Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 2 மே, 2019

அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில், வடமதுரை, கோயம்புத்தூர்

 விருந்தீஸ்வரர் திருக்கோயில் க்கான பட முடிவு


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
திருவிழா மார்கழியில் ஆருத்ரா தரிசனம், தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் விசேஷ நாட்கள் ஆகும்.

தல சிறப்பு

ஈசன் சுயம்பு மூர்த்தியாக திகழ்கிறார்.பங்குனி மாதம் 17ம்தேதியில் சூரியன் விருந்தீஸ்வரர் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி வழிபாடு செய்கிறார். இங்கு தலவிருட்சமாக வன முருங்கை உள்ளது. சாதாரணமாக எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் ஜடாமுடி விரிந்து கிடக்க நடனமாடுவார்.

ஆனால், இங்கு தலை முடித்து அருள்பாலிக்கிறார். சிவன் தனது வாகனமான நந்திக்கு இத்தலத்தில்தான் சர்வ அதிகாரம் தந்தார். இதையடுத்தே கோயில்களில் "அதிகார நந்தி' சன்னதி அமைக்கும் பழக்கம் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர்.

பொது தகவல் 
மிகவும் பழமையான இத்தலம் கணேஸ்வரம், அகஸ்திய நல்லூர், கந்தமாபுரி என மூன்று யுகங்களிலும் அழைக்கப் பட்டது. கோயிலில் உள்ள கல்வெட்டின் படி ஏழாம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன் காலத்தில் நிறுவப்பட்டது என தெரிகிறது.

பிரார்த்தனை 
பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர இங்கு வழிபாடு செய்யலாம்.

நேர்த்திக்கடன் 
தம்பதியர் ஒன்று சேர்ந்த பின் லட்சுமி நாராயணருக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

தலபெருமை 
அதிகார நந்தியை பிரதோஷ காலங்களில் குளிர்ச்சியான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்தால் அவரும் குளிர்ந்து, நமக்கு வேண்டியதை கொடுத்து நம்மையும் குளிர்விப்பார்.

தம்பதி சமேதராக அருள்பாலிக்கும் லட்சுமி நாராயணரை இத்தலத்தில் உள்ளனர். இவர்களை வழிபட்டால் தம்பதியரிடையே மன ஒற்றுமை மேலோங்கும்.

தல வரலாறு

நால்வரில் ஒருவரான சுந்தரர் சிவாயலங்கள் தோறும் சென்று வழிபட்டு வந்தார். அவினாசியில் அவினாசி லிங்கேஸ்வரையும் அன்னை கருணாம்பிகையையும் தரிசித்து விட்டு, விருந்தீஸ்வரர் கோயிலுக்கு வரும்போது மிகுந்த பசி ஏற்பட்டது.

தள்ளாடிபடியே கோயிலை அடைந்தார். அவரது நிலை கண்ட ஒரு தம்பதியர் அவரை உபசரித்தனர். கணவன், விசிறி விட, மனைவி வன முருங்கைக்கீரையுடன் அமுது தயாரித்து அளித்தாள். அமுதை சாப்பிட்டவுடன் சுந்தரருக்கு புத்தொளி பிறந்தது.

இந்த புத்தொளிக்கு காரணம் அமுது படைத்த வேடுவராக வந்த இறைவனும், இறைவியுமே காரணம் என்பதை அறிந்தார் சுந்தரர் நெகிழ்ந்து போனார். சுந்தரருக்கு விருந்து படைத்ததால் இத்தல இறைவன் "விருந்தீஸ்வரர்' ஆனார்.

 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக