இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
அட நெஜமாவா சொல்றீங்க ! நம்பவே
முடியல என வியக்க வைக்கின்றன சில விஷயங்கள். நாம் நிஜமென நம்பிய விஷயங்கள் பொய்
என்பது தெரிந்தால் நமக்குள் எழும் வியப்பு சுவாரஸ்யமானது. அப்படி ஒரு பத்து
விஷயங்கள் இந்த வாரம்.
1.
விண்வெளியில் மனிதர்கள் துள்ளுவார்கள்.
ஆமா, விண்வெளியில் மக்கள்
துள்ளித் துள்ளிப் போவார்கள் என்று தானே நினைக்கிறீர்கள் ? ஹாலிவுட்
திரைப்படங்கள் உருவாக்கிய மாயை அது. அவர்களுடைய திரைப்படங்களில் விண்வெளியில்
குதித்த உடன் வீரர்கள் துள்ளித் துள்ளிப் போவதுண்டு. இதனால் வெற்றிடங்களில்
மனிதர்கள் துள்ளுவார்கள் எனும் ஒரு தவறான அபிப்பிராயம் பரவிவிட்டது. அது நிஜமல்ல.
அது போல, விண்வெளியில் ஒரு
மனிதன் பதினைந்து முதல் முப்பது வினாடிகள் வரை எந்த உபகரணமும் இல்லாமல் தாக்குப்
பிடிக்க முடியும். அதன்பின் ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால் வரும் “ஆஸ்பைசியேஷன்”
நிலையினால் உயிருக்கு ஆபத்து நேரிடும்.
இனிமேல் காற்றில்லா இடத்தில்
பந்து போல வீரர்கள் துள்ளினால் அது பொய் என்று புரிந்து கொள்ளுங்கள்.
2.
நிலவுக்கு ஒரு பக்கம் இருட்டு
3.
எப்போ பாத்தாலும் பூமியில்
இருந்து நிலவோட ஒரு பகுதி மட்டும் தான் தெரியுது. எனவே நிலவோட இன்னொரு பகுதி
இருட்டு எனும் ஒரு தவறான சிந்தனை பரவலாக உண்டு. பாட்டி வடை சுட்டுக் கொண்டிருப்பது
வெளிச்சத்தின் பக்கம். மற்ற பக்கம் இருட்டு. இது தான் அடிக்கடி கேட்கும் விஷயம்.
அது உண்மையல்ல.
பூமியின் ஈர்ப்பு விசையின்
காரணமாகத் தான் நிலா தன்னுடைய ஒரு பக்கத்தை மட்டும் நமக்குக் காட்டுகிறது. இதை
டைடல் லாக்கிங் என்பார்கள்.
இனிமேல் நிலவின் முதுகுப் பக்கம்
இருட்டு என யாராவது கதை விட்டால் நம்பாதீர்கள்.
3.
ஒரே இடத்தில் மின்னல் மீண்டும் தாக்காது
பலர் இந்த டயலாக்கை அடிக்கடி
சொல்வார்கள். ஒருவாட்டி இடி விழுந்த இடத்தில் மறுபடி விழாது. இந்த பேச்சு எப்படி
உருவானது என்பதே தெரியாது. ஆனால் இதை நம்பி மின்னல் காலத்தில் ஏற்கனவே மின்னல்
தாக்கிய இடத்தில் ஒதுங்காதீர்கள். மறுபடியும் இடி விழும் சாத்தியம் அங்கே தான்
அதிகம்.
உயரமான கட்டிடங்கள், மரங்கள்
போன்றவையெல்லாம் மின்னலை வரவேற்கும் இடங்கள். ஒருமுறையோடு அவை நின்று போவதில்லை.
போனமுறை அங்க போயிட்டேன், இந்த வாட்டி அங்கே போகவேண்டாம் என மின்னல்கள் பேசி
முடிவு செய்வதில்லை.
உதாரணமாக அமெரிக்காவின் எம்பயர்
ஸ்டேட் பில்டிங் ஒரு ஆண்டுக்கு சராசரியாக இருபத்தைந்து முறை மின்னல் தாக்குகிறது.
ஆனால் அதில் பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதால் கட்டிடத்துக்கு ஆபத்து நேர்வதில்லை.
4.
சீனி சாப்பிட்டால் குழந்தைகள் சுறுசுறுப்பாகும்.
5.
இந்த ஒரு மாயை எல்லா இடங்களிலும்
உண்டு. எல்லா நாடுகளிலும் உண்டு. இது உண்மையா என ஆராய அமெரிக்க ஆய்வாளர்கள் கேரல்
என்பவர் தலைமையில் நீண்ட நெடிய ஆய்வுகள் பல மேற்கொண்டார்கள். “அப்படியெல்லாம்
ஒண்ணும் இல்லையே” என அடித்துச் சொல்லிச் சென்றன ஆய்வு முடிவுகள்.
ஆனாலும் பெற்றோர்களால் அதை நம்ப
முடியவில்லை. சுகர் சாப்டா ரொம்ப ஆக்டிவா இருக்கான் என நினைத்துக் கொள்கின்றனர்.
எல்லாம் மாயையே.
சோர்வா இருக்கு கொஞ்சம்
எக்ஸ்ட்ரா சீனி போட்டு காபி குடிப்போம் என இனிமேல் நினைக்காதீர்கள்.
5.
புலன்கள் ஐந்து
6.
கண்டு, கேட்டு, உணர்ந்து,
முகர்ந்து, சுவைக்கும் ஐம்புலன்களே நமக்கு உண்டு என்பது தான் நாம் பொதுவாக படித்த
சங்கதி. உண்மையில் நமக்கு இருப்பவை ஐம்புலன்கள் அல்ல என்கின்றன பல்வேறு ஆய்வுகள்.
சில ஆய்வுகள் புலன்கள் இருபத்து
ஒன்று என்கின்றன. சமநிலை, வெப்பம், வலி போன்றவையெல்லாம் பெரும்பாலான ஆய்வுகளில்
இடம்பெறும் புலன்கள். இவையெல்லாம் ஐம்புலன்களைப் போல தனித்துவமானவை என்பதை அந்த
ஆய்வுகள் பக்கம் பக்கமாய் விளக்குகின்றன.
இவைதவிர கற்பனை, நினைவு,
பகுத்தறிவு மற்றும் மதிப்பிடுதல் போன்றவற்றை இன்டர்னல் சென்ஸ்கள் அதாவது
உட்புலன்கள் என்கின்றனர். அவற்றையும் புலன்களின் வகையில் தான் சேர்க்க வேண்டும்
என்பது அவர்களுடைய கோரிக்கை.
6.
வானவில்லுக்கு ஏழு நிறம்
7.
வானவில்லின் நிறங்கள் எத்தனை
என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட ஏழு என்று தன் மழலை வாயால் சொல்லும். அந்த ஏழு
வர்ணங்களை நினைவில் வைத்துக் கொள்ள “Roy G. Biv” உசெட் என்றொரு பெயரை பள்ளிக்
கூடங்களில் சொல்லித் தருவார்கள். சிவப்பு ஆரஞ்ச் மஞ்சள் பச்சை நீலம் இன்டிகோ,
வயலட் எனும் ஏழு நிறங்களையும் அது குறிக்கும்.
உண்மையில் வானவில் என்பது ஒரு
நிறப் பூச்சு.
மனிதனுடைய கண்கள் தான்
அடுக்கடுக்கான நிற வரிசையாய் அதைக் காட்டுகிறது.
ஏழுக்கு மேற்பட்ட நிறங்களை உடைய
வானவில்கள் உண்டு. அவற்றை நியூமரி என்று பெயரிட்டு அழைக்கின்றனர். ஒரே வர்ணம்
ஒன்றுக்கு மேற்பட்ட தடவை வானவில்லில் தெரிவதும் உண்டு.
எனவே இனிமேல் வானவில்லின்
நிறங்கள் எத்தனை என யாரேனும் கேட்டால், “ஏழாகவும் இருக்கலாம்” என்றே சொல்லிக்
கொள்ளுங்கள்.
7.
மின்விளக்கை கண்டுபிடித்தவர்
இந்த கேள்விக்கு விடை தாமஸ்
ஆல்வா எடிசன் என்பதைத் தான் நமது பள்ளிக்கூடங்கள் சொல்லித் தருகின்றன. ஆனால் அது
தவறு என்பது வியப்பான செய்தி. தாமஸ் ஆல்வா எடிசன் மின்விளக்கை வெற்றிகரமாய்
கண்டுபிடித்து தனது பெயரை வரலாற்றில் பதித்து வைத்தது 1880ம் ஆண்டு. ஆனால் அதற்கும்
40 ஆண்டுகளுக்கு முன்பே மின்விளக்கை ஒருவர் கண்டுபிடித்து விட்டார். அவர் பெயர்
வாரன் டி லே ரு.
பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானியான
இவர் பிளாட்டினம் சுருளை ஒரு வெற்றிடக் குழாயில் வைத்து மின்சாரத்தை அதில் பாயச்
செய்தார். பளிச் என எரிந்தது மின் விளக்கு !பிளாட்டினம் அதிக வெப்பத்தைத் தாங்கும்
என்பதால் இதைப் பயன்படுத்தினார். ஆனால் அதன் தாக்குப் பிடிக்க முடியாத விலை இந்த
விளக்கை பிரபலமில்லாமல் செய்துவிட்டது.
தாமஸ் ஆல்வா எடிசன் பெயர்
வாங்கிப் போய்விட்டார். இதே போல பல்வேறு கண்டுபிடிப்புகளை எடிசன்
உள்வாங்கியும், அடியொற்றியும் தான் தனது கண்டுபிடிப்புகளை செய்தார் என பல
அறிவியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
8 ரோமும் நீரோ மன்னனும்
ரோம் பற்றி எரிந்து கொண்டிருந்த
போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார். எனும் வாக்கியத்தைக்
கேட்காதவர்கள் இருக்க முடியாது. ஆனால் அது உண்மையா எனும் கேள்வி வலுவாக எழுகிறது.
கிபி 64ம் ஆண்டு ஜூலை மாதம் 18,
19 தியதிகளில் தான் ரோமாபுரி பற்றி எரிந்த அந்த நிகழ்வு நடந்தது. அப்போது நீரோ
மன்னன் ஒரு பாடல் பாடிக்கொண்டிருந்தார் என ஸ்வெட்டானிஸ் எனும் வரலாற்று ஆய்வாளர்
கொளுத்திப் போட்ட திரி தான் இந்த செய்தி பற்றிப் படரக் காரணம்.
ஆனால் கொர்னேலியஸ் டாகிடஸ் எனும்
வரலாற்று ஆய்வாளர் அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவர். கவர்னராகவும்,
கவுன்சிலராகவும், செனட்டராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் மிளிர்ந்தவர். “ரோம்
பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்தார்” என்பது மாபெரும்
புரளி என்கிறார் அவர்.
டாகிடஸின் குறிப்புகளின் படி
நீரோ மன்னன் அந்த நிகழ்வின் போது அதிர்ந்து போய் நிவாரண விஷயங்களை மிகத் துரிதமாக
மேற்கொண்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுகளை அளித்தார், தங்குமிடங்களை
உருவாக்கி மக்களுக்கு உதவினார். தனது சொந்தப் பணத்தையே கொடுத்து மக்களுக்கு உதவினார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பிடில்
எனும் இசைக்கருவியின் வரவே பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் என்கிறது வரலாறு !
இனிமே நீரோ மன்னன் கதையை கொஞ்சம் கவனமா தான் பயன்படுத்தணும் போல !
9 வான்கோ தனது காதைத் தானே வெட்டினார்
வான்கோ தனது காதை தானே
வெட்டினார். வெட்டிய காதை அப்படியே தனது காதலிக்கு பார்சல் பண்ணினார் என ஒரு கதை
உண்டு. ஆனால் உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை.
உண்மையில் நடந்த கதை வேறு.
வான்கோவுக்கும் அவரது நண்பர் பால் காகுயின் என்பவருக்கும் இடையே ஒரு சண்டை. வான்கோ
கோபத்தினால் ஒரு வைன் கோப்பையை நண்பன் மீது எறிந்தார். நண்பர் தன்னிடமிருந்த வாளை
எடுத்து ஒரே சீவு. வான்கோவின் காது கீழே தெறித்தது. இந்த நிகழ்வுகளெல்லாம்
வான்கோவின் கடிதங்களிலிருந்து கிடைத்ததாக வரலாற்று ஆய்வாளர் ஹான்ஸ் ஹாஃப்மேன்
தெரிவிக்கிறார்.
10 ஏரோப்ளேன்ல போன் பேசினா ஆபத்து
ஏரோப்ளேனில் போகும்போது தவறாமல்
கேட்கும் ஒரு அறிவிப்பு ” போனை சுவிட்ச் ஆஃப் பண்ணுங்க’ என்பது தான். விமானத்தில்
பயணிக்கும் போது போனில் பேசினால் சிக்னல்கள் பின்னிப் பிணைந்து விமானம்
விபத்துக்குள்ளாகும் எனும் அச்சம் பொதுவாகவே உண்டு.
ஆனால் அது உண்மையல்ல. ஃபெடரல்
ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் கடந்த கால்நூற்றாண்டு காலமாக விமானத்திலுள்ள அனைவரும்
போனை பயன்படுத்தினால் வரும் ரேடியோ பிரீக்வன்சியை விட 100 மடங்கு அதிக வலிமையான
அலைகளைக் கொண்டு சோதித்து வருகின்றனர். ஒரு சின்ன சிக்கல் கூட இன்று வரை
உருவாகவில்லை. உருவாகப் போவதும் இல்லை.
விமானத்தில் வருகின்ற
அறிவிப்புகளைக் கேட்கவும், விமானப் பணியாளர்களின் பணி இடைஞ்சல் வராமல் இருக்கவும்,
பக்கத்து பயணிகளின் அசௌகரியத்தைத் தவிர்க்கவும் இத்தகைய விதிமுறைகளை விமானங்கள்
வைத்திருக்கின்றன என்பது தான் உண்மை.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக