யம் தானே!
 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக