Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 10 மே, 2019

பேக்கேஜ் சுற்றுலா செல்கிறீர்களா? – கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்


 பேக்கேஜ் சுற்றுலா க்கான பட முடிவு




இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்


ன்று திரும்பும் பக்கமெல்லாம் சுற்றுலா டிராவல் ஏஜென்சி நிறுவனங்கள் முளைத்திருக்கின்றன. அதனால், சரியான சுற்றுலா ஏஜென்சிகளை அணுகுவதில் மக்களுக்கு ஏராளமான குழப்பங்கள் இருக்கின்றன.  எனவே, அந்த நிறுவனங்களை அணுகும்போது நாம்  என்னென்ன விஷயங்களைக்
கவனிக்க வேண்டும் என்பதை விசிட்.காம் நிறுவனத்தின் சி.இ.ஓ என்.நாகேந்திரனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவார்.

“இன்றைய நிலையில், சுற்றுலா செல்லும் இடங்கள் குறித்த அனைத்து விவரங்களும்  கூகுளில் இருக்கும்போது, சுற்றுலா ஏஜென்சி களை மக்கள் அணுகக் காரணம், அவர்கள் மீது  வைத்திருக்கும் நம்பிக்கைதான். அதைக் காப்பாற்றும்படியாக சுற்றுலா ஏஜென்சிகள் நடந்துகொள்வது மிக மிக முக்கியம்” என அக்கறையுடன் பேச்சை ஆரம்பித்தார்.

1. ரசீதுகளில் ஜி.எஸ்.டி மற்றும் பான் விவரங்கள்
முதலில் நீங்கள் சுற்றுலா ஏஜென்சியை அணுகும்போது, அந்த நிறுவனத்தின் அலுவலகச் சூழல் எப்படி என்பதைக் கவனியுங்கள். ஏனெனில், இன்று பத்துக்கு பத்து அறையில்கூட ஓராயிரம் சுற்றுலா ஏஜென்சிகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஒரு சுற்றுலா ஏஜென்சி நிறுவனமாகத் தன்னைப் பதிவு செய்துகொண்டிருந்தால், ஜி.எஸ்.டி நம்பர் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதனால் நீங்கள் அணுகியிருக்கும் சுற்றுலா ஏஜென்சி தரும் ரசீதுகளில் ஜி.எஸ்.டி மற்றும் பான் விவரங்கள் இருக்கின்றனவா எனக் கவனியுங்கள். அந்த விவரங்கள் இல்லை யெனில், அதைக் கேட்டு வாங்குவது அவசியம். அந்த விவரங்களைத் தராத நிறுவனங்களை நாடாமலிருப்பது நல்லது. 

2. பட்ஜெட்டைக் கவனியுங்கள்
சுற்றுலா செல்லும்போது பார்க்க வேண்டிய விவரங்களைத்தான் சுற்றுலா ஏஜென்சிகள் எடுத்துச்சொல்லும். ஆனால், அது உங்களுடைய பட்ஜெட்டுக்குள் வருகிறதா என்பதை முதலில் கவனிக்க வேண்டும். மேலும், அவர்கள் பரிந்துரைக்கும் இடங்களின் பருவநிலை மாற்றம் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொள்வது முக்கியம். உங்களுடைய பயண எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் இடத்தை நீங்களே சொல்லி, அதற்கான பட்ஜெட்டை ஏஜென்டுகளிடம்  பெறலாம். அந்த இடங்களிலும் நுழைவுக் கட்டணம் ஏதும் உள்ளதா என்பது போன்ற அனைத்து விவரங் களையும் தெளிவுபடுத்திக்கொள்வது முக்கியம்.

3. வாடிக்கையாளர்களின் ரிவ்யூ
ஒரு சுற்றுலா ஏஜென்சியை அணுகும்போது, அந்த நிறுவனத்தின் சேவைகள் குறித்து  வாடிக்கை யாளர்கள் தெரிவித்திருக்கும் ரிவியூக்களை படிக்கத் தவறக்கூடாது. சில நிறுவனங்கள் வாடிக்கை யாளர்களின் ரிவ்யூக்களை தங்களின் வலைத்தளங்களில் பதிவிட மாட்டார்கள். அதுபோன்ற  நிறுவனங்களைத் தவிர்ப்பது நல்லது. 

4. சேவையின் தரம்
பெரும்பாலான சுற்றுலா நிறுவனங்கள் வாடிக்கையாளர் களின் சேவைக்காக, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் நபர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும்.  ஆனால், அவர்கள் எப்படிப்பட்ட சேவையை அளிப்பார்கள், அவர்கள் முறையாக அனுமதியை வாங்கி சேவையை வழங்குகிறார்களா, அவர்களுடைய சேவையின் தரம் எப்படிப்பட்டது என்பது உள்ளிட்ட  அனைத்து விவரங்களையும் சுற்றுலா ஏஜென்சிகளிடம் கேட்டுப்பெறுவது முக்கியம். 

5. அவசரகாலத் தேவைக்கான சேவை
சுற்றுலா செல்கிற இடங்களில் பொருள்கள் காணாமல் போகலாம், நகை திருடப்படலாம் அல்லது உடல்நலக் குறைவு ஏற்படலாம். இது மாதிரியான சமயங்களில் எப்போது வேண்டு மானாலும் அவசர கால உதவி தேவைப்படும்.  இதைப் பூர்த்தி செய்யும் வகையில் என்னென்ன ஏற்பாடுகளை சுற்றுலா ஏஜென்சி செய்துள்ளது  என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. வெளிநாடு சுற்றுலா என்றால், இந்த விஷயத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்வது அவசியம். 

6. தங்குமிடம் சார்ந்த விவரங்கள்
பெரும்பாலான சுற்றுலா ஏஜென்சிகள்  பேக்கேஜ்களுக்கு ஏற்றமாதிரி தங்குமிடங்களை முன்பதிவு செய்யும். ஆனால், அது ஷாப்பிங் ஏரியாக்களுக்கு அருகில் அல்லது நகரத்தின் மத்தியில் இருக்கும் என்று சொல்லமுடியாது. நகரத்துக்கு வெளியில் தங்குமிடத்தை ஏற்பாடு செய்திருந்தால், அதை மாற்றித்தரச் சொல்லிக் கேட்கலாம். அப்போதுதான் சுற்றுலா செல்லும் இடத்தின் அவ்வப்போதைய தேவையை எளிதாகப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். ஷாப்பிங் ஏரியாக்களுக்கு அருகில் தங்குமிடம் இருக்கும்போதுதான், ஷாப்பிங் செய்வதற்கும் வசதியாக இருக்கும். 

7. பேக்கேஜ் விவரங்கள்
சுற்றுலா ஏஜென்டுகள் பரிந்துரைக்கும் பேக்கேஜ்களின் முழுமையான விவரங்களைக் கேட்டு பெற்றுக்கொள்வது நல்லது. தங்குமிடம், போக்குவரத்து, சுற்றுலா சென்றிருக்கும் இடத்தில் சுற்றிப்பார்ப்பதற்கான வாகனச் செலவுகள், உணவுகள், சுற்றுலா தளங்களின் நுழைவுக் கட்டணங்கள் என அனைத்தும் அடங்கிய பேக்கேஜ்களைத் தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.
வெளிநாடுகளில் இந்தச் செலவுகள் எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஏஜென்டுகள் வழங்கும் கட்டண விவரங்களை ஒருமுறைக்கு இரண்டுமுறை பரிசோதித்துக்கொள்வது நல்லது. முடிந்தால், இரண்டுக்கு மேற்பட்ட சுற்றுலா ஏஜென்டுகளை அணுகி கட்டண விவரங்களை ஒப்பிட்டுப் பார்த்து, அதன்பிறகு முடிவெடுக்கலாம். கட்டணம் சற்று அதிகமாக இருந்தாலும், அவர்களின் சேவை நன்றாக இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம். 
 
8. டெய்லி பிளான் விவரங்கள்
சுற்றுலா ஏஜென்சி நிறுவனங்களின் மூலம் சுற்றுலா செல்லும்போது, ஒவ்வொரு தினத்திற்குமான திட்டத்தை நிறுவனங்களே தயாரித்து வழங்கிவிடும். அதை ஒருமுறைக்கு இரண்டுமுறை சரிபார்ப்பது நல்லது. அதில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், அதை ஏஜென்டுகளிடம் சொல்லி மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

9. இன்ஷூரன்ஸ் அவசியம்
டிராவல் இன்ஷூரன்ஸ் விஷயங்களில் பெரும்பாலானவர்கள் அக்கறை காட்டுவதில்லை. உள்நாடுகளில் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்தாலே, டிராவல் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது அவசியம் என்கிறபோது, வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும்போது இன்ஷூரன்ஸ் இல்லாமல் செல்வது கூடவே கூடாது. உங்களுக்கு மட்டுமல்லாமல், உங்கள் உடைமைகளுக்கும் சேர்த்து டிராவல் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது அவசியம்.  நீங்கள் தேர்வு செய்யும் டிராவல் பேக்கேஜில் சுற்றுலா இன்ஷூரன்ஸ் இல்லையென்றால், அந்த பேக்கேஜைத் தவிர்ப்பது நல்லது.

10. கேன்சல் விதிமுறைகள்
அடுத்ததாக மிக முக்கியமாக, கேன்சல் விதிமுறைகளைக் கவனிக்க வேண்டும்.பெரும்பாலான ஏஜென்சி நிறுவனங்கள் உள்நாடு சுற்றுலா மற்றும் வெளிநாடு சுற்றுலா எனத் தனித்தனியாக கேன்சல் விதிமுறைகளை வைத்திருக்கின்றன. ஏனெனில் உள்நாடு சுற்றுலா பேக்கேஜில், விசா வாங்குவது, பாஸ்போர்ட் நடவடிக்கைகள் என எதுவும் இருக்காது.
ஆனால், வெளிநாட்டுச் சுற்றுலாக்களில் இவையெல்லாம் இருக்கும். இதனால் கேன்சல் செய்யும்போது இதற்கான சேவை கட்டணங்கள் கழிப்பு வாடிக்கையாளர்களைத்தான் சேரும். மேலும், சுற்றுலாத் திட்டத்தை கேன்சல் செய்யும்போது, ஏற்படுகிற நடைமுறை சிக்கல்களுக்குப் பெரும்பாலான ஏஜென்சிகள் பொறுப்பேற்காது. அதனால், கேன்சல் விதிமுறை விவரங்களை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்வது அவசியம்.
 ன்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக