Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 22 ஏப்ரல், 2019

மாமன்னன் இராஜராஜசோழனின் ஆளுமையுின்சிறப்பு.


  à®®à®¾à®®à®©à¯à®©à®©à¯ இராஜராஜசோழனின் க்கான பட முடிவு

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
தமிழ்இராஜதானியில் இந்தியாவின் பல பகுதிகளும் பல வெளிநாடுகளும் தஞ்சை தலைநகராக கொண்ட சோழநாட்டின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. மாமன்னன் இராஜராஜசோழன் பல குறுநில மன்னர்களையும் மற்றும் குடும்ப அங்கத்தினர்களையும் நியமித்து மக்கள் ஜீவாதாரபணிகள வேற்று வெறுப்பின்றி அனைத்து மக்களுக்காகவும்  நடைபெற்றுக் கொண்டிருந்தன. பாண்டிச்சேரி உட்பட விழுப்புரம, கடலூர்,  திருக்கோவிலூர், திண்டிவனம் போன்ற பல பகுதிகளின் விளைநிலம் சீர்செய்தல், ஏரிகுளம் வெட்டுதல், வாய்க்கால்கள் வெட்டுதல், ஊர்சீர்செய்தல், கோயில்கள் கட்டுதல் போன்ற வேலைகள் தாய் குந்தகை மேற்பார்வையில் நடைபெற்றுக்  ்கொண்டிருந்தது. தென்குமரி உட்பட பல பகுதிகளின் பணிகள் செந்தில் வல்லபன் என்ற தளபதியின் மேற்பார்வையில் ் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாமன்னன் இராஜராஜன் அனைத்து விவரங்களையும் தூதுவர்கள் மூலம் அன்றாடம் பெற்று ,ஆய்வுகள் செய்வார்.

  அன்று தஞ்சை விழாக்கோலம் பூண்டிருந்தது. நெசவாளர்கள், கல்தச்சர்கள் ,தளிசேரிபெண்கள், போர்வீரர்கள், படைத்தளபதிகள், ஒற்றர்கள், தையற்காரர்கள், கணக்கர்கள்,  இசைகலைஞர்கள், நாடககழுக்கள், ஓவியர்கள்,  மற்றும்பல தொழில் வல்லுனர்களும்,  நாணயம் உற்பத்தி என பலர் உழைத்துக்கொண்டிருந்தனர். வெளி ஊர்களிலிருந்து  தஞ்சைக்கு வந்தவர்கள் பெரிய கோயில் வேலைப்பாடுகளை பார்த்து வியந்து நின்றனர். 
  அபபடி இராஜராஜேஷ்வரத்திற்காக உழைக்கும் மக்களுக்கு இராஜராஜர் கைமாறு செய்யாமலா இருப்பார்? அவர்கள் எதிர்பாராமல் அவர்களின் பெயர்களை  சோழதேசம் இருக்கும்வரை மற்றும் இந்த உலகம் இருக்கும்வரை  நிலைத்திருக்கும்படி கோயிலுக்குள்ளேயே பொறித்து வைத்தார் மன்னர்.   

 அதிகாலைப் பொழுதில்  சக்கரவர்த்தி இராஜராஜன்  சிறுபடைசூழ வெள்ளை வேஷ்டி அணிந்து ஒற்றை ருத்திராட்சம அணிந்து், நெற்றியில் நீறு பூசி  மிடுக்குடன்  கோயிலுக்குள் நுழைந்தார். பெண்கள் நளினத்துடன் கூட வந்தனர். ஆடல்வல்லானை மனதில் நிறுத்தி அரசர் ஆனந்தம் கொண்டார்.
 மகன்  இஜேந்திரனும்,  வல்லவரையரும் இசைகலைஞர்களை தயார் செய்தனர்.  நாதசுர கலைஞர்கள், வீணை ஒலி,  தஞ்சை கணவாடி  வாஞ்சியம் எடுக்க,    மத்தளம், போர்களி தொண்டையன் மத்தளம்,  சோழவிடங்கன் உடுக்கை கொண்ட குழு தயாரானது.

  இராஜராஜன் கருவறையை நோக்கி கைகளை மேலே தூக்கி  தென்னாடுடைய சிவனே போற்றி,  எந்நாட்டவருக்கும் இறைவாபோற்றி என்ற சிம்ம கர்ச்சனையோடு ஈசனை வணங்க கூட்டம் ஆர்பரித்தது.  பின் நந்தியையும் வணங்கினார்.  கோயில் வாசல் மூடப்பட்டிருந்தது.

 ஒலிக்கட்டும் சங்கின் ஒலி என  வல்லவரையர் பிளிற   மாமன்னர் தன் இடக்காலை வலபக்கம் தூக்கி நிறுத்தி கண்களை இறுக மூடி ஆனந்த கூத்தாடினார்.  சோழதேசம் முழுவதும் கூத்தாடியதை போன்ற அற்புத உணர்வு.

 இவை நடந்துக் கொண்டிருக்கும் போது திடீரென மணி ஒலித்தது.  கேரளாந்தகன்  வாசலில் நின்றுக் கொண்டிருந்த காவல் வீரர்கள் மணி ஒலித்தவுடன்  கதவுகளை திறந்தனர். சிவபெருமானின் கருவறை கதவை திறக்க கதிரவனின் கதிர் வீச்சு இரு வாசல்கள் வழியே நந்தியை கடந்து இராஜராஜரின் நெற்றிப்பொட்டில் சுளீரென விழுந்தது.

  ஆனந்த தாண்டவத்தில் மிதந்திருந்த மன்னர் சட்டென கருவறை கதவுகள் திறந்ததை கண்டு  வியந்து திரும்பி பார்க்க, சூரிய ஔி பிரகதீஷ்வரனின் மேல் பட்டு ஜொலித்தது. அன்று ஈசன் சோழதேசத்திற்கு  குடி புகுந்தான்.

  சோழ இளவரசர் இராஜேந்திரன் மீண்டும் தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என கலங்கிய கண்களுடன் கர்ச்சித்து தரையில் அமர்ந்தார். சோழதேசத்தில் முதன்முறையாய் தச்சைபெரிய கோயிலில் பிரகதீஷ்வரன் காட்சி அளித்தார்.

 இது சோழதேசத்தற்கே ஒரு முக்கிய தருணமாக இருந்தது. அரசர் பெரும் தச்சர்களான நித்தவினோதரையும் குஞ்சரமல்லரையும் கட்டியணைத்தார். தஞ்சை பெரியகோயிலின் வேலை முழுவதும் நடப்பதற்கு முன் நடந்த ஒரு நிகழ்வு.
 சிலநாட்களில் பிரகதீஷ்வரனுக்கு கும்பாபிஷேக ஏற்பாடுகள் தொடங்கின.




என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக