
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
‘புரூஸ்’ என பெயரிடப்பட்ட கழுகை,
ஸ்டீவ் பைரோ தத்ரூபமாக எடுத்த புகைப்படம் தற்போது உலகம் முழுவதும் வைரலாக பரவி
வருகிறது.
டொராண்டோ:
டொராண்டோ:
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தை சேர்ந்த
புகைப்பட கலைஞர் ஸ்டீவ் பைரோ. இயற்கை சார்ந்த இடங்கள் மற்றும் வனவிலங்குகளை
புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் ஆவார். இவர் அண்மையில் ஒன்டாரியோ
மாகாணத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்துக்கு சென்றிருந்தார். அவர் அங்குள்ள பறவைகளை
விதவிதமாக புகைப்படம் எடுத்தார். அப்போது, ‘புரூஸ்’ என பெயரிடப்பட்ட கழுகு ஒன்றை
புகைப்படம் எடுக்க தயார் ஆனார்.
பொதுவாக இதுபோன்ற புகைப்படங்களை
எடுக்கிறபோது, பறவைகள் அந்த இடத்தில் இருந்து பறந்து சென்றுவிடும் அல்லது அப்படியே
இருக்கும். ஆனால் ‘புரூஸ்’ கழுகு, ஸ்டீவ் பைரோ தன்னை புகைப்படம் எடுப்பதை
அறிந்தது, அவரை நோக்கி பறந்து வந்தது. நேர்கொண்ட பார்வையுடன், 2 இறக்கையும்
தண்ணீரில் உரசியபடி‘போஸ்’ கொடுப்பது போல நேர்த்தியாக பறந்து வந்தபோது, ஸ்டீவ் பைரோ
அதனை தத்ரூபமாக படம் பிடித்தார். அதன் பின்னர் அவர் அந்த படத்தை ‘பேஸ்புக்’ மற்றும்
‘இன்ஸ்டாகிராம்’ ஆகிய சமூக வலைத் தளங்களில் பதிவிட்டார்.
தற்போது அந்த படம் உலகம் முழுவதும்
வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் ஸ்டீவ் பைரோவுக்கு பெரும் பெயரும், புகழும்
கிடைத்துள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், “இந்த
புகைப்படம் மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு மிகவும் தனித்துவம் வாய்ந்தது. ஆனால்
இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்பதை நான் இன்னும் அறியவில்லை” என்றார்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத
கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என
வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக