இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
தேவையான பொருள்கள்:
எலும்பில்லா சிக்கன் 1 கிலோ
வெங்காயம் 4
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
கரம் மசாலா 2 தேக்கரண்டி
தனியாத் தூள் 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் 3 தேக்கரண்டி
இஞ்சி/ பூண்டு விழுது 3 தேக்கரண்டி
கொத்துமல்லி இலை தேவையான அளவு
மஞ்சள் தூள் 1 சிட்டிகை
செய்முறை:
சிக்கனை முதலில் நன்கு கழுவி சுத்தம்
செய்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் வெங்காயத்தை உரித்து சிறு, சிறு
துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு அடுப்பில் வாணலியை வைத்து அதில்
தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் சிக்கனை அதில் போட்டு வதக்கவும்.
சிக்கன் சிறிது வதங்கியதும் உடன் மஞ்சள்
தூள், இஞ்சிப் - பூண்டு விழுது ஆகிய இவை அனைத்தையும் போட்டு மேலும் சிறிது நேரம்
நன்கு வதக்கவும்.
இப்போது சிக்கன் மேலும் பாதி வெந்த
மாத்திரத்தில் அதில் மிளகாய்த் தூள், உப்பு ஆகிய இவற்றை போட்டு மீண்டும் நன்கு
வதக்கவும்.
பின் சிறிது நேரம் மூடி வைக்கவும்.
பின்னர் மீண்டும் திறந்து ஏற்கனவே
அரைத்து வைத்து இருக்கும் விழுதை அதில் போட்டு மேலும் நன்கு வதக்கவும்.
சிக்கன் இப்போது நன்கு வெந்த
மாத்திரத்தில் அதில் தனியா தூள், கரம் மசாலா போட்டு சிறிது நேரம் நன்கு மூடி
வைக்கவும். உடனுக்குடன் அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரத்தில் அணைத்து
விடவும்.
பின்னர் தயாரான சிக்கனில் கொத்தமல்லி
இலை தூவவும்.
இதோ இப்போது சுவையான தெலுங்கானா ஸ்பைசி
சிக்கன் ப்ரை ரெடி.
சிக்கனில் கொழுப்புகள் குறைவாகவும்,
புரோட்டீன்கள் அதிகமாகவும் உள்ளன. எனவே பாடி பில்டர் போன்று தசைகள்
வேண்டுமென்பவர்கள், சிக்கனை அதிகம் சாப்பிடலாம். ஆனால் சிறுநீரகக் கோளாறுகள்
உள்ளவர்கள் இதனை தவிர்க்கவும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக