இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..இப்பொழுதே இணைந்துகொள்
நீராவி இயந்திரத்தை கண்டு
பிடித்து தொழில் புரட்சி செய்த ஜேம்ஸ் வாட் சிந்தனைகளுடன்..
01. நீராவி இயந்திரத்தைக் கண்டு
பிடித்த ஜேம்ஸ்வாட் குடும்பம் வசதியால் உயர்ந்த செல்வந்தக் குடும்பம். ஆனால்
அந்தக் குடும்பம் உலகத்தில் சிறந்த செல்வம் கல்விதான் என்று நம்பியது, அந்தக்
குடும்பத்தில் இருந்து தான் ஜேம்ஸ்வாட் உருவானார்.
02. பெற்றோர் கல்வியே செல்வம்
என்று கருதிய காரணத்தால் அவர்கள் மகன் ஜேம்ஸ்வாட் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய
வேண்டுமென அல்லும் பகலும் பாடுபட்டார்.
03. பாடசாலைக் கல்வியையும், அதை
மலர்ச்சியற்று வைத்திருக்கும் ஆசிரியர்களையும் வெறுத்து பாடசாலைக்கு போகாமலே
படித்து சாதித்த இளைஞனே ஜேம்ஸ்வாட், மின்சாரத்தை வாட் என்று அளக்கிறோமே அந்தப்
பெயர் இவருடையது தான் இவரை மரியாதைப்படுத்தவே இவருடைய பெயரின் பிற்பகுதியில் உள்ள
வாட் என்பதை மின்சார அளவுக்கு பெயராக்கினர்.
04. ஜேம்ஸ்வாட் ஒரு புத்தகப்புழு,
இயற்கையை ரசித்தல், புத்தகம் படித்தல் என்பன அவருடைய பொழுதுபோக்கு. எந்தப்
புத்தகத்தைப் படித்தாலும், எந்த நண்பனுடன் பேசினாலும் அதிலிருந்து ஒரு செய்தியை
எடுக்க நான் தவறமாட்டேன் என்றார்.
05. திறமை கொண்ட மனிதனுக்கு
தோல்விகள் தொடரலாம், வெற்றிகள் தாமதமாகலாம் ஆனால் வெற்றி கிடைப்பது உறுதி என்பது
இவரது கருத்து.
06. ஒரு லீட்டர் தண்ணீரைக்
கொதிக்க வைத்தால் அது 1600 லீட்டர் ஆவியாக மாறும், அதை அடைக்க பாத்திரத்தில்
இடமிருக்காது, ஆகவேதான் ஆவியை அழுத்தமாக்கி இயந்திரங்களை இயங்க வைத்தார் ரயில்
வண்டி, கப்பல்கள் இதனால் ஓட ஆரம்பித்தன. இதுவே நீராவியில் எனப்படும்.
07. ஒரு குதிரை, 150 பவுண்டு
நிலக்கரியை ஒரு நிமிடத்தில் 220 அடி உயரம் எடுத்துச் செல்ல முடியும் என்று வாட்
கணக்கிட்டார். அதையொட்டி, ஆற்றலை அளவிடும் அலகுக்கு `ஹார்ஸ் பவர்' என்று பெயர்
வந்தது. ஒரு ஹார்ஸ் பவர்' என்பது 745.7 வாட்'களுக்கு சமமாகும்.
08. புதிய தத்துவம் கண்டு பிடிக்க
அறிவு வேண்டும், தெள்ளத் தெளிவான சிந்தனை ஓட்டம் வேண்டும். ஜெயிக்கிற வெறி
வேண்டும், கடுமையான உழைப்பும் வேண்டும். தோல்விகள் வரும் அப்போது துவளாத மனதும்
வேண்டும் என்பது தான் இவரது அடிப்படை கருத்து.
9. விஞ்ஞானிகள், எழுத்தாளர்,
தத்துவ மேதைகளை வாழும் போது உலகம் கண்டு கொள்ளாது. ஆனால் வாழும்போதே வெற்றியையும்
பாராட்டுக்களையும் கண்ணால் கண்டு சாதனை படைத்தவர் ஜேம்ஸ்வாட்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக