செவ்வாய், 28 மே, 2019

ஆர்தர் ஃபெர்குசன் ஏமாற்றும் எத்தன்

Image result for ஆர்தர் ஃபெர்குசன் 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்


ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் உலகத்தில் ஏமாற்றுபவர்களும் இருக்கத் தான் செய்வார்கள். அந்த வகையில் 1922 இல் டிரஃபால்கர் சதுக்கத்தில் ஆர்தர் ஃபெர்குசன் என்பவர் உலாவிக் கொண்டு இருந்தார். அங்குள்ள நெல்சன் நினைவுத் தூணை ஒரு அமெரிக்கர் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டு இருந்தார். அதனைக் கண்ட ஆர்தர் ஃபெர்குசன் அந்த அமெரிக்கரிடம் தன்னை ஒரு சுற்றுலா வழிகாட்டியாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பிரிட்டன் முதல் உலகப் போரில் பட்ட கடனைத் தீர்க்க புராதன மதிப்பு வாய்ந்த பொருள்களை விற்று வருவதாகவும், அந்த வேலையை பிரிட்டன் அரசு தன்னிடம் ஒப்படைத்து உள்ளதாகவும் கூறி அந்த அப்பாவி அமெரிக்கரை எப்படியெல்லாம் பேசி நம்ப வைக்க வேண்டுமோ அப்படி எல்லாம் பேசி நம்பவைத்தார். அத்துடன் அங்கு இருந்த நெல்சன் தூணை விலை பேசி அதற்கு உரிய தொகையையும் கூட அந்த அமெரிக்கரிடம் இருந்து வாங்கி கொண்டார் ஆர்தர் ஃபெர்குசன்.
நெல்சன் தூணை அதிக விலை கொடுத்து வாங்கிய அந்த அமெரிக்கர் ஒரு காண்டிராக்டரை அணுகிய போது தான் தாம் ஏமாற்றப் பட்டு விட்டதை தெரிந்து கொண்டார்.
ஆர்தர் ஃபெர்குசன் இதேபோல மற்றுமொரு அமெரிக்கரிடம் பிக்பென் கடிகாரத்தை 1000 பவுனுக்கு விற்றார். பக்கிங்காம் அரண்மனையை இன்னொருவரிடம் விலை பேசி 2000 பவுன் முன் பணம் வாங்கிக் கொண்டார். பிறகு அமெரிக்கா சென்றால் மேலும் நிறைய பேரை ஏமாற்றி பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் அமெரிக்கா கிளம்பினார். அங்கும் அவர் ஏமாற்று வேலையை வெற்றிகரமாக தொடர்ந்தார். அமெரிக்க வெள்ளை மாளிகையை ஒரு சுற்றுலாப் பயணியிடம் குத்தகைக்கு விற்று முதல் தவணையை பெற்றுக் கொண்டார்.
பிறகு நியூ ஆர்க்கில் இருந்த அமெரிக்க சுதந்திர தேவி சிலையை ஆஸ்திரேலியர் ஒருவரிடம் பேரம் பேசி விற்றார். ஆர்தர் ஃபெர்குசன் அந்த ஆஸ்திரேலியருடன் சுதந்திர தேவி சிலை முன் நின்று புகைப்படம் வேறு எடுத்துக் கொண்டார். எனினும், பணத்திற்காக அதிக அவசரப்பட்டதால் உஷார் அடைந்த அந்த ஆஸ்திரேலியர் போலீசில் பூகார் செய்ய, ஆர்தர் ஃபெர்குசன் இந்த முறை வசமாக மாட்டிக் கொண்டார். எனினும், சட்டத்தில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி சில வருடங்களிலேயே விடுதலை ஆகி விட்டார். அத்துடன் 1930 இல் லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேறி தான் ஏமாற்றி சம்பாதித்த தொகையைக் கொண்டு மாளிகை கட்டி அதில் அமோகமாக வாழ்ந்து 1938 இல் காலமானார்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்