இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
பெரிய நகரங்களில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வண்ண
விளக்குகள் பொருத்தப்பட்ட கம்பத்தை அல்லது அமைப்பைக் கண்டிருக்கிறோம்.
இவ்விளக்குகள் 3 வண்ணங்களில் அமைந்திருக்கும். அவை முறையே பச்சை, மஞ்சள் மற்றும்
சிகப்பு ஆகியன.
ஜே.பி.நைட் என்பவர் லண்டன் மாநகரில் 1868 ஆம்
ஆண்டு இப்போக்குவரத்து விளக்குகளைக் கண்டு பிடித்தார். மக்கள் நெரிசல் மிகுந்த
சாலைகளில் இவ்விளக்குகள் நிறுவப்பட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்நாளில்
தானியங்கிப் போக்குவரத்து வாகனங்கள் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கவில்லை. குதிரையை
அல்லது குதிரை பூட்டிய வண்டிகளை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
பச்சை, சிகப்பு ஆகிய இரு வண்ணங்கள் மட்டுமே
அப்போது பயன்படுத்தப்பட்டு வந்தன. உருளையில் நிரப்பப்பட்ட வாயுவினால் தான்
அவ்விளக்குகள் எரிந்து வந்தன; இவ்வமைப்பு அப்போது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை
என்றுதான் கூறவேண்டும்.
அமெரிக்காவின் மிக்சிகன் நகரில் வாகனப் போக்குவரத்து
நெரிசல் மிக அதிகமாகி கட்டுப்படுத்த முடியாமல் போன நிலையில், காவல் துறையைச்
சார்ந்த வில்லியம் பாட்ஸ் என்பவர் இரயில்வே சமிக்கைகளின் அடிப்படையில்
போக்குவரத்து விளக்குகளை அமைக்க முயற்சி செய்தார். பச்சை, சிகப்பு, காவி பூசிய
மஞ்சள் ஆகிய நிறங்களுடன் கூடிய விளக்குகளை நிறுவி இவர் தமது முயற்சியில் 1920ஆம்
ஆண்டு வெற்றி பெற்றார்.
இப்போக்குவரத்து விளக்குகளில் சிகப்பு விளக்கு
“நிறுத்துக”, மஞ்சள் விளக்கு “ஆயத்தமாகுக”, பச்சை விளக்கு “செல்க” என்னும்
பொருளில் பயன்படுத்தப்பட்டன. பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் 1923ஆம் ஆண்டு
போக்குவரத்து விளக்குகள் நிறுவப்பட்டன. முதலாவது தானியங்கிப் போக்குவரத்து விளக்கு
1927ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நிறுவப்பட்டது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக