இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
கல்லூரி பட்டமளிப்பு விழாவில்
கலந்துகொள்ள வந்த விருந்தினர் ஒருவர் பட்டம் பெற்ற 400 மாணவர்களின் ரூ.278 கோடி
கல்விக் கடனையும் ஏற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின்
தலைநகரான அட்லாண்டாவில் உள்ளது புகழ்பெற்ற Morehouse கல்லூரி. இங்கு கடந்த
ஞாயிற்றுக்கிழமையன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு
விருந்தினராக Robert F Smith அழைக்கப்பட்டிருந்தார். Vista Equity Partners என்ற
பங்குச்சந்தை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். இவர்
கருப்பினத்தை சேர்ந்தவர் ஆவார்.
விழாவில் உரையாற்றிய Robert F Smith,
இந்த நாட்டில் 8 தலைமுறைகளாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம், எங்கள் குடும்பத்தின்
சார்பாக உங்களது வாழ்வில் சிறிய அளவில் எரிபொருளை நாங்கள் தர உள்ளோம். உங்கள்
அனைவரின் கல்விக் கடனையும் நான் ஏற்றுக் கொள்கிறேன், நீங்கள் கல்விக் கடனை
செலுத்தத்தேவையில்லை என்று அதிரடியாக அறிவித்தார்.
ஸ்மித்தின் பேச்சை கேட்ட மாணவர்களும்,
பெற்றோர்களும் ஆச்சரியத்தில் உறைந்து போயினர். சிலர் சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர்
சிந்தினர்.
அந்த கல்லூரியில் பட்டம் பெற்ற 400
மாணவர்களின் கல்விக் கடன் இந்திய மதிப்பில் சுமார் 278 கோடி ரூபாய்
என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்த major
aaron என்ற மாணவர் இந்த விழாவிற்கு சிறிது நாட்களுக்கு முன்னர் நான் எவ்வளவு
காலத்திற்கு எவ்வளவு கடனை வங்கிக்கு செலுத்த வேண்டும் என ஒரு கணக்கு போட்டுப்
பார்த்தேன். எனது கடன் தொகையான $2,00,000-யினை பாதி சம்பளப் பணத்தைக் கொண்டு 25
ஆண்டுகள் செலுத்த வேண்டும் என்பதை அறிந்தேன். ஆனால் இப்போது ஒரே நொடியில் எனது
கடன் அனைத்தையும் ஸ்மித் அடைத்துவிடுவதாக பொறுப்பேற்றுள்ளார். என்னால் உணர்ச்சியை
அடக்க முடியாமல் அழுதுவிட்டேன் என்றார்.
முன்னதாக இதே கல்லூரிக்கு 1.5 மில்லியன்
டாலர்கள் அளவிற்கு ஸ்மித் உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக