பா.ஜ.க-வின் அங்கமாக பன்னீர்செல்வம் இருந்ததால்தான் இத்தனையும் அவர்களால் செய்ய முடிந்தது. சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் குடும்பத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும்தான் பா.ஜ.க-வோடு நெருங்கிக் கொண்டிருக்கிறார் பன்னீர்.
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசிக்குக் கடந்த 23-ம் தேதி பயணமானார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். மறுநாள் பிரதமர் நரேந்திர மோடியின் வேட்புமனுத் தாக்கல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இதன்பின்னர் நடந்த பிரமாண்டப் பேரணியிலும் கலந்துகொண்டார். குடும்பம் சகிதமாக பா.ஜ.க தலைவர்களை அவர் சந்தித்தது அரசியல்ரீதியாக உற்றுக் கவனிக்கப்பட்டது. இதன் நீட்சியாக, `தேர்தலில் தோற்றுவிடுவோம் எனத் தெரிந்து பா.ஜ.க-வில் ஐக்கியமாகத் திட்டமிட்டிருக்கிறார் பன்னீர்செல்வம்’ எனக் கொளுத்திப் போட்டார் அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன்.
இந்தத் தகவல் பன்னீர்செல்வத்துக்கு
அதிர்ச்சியை அளித்துள்ளது.
“சாதாரணத் தொண்டனான எனக்கு நகராட்சித் தலைவர்,
எம்.எல்.ஏ.,
அமைச்சர் எனப் பதவிகளை வழங்கியதோடு மூன்று முறை முதல்வராக,
12
ஆண்டுகளுக்கும் மேலாக அ.தி.மு.க பொருளாளராகவும் என்னை
அமர்த்தியவர் ஜெயலலிதா. என்
கனவிலும்கூட நான் எதிர்பார்த்திராத
உயரங்களை தந்து, இத்தனை பெருமைகளை அள்ளித்
தந்தது அ.தி.மு.க-
தான். ஜெயலலிதா என் மீது வைத்த நம்பிக்கைக்கும் அவருடைய
தொண்டர்களின் அளவற்ற பாசத்துக்கும் நானும் என் வம்சாவளிகளும்
எத்தனை தலைமுறைக்கும்
நன்றிக்கடன் செலுத்தினாலும் போதாது” என
உருக்கமான அறிக்கை ஒன்றையும்
வெளியிட்டிருந்தார் ஓ.பி.எஸ்.
தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசினோம்.
பா.ஜ.க-வில் சேரப் போகிறார் என்பதை
எந்த அடிப்படையில்
சொல்கிறீர்கள்?
“மக்களவைத் தேர்தலில் தோற்றுவிடுவோம்
என அவருக்கு உறுதியாகத்
தெரியும். அப்படித் தோற்றுவிட்டால், அரசியல் வாழ்க்கை
முடிந்துவிடும்
என பயப்படுகிறார். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து
தூக்கிவிட்டு தான் மறுபடியும் முதல்வராக வேண்டும் என நினைக்கிறார்.
அப்படிக்
கிடைக்காவிட்டால் பா.ஜ.க துணையோடு ஆளுநர் பதவியை
வாங்கிவிட வேண்டும் என
நினைக்கிறார். அதற்காகத்தான் வாரணாசி
சென்றார்.”
பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தகவலைக் கடுமையாக மறுத்திருக்கிறாரே?
“எம்.எல்.ஏ, அமைச்சர், முதல் அமைச்சர் என அவருக்குப் பதவி கொடுத்து அழகு பார்த்தது அம்மா எனக் குறிப்பிட்டிருக்கிறார். பன்னீர்செல்வத்தை முதன்முதலில் எம்.எல்.ஏ-வாக்கி, அமைச்சர் பதவியும் வாங்கிக் கொடுத்தது டி.டி.வி.தினகரன்தான். அவர் முதல்வரானதற்குக் காரணமும் அவர்தான். அந்த வகையில் பன்னீர்செல்வம் நன்றி சொல்ல வேண்டியது தினகரனுக்குத்தான். அந்த அறிக்கையில் அவர் தினகரனுக்கு நன்றி சொல்லவில்லை. அது ஒருபுறம் இருக்கட்டும். வாரணாசிக்குக் குடும்பத்தோடு சென்றது பன்னீர்செல்வம் செய்த முதல் தவறு. அங்கு காவி வேட்டி கட்டிக்கொண்டு பியூஸ் கோயல் முன்பு அமர்ந்திருந்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் `மோடியா… லேடியா?’ என அறிவித்து 37 சீட்டுகளை வென்றார் ஜெயலலிதா. இதனால் கோபம் அடைந்த மோடி, `அண்ணா தி.மு.க-வை ஒழிக்க வேண்டும்’ என நினைத்தார். அம்மா மறைவுக்குப் பிறகு, அதைச் சாதித்தும் காட்டிவிட்டார். பன்னீர்செல்வத்தைக் கையில் எடுத்து, ஆடிட்டர் மூலமாகத் தர்மயுத்தத்தையும் தொடங்கி வைத்தார். பன்னீர் பக்கம் இருந்த 11 எம்.எல்.ஏ-க்கள் மூலமாக அண்ணா தி.மு.க-வையும் இரட்டை இலையையும் முடக்கினார்.
மூதாதையருக்கு பிண்ட தானம் கொடுப்பதற்காக ஓ.பி.எஸ் சென்றதாகச் சொல்கிறார்களே?
“மோடி போட்டியிடும் நேரத்தில்தான் பிண்ட தானம் கொடுக்க வேண்டுமா? நான் ஒன்று கேட்கிறேன். வாரணாசி சென்று திதி கொடுப்பதற்கு அவருக்கு நேரம் இருக்கிறது. `அம்மா மரணத்தில் சந்தேகம்’ எனக் கூறி ஆர்.கே.நகர் தேர்தலில் பிணத்தை மாடலாக வைத்துக்கொண்டு ஓட்டு கேட்டார் பன்னீர்செல்வம். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சொன்னவர், இன்று வரையில் ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் ஆஜராகச் செல்லவில்லை. `எங்களை அழிக்க வேண்டும்’ என நினைப்பவர் ஆணையத்தில் ஆஜராகி உண்மையைத் தெரிவிக்க வேண்டியதுதானே… அம்மா மரணம் இயற்கையானது என அவருக்குத் தெரியும். அதனால்தான் சொல்ல மறுக்கிறார். அப்படிச் சொல்லிவிட்டால் சின்னம்மாவின் செல்வாக்கு உயரும். இதை அறிந்துதான் அமைதியாக இருக்கிறார். மே 23-ம் தேதிக்குப் பிறகு, பன்னீர்செல்வம் எங்கிருக்கப்போகிறார் எனப் பாருங்கள்” எனச் சிரித்தபடியே முடித்துக் கொண்டார் தங்க தமிழ்ச்செல்வன்.
பன்னீர்செல்வத்தின் அரசியல் நகர்வுகள் குறித்து நம்மிடம் பேசிய
அரசியல் விமர்சகர்
ஒருவர், “பா.ஜ.க-வுடன் நெருக்கமாக இருப்பதை
வெளிப்படையாகக் காட்டிக்கொள்கிறார்
பன்னீர்செல்வம். டெல்லியில் மீண்டும் பா.ஜ.க
ஆட்சி வந்துவிட்டால், தன்னுடைய மகனுக்கு மந்திரி சபையில் இடம் கேட்பதும் அவருடைய நோக்கம்.
கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பாக மத்திய மண்டலத்தில் உள்ள ஆன்மிகப் பெரியவர் ஒருவரையும்
சந்தித்தார் ஓ.பி.எஸ். இந்தச் சந்திப்பில், முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்ற
விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். டெல்லி சோர்ஸுகள் மூலமாக இதற்கான வேலைகளையும்
தொடங்கியிருந்தார். இந்தத் தகவலைக் கேள்விப்பட்டு கடும் கோபத்தில் இருந்தார்
எடப்பாடி பழனிசாமி.
மத்தியில் மீண்டும் மோடி வந்துவிட்டால், மத்திய கேபினட்டில் இடம் பிடிப்பதில் ஓ.பி.எஸ்-ஸுக்கும் ஈ.பி.எஸ்-ஸுக்கும் இடையில் மோதல் வெடிக்கலாம். மோடி பதவிக்கு வருகிறாரா… இல்லையா என்பதே தெரியாத சூழலில், சில வியூகங்களை முன்கூட்டியே வகுக்கத் திட்டமிட்டுள்ளார் பன்னீர்செல்வம். கொங்கு மண்டலத்தின் முக்கிய தொழிலதிபர் ஒருவரைக் குறிவைத்து அண்மையில் நடந்த ரெய்டுகளும் கவனிக்கப்பட வேண்டியவை. `கொங்கு கேபினட்டின் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும்’ என்பதில் ஆடிட்டர் ஒருவரும் உறுதியாக இருக்கிறார். அவருடைய ஆலோசனையின்படியே பன்னீர்செல்வம் செயல்படுகிறார் என வெளிவரும் தகவல்களும் மிக முக்கியமானவை” என்றார் அமைதியாக.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக