Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 2 மே, 2019

ஆண் மூலம் அரசாலுமா? பெண் மூலம் நிர்மூலமா?











ஆண் மூலம்  பெண் மூலம் க்கான பட முடிவு

     
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்



யார் உளரியது?

ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்! ஆண்டாண்டு காலமாக மக்கள் மத்தியில் நிலவிவரும் தவறான நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று.

'மூல நட்சத்திரப் பெண்ணா? வேண்டவே வேண்டாம்!’ என்று நட்சத்திரத்தைப் பார்த்ததுமே அவர்களின் ஜாதகத்தை ஒதுக்கித் தள்ளும் வேதனையான வழக்கம் இன்றும் தொடர்கிறது.

இது தவறு எனில், இப்படியான நம்பிக்கை ஏற்படக் காரணம் என்ன? நெருப்பில்லாமல் புகையாதே?!

இதற்கான பதிலை மிக நுணுக்கமாக ஆய்ந்தறிய வேண்டும்.

ஜோதிட சாஸ்திரத்தில் மிதுன ராசியில் சூரியன் இருக்கும் மாதமே ஆனி மாதம். மிதுனம் ஆண் ராசி. இந்த மாதத்தில் வரும் மூல நட்சத்திரம் பெரும்பாலும் பௌர்ணமி திதியை ஒட்டியே வரும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் மாதம் புரட்டாசி. கன்னி- பெண் ராசியாகும். இந்த மாதத்தில் வரும் மூலநட்சத்திரம் பெரும்பாலும் அஷ்டமி திதியுடன் சேர்ந்து வரும்.

எப்போதுமே நல்ல காரியங்களுக்கு பௌர்ணமி திதியே ஏற்றதாகக் கொள்ளப்படும்; அஷ்டமி திதியை பெரும்பாலும் தவிர்த்துவிடுவார்கள். ஆக, பௌர்ணமி திதியை ஒட்டி ஆனி மாதம் மிதுன (ஆண்) ராசியில் சூரியன் இருக்கும்போது வரும் மூல நட்சத்திரம் சுப திதியில் வருவதால், ஆனி மூலத்தை ஏற்றனர். அதுவே ஆண் மூலம் எனப்பட்டது. பௌர்ணமி என்பது யோக திதி என்பதால், இன்னும் திரிபு ஏற்பட்டு 'ஆண் மூலம் அரசாளும்என்றாகிவிட்டது.

அதேபோன்று, கன்னி மாதமாகிய புரட்டாசியில், மூல நட்சத்திரம் அஷ்டமியோடு சேர்ந்து வருவதால், அந்த நாளில் சுப காரியங்கள் தவிர்க்கப்பட்டது. அன்று துவங்கும் நற்காரியங்கள் விருத்தியாகாது எனும் பொருள்படும்படி 'கன்னி மூலம் நிர்மூலம்எனச் சொல்லி வைத்தார்கள். இதில் கன்னி ராசி மறக்கப்பட்டு, கன்னிப் பெண்கள் எனத் தவறாகப் பொருள் கொண்டு 'பெண் மூலம் நிர்மூலம்என்றாகிவிட்டது.

எனவே, மூல நட்சத்திரம் என்பது இருபாலருக்கும் பெருமை சேர்க்கும் நட்சத்திரமே! அதேபோன்று, மூல நட்சத்திரக்காரர்களைத் திருமணம் செய்தால் மாமனார்- மாமியாருக்கு ஆகாது என்பதுவும் தவறான வாதம் ஆகும்.


 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக