Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 23 மே, 2019

ட்ரூவிஷன் ஸ்மார்ட் டிவி.!:விமர்சனம்.!



Image result for ட்ரூவிஷன் ஸ்மார்ட் டிவி.
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்


சியோமி, எல்ஜி நிறுவனங்கள் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, இந்நிறுவனங்களின் டிவி மாடல்கள் அனைத்து சற்று விலை உயர்வாக தான் இருக்கிறது. ஆனால் மலிவு விலை மற்றும் பட்ஜெட் விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது ட்ரூவிஷன் நிறுவனம்.

ரூ.13,990-விலையில் களமிறங்கிய ட்ரூவிஷன் ஸ்மார்ட் டிவி.!:விமர்சனம்.! குறிப்பாக சியோமி, எல்ஜி நிறுவனங்களுக்கு போட்டியாக தான் ட்ரூவிஷன் நிறுவனம் மலிவு விலையில் தனது ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் tw3262 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது ட்ரூவிஷன் நிறுவனம். மேலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவி மாடல் இந்தியா முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும்.
வடிவமைப்பு:
வடிவமைப்பு: 32-இன்ச் ட்ரூவிஷன் tw3262 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல் பொதுவாக முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 16:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது.
குறிப்பாக சிறந்த திரை அனுபவம் கொடுக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த சாதனத்தின் இணைப்பு ஆதரவுகளை பற்றி பேசுகையில், விஜிஏ-அவுட்புட், 2யுஎஸ்பி போர்ட், ஆடியோ-வீடியோ அவுட்புட், 2எச்டிஎம்ஐ போர்ட், 3.5எம்.எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. மேலும் செல்போன் மற்றும் கீபோர்ட் சாதனங்களை கூட இந்த ஸ்மார்ட் டிவியுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.
மென்பொருள்:
மென்பொருள்: புதிய ட்ரூவிஷன் ஸ்மார்ட் டிவி மாடலின் மென்பொருள் அம்சத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி ஆண்ட்ராய்டு இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது, எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கூகுள் பிளே ஸ்டோர்களில் உள்ள வீடியோ செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
பின்பு எப்போதும் போல் சாதரண ரீமோட் மட்டுமே இந்த ஸ்மார்ட் டிவி மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த திரைஅனுபவம்: சிறந்த திரைஅனுபவம்: ட்ரூவிஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட் டிவி சிறந்த கலர் அம்சம் மற்றும் திரைஅனுபவம் கொடுக்கும் வகையில் வெளிவந்துள்ளது,
ஆனால் சியோமி ஸ்மார்ட் டிவியில் உள்ள பேக்லைட் அம்சம் மற்றும் சில அம்சங்கள் tw3262 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியில் இல்லை. இருந்த போதிலும் பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட் டிவியாக tw3262 ஸ்மார்ட் டிவி உள்ளது.
விலை:
விலை: ட்ரூவிஷன் நிறுவனத்தின் tw3262 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலின் விலைப் பொறுத்தவரை ரூ.13,990-ஆக உள்ளது, மேலும் எல்ஜி, சாம்சங் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவி மாடல்களை விட குறைவாக தான் இருக்கிறது.


 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  

உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!