Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 13 ஏப்ரல், 2019

தயிர் ரசம்


தயிர் ரசம் க்கான பட முடிவு


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்






பொதுவாக தயிரை அல்லது குழம்பு செய்து சாப்பிடுவோம். ஆனால் அதனைக் கொண்டு ரசம் செய்து சாப்பிடலாம் என்பது தெரியுமா? ஆம், தயிரைக் கொண்டு அருமையான சுவையில் ரசம் செய்யலாம்.

இந்த ரசம் வித்தியாசமான சுவையில் இருக்கும். மேலும் வித்தியாசமாக சாப்பிட நினைப்போருக்கு இது ஒரு சிறப்பான ரெசிபி. இங்கு தயிர் ரசத்தை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்: 

புளித்த தயிர் - 1 கப் 

தண்ணீர் - 1/2 கப் 

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு... 

மல்ல - 1 டேபிள் ஸ்பூன் 

துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 

மிளகு - 1 டீஸ்பூன் 

சீரகம் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

வரமிளகாய் - 1 கறிவேப்பிலை - சிறிது

செய்முறை: முதலில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் புளித்த தயிரை தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து, பின் கலந்து வைத்துள்ள தயிர் கலவையை அத்துடன் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கினால், தயிர் ரசம் ரெடி!!!


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக