இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
தண்ணீரில் மூழ்கியவருக்குச் சுவாசம் உள்ளதா,
நாடித்துடிப்பு உள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அவை இல்லாத பட்சத்தில்
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விடுங்கள் அல்லதே மேலே முதல் இரண்டு
அத்யாயங்களில் கொடுக்கப்பட்டு இருக்கும் முதல் உதவிகளை (பயிற்சி இருப்பின்)
கொடுங்கள்.
தண்ணீரில் மூழ்கியவர்கள் பெரும்பாலும் அதிகமாகத்
தண்ணீர் குடித்து விடுவார்கள். நுரையீரலிலும் இரைப்பையிலும் தண்ணீர்
நிரம்பிவிடுவதால் வயிறு வீங்கி, சுவாசிக்கச் சிரமப்படுவார்கள். ஆகவே, இந்தத்
தண்ணீரை வெளியேற்றுவதற்கு, முதலுதவி செய்யும் நபர் வேகமாகவும் விவேகத்துடனும்
செயல்பட வேண்டும்.
தண்ணீரில் மூழ்கியவரைக் குப்புறப்படுக்க வைத்து,
தலையைப் பக்கவாட்டில் திருப்பி வைத்துக்கொண்டு, முதுகையும் வயிற்றையும் அமுக்க
வேண்டும். இவ்வாறு பத்து நிமிடங்களுக்குத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
அந்த நபருக்குச் சுவாசம் நின்றிருந்தால் அல்லது
மூச்சுத் திணறல் இருந்தால், செயற்கை சுவாசம் தரலாம். ஒருவேளை இதயத்துடிப்பு
நின்றிருந்தால் இதய மசாஜ் தரலாம். ஆனால், இதற்கு ‘இதய சுவாச மறு உயிர்ப்புச்
சிகிச்சை’ (cardiopulmonary resuscitation – சுருக்கமாக – CPR) என்று பெயர்.
இதனைப் பள்ளியில் படிக்கும் போதே தெரிந்து வைத்துக்கொண்டால் எப்போதும் நமக்கு
நல்லது.
சரி, செயற்கை சுவாசம் தருவது எப்படி?
வாருங்கள் அதை மீண்டும் ஒரு முறை பார்ப்போம். (ஏனெனில் உயிரை காப்பாற்ற இது
மிகவும் அத்யாவசியம். எத்தனை முறை சொன்னாலும் தவறில்லை).
முதலில் பாதிக்கப்பட்ட அந்த நபரை மல்லாக்கப்
படுக்க வைக்க வேண்டும்.
அவருடைய பற்களுக்கிடையில் மரக்கட்டை அல்லது துணியைப்
பல மடிப்புகளாக மடித்து வைத்து, வாயைத் திறந்தபடி வைத்துக் கொள்ள வேண்டும்.
காற்று செல்லும் பாதை தடையில்லாமல் உள்ளதா என்று
சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
முக்கியமாக, வாயில் அந்நியப் பொருள்கள் ஏதேனும்
இருந்தால், அகற்றி விட வேண்டும்.
பாதிக்கப்பட்டவரின் மூக்கை விரல்கள் கொண்டு
மூடி, அவரது வாயில் முதலுதவி செய்பவரின் வாயை வைத்துக் காற்றை பலமாக ஊதி உள்ளே
செலுத்த வேண்டும். இதனால், அவரது மார்பு உயரும். அப்போது முதலுதவி செய்பவர் வாயை
எடுத்துவிட வேண்டும். மீண்டும் ஊத வேண்டும். இவ்வாறு நிமிடத்துக்கு 12 முறை ஊத
வேண்டும்.
குழந்தையாக இருந்தால் நிமிடத்துக்கு 30 முறை ஊத
வேண்டும்.
தண்ணீரில் மூழ்கியவரின் இருதயத்தை செயல்
பட வைக்க மேலும் சில வழிமுறைகள்:-
சுவாசத்துக்கு வழி செய்யும் அதே நேரத்தில் இதயத்
துடிப்புக்கும் வழி செய்ய வேண்டும். அந்த நபரின் நடு நெஞ்சில் முதலுதவி செய்பவரின்
உள்ளங்கைகளை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து, மார்பை பலமாக அழுத்த வேண்டும்.
நிமிடத்துக்கு 80 அழுத்தம் என்று மொத்தம் 15 முறை தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்.
இதனால் இதயம் துடிக்க ஆரம்பிக்கும்.
நான்கு சுழற்சிகள் இதய மசாஜ் செய்துவிட்டு,
இரண்டு முறை செயற்கைச் சுவாசம் தர வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபருக்கு சுவாசம் மற்றும்
நாடித்துடிப்பு ஏற்படும் வரையில் இதனைத் தொடர வேண்டும்.
அதே நேரத்தில் தாமதிக்காமல் மருத்துவச்
சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது தான் தண்ணீரில் மூழ்கியவரை
முழுமையாகக் காப்பாற்ற முடியும்.
இதற்குப் பின்னர், பாதிக்கப்பட்ட நபரை 108
ஆம்புலன்ஸ் உதவியால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக