Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 23 மே, 2019

திருமங்கலம் அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில், மதுரை

திருமங்கலம் அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில், மதுரை T_500_408

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்


மூலவர் : சொக்கநாதர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : மீனாட்சி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : ஆகாயகங்கை
ஆகமம்/பூஜை : காரணாகமம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருமாங்கல்யபுரம்
ஊர் : திருமங்கலம்
மாவட்டம் : மதுரை
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

சித்திரையில் திருக்கல்யாணம், மாசிமகம், மகாசிவராத்திரி.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில், திருமங்கலம் - 625706, மதுரை மாவட்டம்.

போன்:

+91- 452 - 234 2782.

பொது தகவல்:

சுவாமி கிழக்கு நோக்கியிருக்க, அம்பாள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி உள்ளாள். பிரகாரத்தில் வில்வவிநாயகர், உஷா, சாயாதேவியுடன் சூரியன், நாகர், மேற்கு நோக்கியபடி ஆஞ்சநேயர், மங்கள தெட்சிணாமூர்த்தி, மயில் மீது அமர்ந்தபடி வள்ளி, தெய்வானையுடன் முருகன், நவக்கிரகங்கள், காசிவிஸ்வநாதர், அஷ்டபுஜதுர்க்கை ஆகியோர் உள்ளனர்.


பிரார்த்தனை

தடைபட்ட திருமணங்கள் நடக்க அன்னை மீனாட்சியை வழிபடுகிறார்கள்.


நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

திருமண தோஷத்தால் பாதிக்கப்பட்டு, நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் இங்குள்ள மீனாட்சி, சொக்கருக்கு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும், திருமணத்துக்கு முன்னதாக இங்கு வந்து தாலிக்கொடியை வைத்து பூஜை செய்திட அவர்களின் இல்வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கை.

யோக சனீஸ்வரர்: இத்தலத்தில், யோகசனீஸ்வரர் தனிச் சன்னதியில் தெற்குநோக்கியபடி அருளுகிறார். இவரை, சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் எள்விளக்கு போட்டு, காக்கைக்கு அன்னமிட்டு மனமுருக வேண்டிக் கொண்டால், துன்பங்கள் நீங்கி சுபிட்சம் கிடைக்கும்.

அர்த்தநாரீஸ்வர விருட்சம்: இங்கு வில்வமும், வேம்பும் இணைந்து அர்த்தநாரீஸ்வரர் வடிவில் இருக்கிறது. இதனடியில் வில்வவிநாயகர் உள்ளார். சுவாமி, அம்பாளாக கருதப்படும் விருட்சங்களின் மடியில் இவர் அமர்ந்திருப்பதால் இவரிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து செயல்களும் நிறைவேறும்.

இவருக்கு அருகம்புல் மாலையிட்டு, கொழுக்கட்டை நைவேத்யம் செய்து வணங்கினால் கல்வி, கேள்வி, ஞானம், திருமணம், குழந்தை பாக்கியம்,குடும்ப நலம் ,உடல் பலம் உட்பட சகல பலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


தல வரலாறு:

மீனாட்சியை திருமணம் செய்ய, கயிலையில் இருந்த சிவன் மதுரைக்கு வந்தார். அவர்களின் திருமணம் மதுரையில் நடந்தது. திருமணத்திற்கு முன்பு, தேவர்கள் மதுரை அருகிலுள்ள ஒரு பகுதிக்கு வந்தனர். பொன்னை உருக்கி மாங்கல்யம் செய்தனர். மாங்கல்யம் செய்வதற்கு முன்பு, சிவனை வழிபட தேவர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பத்தை உணர்ந்த சிவன், இவ்விடத்தில் தனது திருமணத்திற்கு முன்பே பார்வதி சமேதராக எழுந்தருளி காட்சி தந்தார். எனவே இங்கும் இறைவனை சுந்தரேஸ்வரர் என்றும், சக்தியை மீனாட்சி என்றும் அழைத்து, அந்த இடத்திலும் தங்க வேண்டும் என தேவர்கள் கேட்டுக் கொண்டனர்.

அங்கு திருமாங்கல்யம் செய்யப்பட்டதால், அப்பகுதியை தேவர்கள் "திருமாங்கல்யபுரம்' என அழைத்தனர். காலப் போக்கில் "திருமங்கலம்' என பெயர் மாறியது. பிற்காலத்தில், மன்னர்கள் இங்கு கோயில் கட்டினர்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  

உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக