இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
சம்பங்கி மலர் அணைத்து விதமான விழாக்கள்
மற்றும் விசேஷங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்த மலருக்கு எப்பொழுதும்
நல்ல வரவேற்பு உள்ளது. அதிக பணம் மற்றும் தின வருமானம் ஈட்டி தரும் மலர்
பயிர்களில் முக்கிய பங்கு வகிப்பது சம்பங்கி மலர். விவசாயின் பொருளாதார நிலையை
உயர்த்தும் பயிர்களில் இதுவும் ஒன்று.
மெக்சிகன் சிங்கிள், சிருங்கார், பிரஜ்வால்,
பியர்ள் டபுள், சுவாசினி, வைபவ் ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை. பிரஜ்வால் ரகம்
அதிக மகசூல் தரவல்லது. பூங்கொத்தில் மொட்டுகள் அதிகமாகவும் பூக்கள் நீளமாகவும்
காணப்படும். பக்ககிளைப்புகள் அதிகமாக வருவதால் அதிகமான மகசூல் கிடைக்கும். சம்பங்கி மலர் சாகுபடிக்கு
ஏற்ற காலம் ஜூன், ஜூலை மாதங்கள் ஆகும். மேலும், நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண்,
6.5 முதல் 7.5 வரை உள்ள கார அமிலத்தன்மை ஏற்றது.
சம்பங்கி நீண்டகாலப் பயிர், இதற்கு சத்துக்கள்
அதிகம் தேவைப்படும். இயற்கை முறையில் பயிரிடும்பொழுது ஏக்கருக்கு பத்து டன்
தொழுஉரம், வேப்பம் பிண்ணாக்கு ஐம்பதுகிலோஅடிஉரமாகஇடவேண்டும். மண்புழு உரம் இடுவதன்
மூலமாக தேவையான சத்துகள் கணிசமாக மண்ணில் அதிகரிக்கும்.
நடவு செய்யும்பொழுது வரிசைக்கு வரிசை
குறைந்தபட்சம் இரண்டு அடி முதல் அதிகபட்சம் இரண்டரை அடி இடைவெளி விட்டு நடவு செய்ய
வேண்டும். சிலர் இரு வரிசை முறையிலும் நடவு செய்கிறார்கள்.
நன்கு பூத்த மற்றும் குறைந்தது மூன்று வருடம்
ஆன தோட்டத்தில் இருந்து எடுக்கப்பட்ட கிழங்குகளை நடவு செய்ய வேண்டும். இதனால் வளமான
செடிகளை பெறலாம். 25 முதல் 30 கிராம் எடையுள்ள
கிழங்குகள் நடவுக்கு ஏற்றவை. ஏக்கருக்கு 44,800 கிழங்குகள் தேவைப்படும். 45 செ.மீ.
இடைவெளியில் பார் பிடித்து, பாரின் சரிவுகளில் 20 செ.மீ. இடைவெளிகளில் இரண்டரை
செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் கிழங்கு ஊன்றுதல் நல்லது.
கிழங்கு எடுத்து 30 நாள் கழித்து ஊன்ற வேண்டும்.
உயிர் உரங்கள் அதிகமாக பயன்படுத்துவதால் அதிக
மகசூல் கிடைக்கும். VAM, ஹூமிக் அமிலம் கண்டிப்பாக பயன் படுத்த வேண்டும் இவை
எல்லாம் மாதம் ஒரு முறை பயன்படுத்தினால் போதுமானது.
வாரம் ஒரு முறை மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல்,
மீன் அமிலம் கலந்து பாசன நீரில் விட வேண்டும். தேங்காய் பால் மோர் கரைசல், மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் இவற்றை பத்து
நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும் தேவைப்பட்டால் ஜிப்ரலிக் அமிலம்
பயன்படுத்தலாம்.
தேவைப்படும்போது கை அல்லது இயந்திரம் மூலம் களை
எடுக்க வேண்டும்.
அதிகாலையில் பூக்களை பறிப்பதன் மூலம் ஊட்டமான
மலர்கள் பெறலாம். பூத்து முடித்த மலர் காம்புகளை உடனே அறுத்து எடுத்து வரிசைகள்
இடையில் மூடாக்காக இடலாம்.
சம்பங்கியை அதிகமாக இரண்டு வகையான பூச்சிகள் தாக்கும். மொட்டு துளைப்பான் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள். இவற்றை கற்பூரகரைசல் தெளிப்பதன் மூலம் முழுமையாக கட்டுப்படுத்தலாம். ஐந்து நாள் இடைவெளியில் கற்பூரகரைசல் தொடர்ந்து அளித்து கொண்டே இருக்க வேண்டும் இதனால் பூச்சி தாக்குதலில் இருந்து பயிரை முற்றிலும் காக்கலாம்.
சம்பங்கியை அதிகமாக இரண்டு வகையான பூச்சிகள் தாக்கும். மொட்டு துளைப்பான் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள். இவற்றை கற்பூரகரைசல் தெளிப்பதன் மூலம் முழுமையாக கட்டுப்படுத்தலாம். ஐந்து நாள் இடைவெளியில் கற்பூரகரைசல் தொடர்ந்து அளித்து கொண்டே இருக்க வேண்டும் இதனால் பூச்சி தாக்குதலில் இருந்து பயிரை முற்றிலும் காக்கலாம்.
வரிசைகள் இடையில் சணப்பு விதைத்து, சிறிது
உயரம் வளர்ந்த உடனே அறுத்து மூடாக்கு இட்டால் களைகள் கட்டுப்படும் மண் புழுக்கள்
எண்ணிகையில் கணிசமாக உயரும் ஆனால் இது சற்று கடினமான வேலை. இவ்வாறு செய்வதால்
மகசூல் கணிசமாக அதிகரிக்கும்.
சம்பங்கியில்
பின்வரும் பூச்சித் தாக்குதல்கள் இருக்கும் என்று வேளாண் பல்கலை பட்டியலிடுகிறது.
- மொட்டு துளைப்பான், ஹெலிகோவெர்பா ஆர்மிஜெரா
- அசுவினி, ஏபிஸ் கிராசி் பிவோரா
- வெட்டுக்கிளி, அட்ரேக்டோமார்பா ரெனுலேட்டா
- சிவப்பு சிலந்தி, டெட்ரானைக்கஸ் உர்டிகே
- எலிகள்
- கூன்வண்டுகள், மில்லோசெரஸ் வகை
இவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள்
பின்வருமாறு.
மொட்டு துளைப்பான், ஹெலிகோவெர்பா ஆர்மிஜெரா
சேதத்தின் அறிகுறி:
- இந்தப் பூச்சி மெதுவாக பூக்களைத் தாக்கும்.
- புழுக்கள் மொட்டுகள் மற்றும் பூக்களை துளைத்து செல்லும்.
- மொட்டுக்களில் உள்ளிருப்பவைகளை உண்ணும்.
கட்டுப்படுத்தும் முறை:
- தாக்கப்பட்ட மொட்டுகளை சேகரித்து அழித்துவிடவும்.
- விளக்குப்பொறி வைத்து அந்துப்பூச்சியை அழித்துவிடலாம்.
- மிதைல் பாரத்தியான் 0.05 சதவிதம் மருந்தினை முட்டைகள் தழைகளிலும், மொட்டுகளிலும் காணப்படும்பொழுது தெளிக்கவும்.
- வேப்பம் எண்ணெய் 0.5 சதவிதம் தெளித்தால் பூச்சிகளை விரட்டும்.
அசுவினி, ஏபிஸ் கிராசிவோரா
சேதத்தின் அறிகுறி:
- குஞ்சுகளும் பூச்சிகளும் மொட்டுகளிலும், இலைகளிலும் தாக்கும்
பூச்சியின் விபரம்:
- பூச்சி சிறியதாகவும், மென்மையான உடலைக் கொண்டும், கருப்பு நிறத்தில் தோன்றும்
கட்டுப்படுத்தும் முறை:
- மாலத்தியான் 0.1 சதவிதம் தாக்கப்பட்ட இலைகளில் தெளிக்கவும்
வெட்டுக்கிளி, அட்ரேக்டோமார்பா ரெனுலேட்டா
சேதத்தின் அறிகுறி:
- இளம் இலைகளையும் மொட்டுகளையும் உண்ணும்
- தாக்கப்பட்ட தாவரங்கள் அதன் நளினத்தை இழந்து காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- கார்பரில் 5 சதவிதம் போட்டால் தாக்கம் ஏற்படுத்துவதை தடுக்கலாம்
- முட்டைக்குவியல்களை வெளியேத் தெரியும்படி சுரண்டி இயற்கை எதிரிகள் உண்ணுவதற்கு வழிவகுக்கலாம்
- நாற்றங்காளில் வலை போட்டால் இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்
- குயினால்பாஸ் 0.05 சதவிதம் (அ) மாலத்தியான் 0.1 சதவிதம் (அ) கார்பரில் 0.2 சதவிதம் தெளித்தால் தாவரங்களை பாதுகாக்கலாம்
சிவப்பு சிலந்தி, டெட்ரானைக்கஸ் உர்டிகே
சேதத்தின் அறிகுறி:
- இலைகளின் அடிப்பகுதியில் சிலந்தியில் தோன்றும்
- இலைகளை கொத்துகளாக்கும் சிலந்திகள் சாறு உறிஞ்சுவதால் மஞ்சள் கோடுகள் இலைகளில் தோன்றும்
- தாக்கப்பட்ட இலைகள் மஞ்சளாகிவிடும்
பூச்சியின் விபரம்:
- சிவப்பு (அ) பழுப்பு நிறத்தில் சிலந்திகள் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- டைக்கோபால் 2மி.லி / லிட்டர் தெளித்தால் கட்டுப்படுத்தலாம்
எலிகள்சேதத்தின் அறிகுறி:
- எலிகள் சம்பங்கி வயலில் குழிகள் தோண்டி சேதத்தை ஏற்படுத்தும்
கட்டுப்படுத்தும் முறை:
- வயலில் நச்சுப்பொறி வைத்தால் எலித் தொல்லையைக் கட்டுப்படுத்தலாம்
- வெளிச் சந்தையில் ரோபான் என்ற பெயரில் கிடைக்கும்
கூன்வண்டுகள், மில்லோசெரஸ் வகை
சேதத்தின் அறிகுறி:
- புழுக்கள் வேர்களை உண்ணும், கிழங்குகளில் துளையிட்டு சேதப்படுத்தும்
- வண்டுகள் இரவில் உண்பவை அவை இலைகளையும், தண்டுகளையும் உண்டு அழிக்கும்
- வண்டுகள் இலைகளின் ஓரத்தில் உண்ணும்
கட்டுப்படுத்தும் முறை:
- கார்பரில் 10 சதவிதம் மண்ணில் போட்டால் கட்டுப்படுத்தலாம்
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக