Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 24 ஏப்ரல், 2019

ஹிட்லர்

ஹிட்லர் க்கான பட முடிவு


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
ஹிட்லரின் இளமைக்காலம்

இரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும் அதன் மூலம் 20 கோடி பேருக்கு மேல் மரணமடைவதற்கும் காரணமாக இருந்த ஜேர்மனிய சர்வதிகாரி ஹிட்லரின் வாழ்க்கை பல திருப்பங்களும் திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்ததாகும்.

வட ஆஸ்திரியாவில்(Braunau am Inn) உள்ள பிரானோ என்ற ஊரில் 1889 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி பிறந்தார்.இவருடைய தந்தையின் பெயர் அலாயிஸ் சிக்கில் கிராப்பர் ஹிட்லர்(Alois Hitler ).இவர் சுங்க திணைக்களத்தின் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். அவரின் மூன்றாவது மனைவியின் நான்காவது மகன் ஹிட்லர். 

பிறந்தது முதலே ஹிட்லர் நோயுற்றவராக இருந்தார்.அடிக்கடி காய்ச்சல் வரும். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தான் உடம்பு தேறியது.

ஹிட்லருக்கு தாயிடம் செல்லம் அதிகம்.தாய் மீது மிகுந்த பக்தியும் பாசமும் கொண்டவர்.பாடசாலையில் படிக்கும் போது ஹிட்லர் தான் வகுப்பின் முதல் மாணவன். பிறகு அவருக்கு படிப்பில் ஆர்வம் குறைந்தது.படம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது.விரைவிலே அழகான ஓவியங்கள் வரையும் ஆற்றலை பெற்றார்.மாணவப்பருவத்திலேயே நிறைய நாவல்கள் படித்தார். போர்கள் பற்றிய கதைகள் என்றால் நாட்டம் அதிகம்.

1903 இல் ஹிட்லரின் தந்தை இறந்தார். தந்தையின் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்த ஹிட்லர் நாளுக்கு நாள் முரடனாக மாறினான் . மாணவர்,ஆசிரியருடன் சண்டை பிடிப்பார்.தனது 17 ஆவது வயதில் கல்லூரி இறுதி தேர்வில் தேறினார் ஹிட்லர்.அதற்காக கொடுத்த சான்றிதழை வாங்கிக்கொண்டு வரும் வழியில் நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தினார்.சான்றிதழையும் கிழித்து எறிந்தார்.

1907 ஆம் ஆண்டில் ஓவியக்கல்லூரியில் சேர முயன்றார்,அதில் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.அந்த ஆண்டின் இறுதியில் ஹிட்லரின் தாயார் இறந்துபோனார்.அதன் பின்பு ஓவியங்களை தயாரித்து வாழ்க்கை நடத்தினார்.இரவில் கூட மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் கூட ஓவியங்களை வரைவார்.

இவர் வரைந்த ஓவியங்கள் நல்ல விலைக்கு விற்பனையாகின.அதனால் சொந்தமாக ஓவியக்கூடம் அமைத்தார்.இச் சமயத்தில் சிந்தியா என்ற பெண்ணை ஹிட்லர் காதலித்தார்.காதல் தோல்வியடையவே இராணுவத்தில் சேர்ந்தார்.முதலாம் உலகப்போரின் போது ஜேர்மனி இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்.

ஹிட்லரின் இராணுவப் பிரவேசமும், வெற்றியும்

1918 இல் ஜேர்மனி தோற்றது.இத் தோல்விக்கு ஜனநாயகவாதிகளும் யூதர்களும் தான் காரணம் என்று ஹிடலர் நினைத்தார்.உலகில் ஜெர்மானியரே உயர்ந்த இனத்தவர்.உலகம் முழுவதையும் ஜேர்மனிய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என விரும்பினார்.ஹிட்லர் பேச்சு வல்லமை மிக்கவர்.தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் ஒரு உறுப்பினராக சேர்ந்து தனது பேச்சு வல்லமையால் விரைவிலே கட்சித் தலைவரானார்.

அரசாங்கத்தின் நிர்வாக திறமை இன்மையால் தான் நாட்டில் வறுமை வேலையின்மை பெருகிவிட்டதாக பிரச்சாரம் செய்தார்.அரசாங்கத்துக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு ஆட்சியை கைப்பற்ற முயன்றார்.ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

அரசாங்கம் அவரை கைது செய்து 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.பின்பு அது ஓராண்டு தண்டனையாக குறைக்கப்பட்டது.சிறையிலிருந்த போது "எனது போராட்டம்"என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதினார்.

1928 இல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வியடைந்தது.ஆனால் ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை.தன்னுடைய கட்சியின் பெயரை "நாசி"கட்சி என்று மாற்றி நாடுமுழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார்.

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தார்.
இவருடைய இடைவிடாத உழைப்பும் பேச்சுத் திறனும் இராஜ தந்திரமும் வெற்றி பெற்றன.ஆட்சிக்கு எதிராக மக்ககள் கிளர்ந்தெழுந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாராளுமன்ற கட்டடம் கொளுத்தப்பட்டது.ஜனாதிபதியாக இருந்த ஹில்டன் பேர்க் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்தார்.1933 ஜனவரி 30 ஆம் திகதி ஹிட்லரை பிரதமராக நியமித்தார்.பிரதமராக இவர் பதவி ஏற்ற ஒன்றரை வருடத்தில் ஜனாதிபதி ஹில்டன் பேர்க் மரணமடைந்தார்.

அதனால் ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக்கொண்டு ஜேர்மனின் சர்வாதிகாரியானார்.பாராளுமன்றத்தை கலைத்தார்,இராணுவ திணைக்களத்தினையும்,இராணுவ தளபதி பதவியினையும் தானே ஏற்றுக்கொண்டார்.அரசியல் கட்சிகள் எல்லாவற்றையும் தடை செய்தார்.இனிமேல் ஜெர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அறிவித்தார்.

யூதர்களை அடியோடு அழிக்க வேண்டும் என முடிவு செய்து ஒரு பாவமும் அறியாத யூதர்களை கைது செய்து சிறையில் பட்டினி போட்டு சித்திரவதை செய்து கொன்றான்.தினமும் சராசரியாக 6000 - 10000 பேர் வரை விஷப் புகையிட்டு கொல்லப்பட்டனர்.

ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் ஐம்பது லட்சம் ஆகும்.1939 அல்பேனியா,செக்கொச்லோவக்கியா ஆகிய நாடுகளை கைப்பற்றிக்கொண்டு போலந்து நாட்டின் மீது படைஎடுத்தான்.

இதனால் இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பமாகியது.யுத்தத்தின் ஆரம்பத்தில் ஹிட்லரின் கை ஓங்கியிருந்தது.ஆனால் போரில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்த பின்பு நிலைமை மாறியது.ஜேர்மனி தலைநகரான பெர்லினில் ஒரு சுரங்கம் அமைத்து தங்கியிருந்தார்.இச் சுரங்கத்தில் தான் ஹிட்லரின் அலுவலகமும் படுக்கை அறையும் இருந்தது.

ஹிட்லரின் அறை 15 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டது.1945 ஏப்ரலின் பின் பெர்லின் நகரின் மீது ரஷ்ய விமானங்கள் குண்டுகளை வீசின.ஹிட்லர் தங்கியிருந்த பாதாள சுரங்கத்தின் அருகிலும் குண்டுகள் விழுந்தன.ஈவா பிரவுன் என்ற பெண் 1930 ஆம் ஆண்டு முதல் ஹிட்லர் உடைய மனம் கவர்ந்த காதலியாக இருந்து வந்தார்.

ஹிட்லரின் மரண சாசனம்

ஹிட்லர் இறப்பதுக்கு முன் எழுதிய மரண சாசனத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

நாங்கள் இறந்த பிறகு எந்த ஜெர்மன் நாட்டு மண்ணுக்காக கடந்த 12 வருடங்களாக பாடுபட்டு வந்தேனோ இந்த ஜெர்மன் மண்ணிலேயே என்னையும் ஈவாவையும் உடனே எரித்து விட வேண்டும்.
என் சொத்துக்கள் எல்லாம் எனக்கு பிறகு என் கட்சிக்கு சேர வேண்டும்.கட்சி அழிந்து விட்டால் நாட்டுக்கு சேர வேண்டும்.

ஜெர்மனி மண்ணின் மீதும், மக்கள் மீதும் நான் கொண்ட பற்றும் பாசமும்தான் என்னை வழிநடத்தின .கடந்த 30 ஆண்டுகளாக என் சக்தி முழுவதையும் என் தாய் நாட்டின் மேன்மைக்காக செலவிட்டிருக்கிறேன் .

இந்தப் போருக்கு நானே மூலகாரணம் என்று யாரும் நினைக்க வேண்டாம்.ஏனென்றால் போர் வெறி கூடாது .ஆயுதக்குறைப்பு செய்ய வேண்டும்,என்று நானே வலிறுத்தி இருக்கிறேன்.
முதல் உலகப்போருக்கு பிறகு இப்படி இரண்டாவது உலகப்போர் மூளும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை .எப்படியோ போர் மூண்டுவிட்டது.

இந்தப்போரினால் நம் நாடு சந்தித்த பயங்கர விளைவுகள்,நாசமாக்கப்பட பிரம்மாண்டமான மாளிகைகள்,தரைமட்டமாக்கப்பட்ட கலையம்சம் மிக்க நினைவுச்சின்னங்கள் யாவும் நம் மீது உலக நாடுகள் நடத்திய கோரத்தாக்குதலை நம்முடைய பிற்கால சந்ததியினருக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும்.

இந்த போருக்கு காரணமானவர்களை பார்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு ஜேர்மனிய இளைஞனுக்கும் உணர்ச்சியும் எழுச்சியும் ஏற்ப்படும்.

இவ்வாறு இறுதிச் சாசனம் எழுதி கையெழுத்திட்டார் ஹிட்லர்.
30 ஆம் திகதி இரவு 9 மணி "இன்று மாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வதிகாரி முசோலினியும் அவரது மனைவியும் எதிர்ப்பாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர் ".என்று சுவீடன் நாட்டு ரேடியோ அறிவித்தது.

ரேடியோ செய்தியை ஹிட்லர் நேரடியாக கேட்டார் .முசோலினியின் முடிவு,ஹிட்லருக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது .அன்றிரவு 12 மணி பெர்லின் நகரம் முற்றிலுமாக ரஷியப்படைகள் வசமாகிவிட்டது என்றும் எந்த நேரத்திலும் ,சுரங்க மாளிகை தகர்க்கப்படலாம் என்றும் ,ஹிட்லருக்கு தகவல் கிடைத்தது.

ஹிட்லரின் முகம் இருண்டது .மவுனமாக எழுந்து ,தன் தோழர்களுடன் கை குலுக்கினார் .பிறகு தன் அந்தரங்க உதவியாளரை அழைத்து ,"நானும் ஈவாவும் ஒன்றாக இறந்துவிடப்போகிறோம்.நாங்கள் இறந்த பின் எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி ,பெட்ரோல் ஊற்றி எரித்து சாம்பலாக்கி விடுங்கள்.எங்கள் அறையில் உள்ள கடிதங்கள்,டைரிகள்,என் உடைகள் என் பேனா,கண்ணாடி முதலிய பொருட்களை சேகரித்து ,ஒன்று விடாமல் எரித்து விடுங்கள்"என்று கூறிவிட்டு தன் மனைவியையும் அழைத்து கொண்டு தன் அறைக்கு சென்றார்.

அறைக்கதவு சாத்தப்பட்டது .வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.ஹிட்லரும் ,ஈவாவும் என்ன ஆனார்கள் என்று வெளியே இருந்தவர்களுக்கு தெரியவில்லை. வெளியே நீண்ட நேரம் காத்திருந்த மந்திரிகளும் ,தளபதிகளும் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றனர் .

அங்கே அவர்கள் கண்ட காட்சி ஒரு சோபாவில் உட்காந்திருந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல் . அவர் காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது.அவர் சற்றுநேரத்துக்கு முன்னர் தன்னைத்தானே சுட்டுக் கொன்றதால் துப்பாக்கி நுனியில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது.அவரின் வலது காதுக்கு கீழிருந்து இரத்தம் கொட்டிக்கொண்டுஇருந்தது.ஹிட்லரின் வலது கரம ஒரு புகைப்படத்தை மார்போடு அணைத்தபடி இருந்தது.அது ஹிட்லரின் தாயாரின் புகைப்படம்.

அவருடைய மனைவி ஈவா வெள்ளைப்புள்ளிகளோடு கூடிய கருநீல மாக்சி உடை அணிந்து இருந்தால்.அவள் உடல் நீலம் பாய்ந்திருந்தது.எனவே அவள் சைனட் விஷம் சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது.இருவரது உடலையும் உதவியாளர்கள் ஒரு கம்பளிப்போர்வையில் சுற்றினார்கள்.பின்னர் அந்த உடல்களை தலைமைச் செயலகத் தோட்டத்திற்கு தூக்கிகொண்டு போய் எரித்தார்கள்.

சிலமணி நேரம் அங்கு வந்த ரஷ்ய படைகள் ஹிட்லரை காணாமல் திகைத்து போனார்கள்.ஹிட்லர் ஈவு இரக்கம் அற்ற கொடியவராக இருந்தாலும் சில நல்ல குணங்களும் இருந்தன.ஹிட்லர் குழந்தைகளிடமும் மிருகங்களிடமும் அன்பு கொண்டவர்.மாமிசம் சாப்பிடமாட்டார்.புகை பிடிக்கமாட்டார்.

 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக