Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 24 ஏப்ரல், 2019

திணை கட்லெட்



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்





தேவையானவை:

  • கம்பு அல்லது சோளம் அல்லது ஏதேனும் ஒரு வகை திணை – வேகவைத்தது இரண்டரை கப்
  • கோதுமை பிரட் – 2 ஸ்லைஸ்
  • வெங்காயம் – ஒன்று
  • பச்சை மிளகாய் – 2
  • பச்சை பட்டாணி – 1 கப்
  • முட்டை – இரண்டு
  • கோதுமை மாவு – கால் கப்
  • உப்பு – ருசிக்கேற்ப
  • எண்ணெய் – தேவைக்கேற்ப


எப்படி செய்வது?

கம்பை, வழக்கமாக அரிசியை சமைப்பது போலவே ஊறவைத்து சமைக்கலாம். தண்ணீரை வடிக்கவும் செய்யலாம். அல்லது மிதமான தண்ணீர் வைத்து குக்கரிலும் வேகவைக்கலாம். வேகவைத்த கம்பை ஆற விடுங்கள்.
கோதுமை பிரட் துண்டுகளை வெறும் வாணலியில் மிதமான தீயில் டோஸ்ட் செய்து, மிக்ஸியில் பொடித்துக்கொள்ளுங்கள்.
வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

ஒரு அகலமான பாத்திரத்தில் வேகவைத்த கம்பு, பொடித்த பிரட் துகள்கள், நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், பச்சை பட்டாணி (வேக வைக்க தேவையில்லை), முட்டை சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். 

கலவையை கெட்டியாக்க போதுமான அளவுக்கு கோதுமை மாவு சேருங்கள்.எல்லா மாவையும் சேர்க்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை.

கலந்து வைத்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கி ஒரு வாழை இலையில் எண்ணெயைத் தடவி அதன் மேல் பரப்பி 30 நிமிடங்கள் பிரிட்ஜில் வைக்கவும். பிறகு அதை வெளியே எடுத்து சிறு சிறு வட்டங்களாகத் தட்டி தோசைக் கல்லில் போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும்.

 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக