Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 23 மே, 2019

காதுவலிக்கான முதலுதவிகள்

Image result for காதுவலிக்கான முதலுதவிகள் 



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
காதுவலிக்கான முதலுதவிகள்: காது வலி அடிக்கடி வருவதற்கான காரணங்கள் சிலவற்றையும் அதற்கான முதலுதவி சிகிச்சைகளையும் பார்ப்போம் வாருங்கள்.
காது வலி அடிக்கடி வருவதற்கான காரணங்கள்: தடுமம் அல்லது சளி பிடிக்கும் போது, தொண்டை முழுவதும் புண்ணாகி வீங்கி விடும். அப்போது தொண்டையிலிருந்து காதுக்குச் செல்லும் ‘ஈஸ்டாக் கியன்’ குழாய் அடைபட்டுவிடும். இதன் விளைவாக காதில் காற்றழுத்தம் வேறுபடும். இதை ஈடுசெய்ய காது சவ்வு உள்நோக்கி நகரும். இதனால் காது பயங்கரமாக வலிக்கும். இந்நிலையில் காதுவலிக்கான சில அடிப்படை முதலுதவிகள் பின்வருமாறு.
1. ‘டிங்சர் பென்சாயின்’ மருந்தைப் பயன்படுத்தி நீராவி பிடிக்கலாம்.
2. வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடலாம் இல்லையென்றால் தடுமத்தைக் குறைக்கிற மாத்திரைகள் சாப்பிடலாம் அல்லது தேவைப்பட்டால் ஆன்டிபயாடிக் மாத்திரைகளைச் சாப்பிடலாம்..
3. மூக்கு அடைப்பதைத் தவிர்க்க வேண்டும். இதற்கு மூக்கடைப்பை நீக்கும் சொட்டு மருந்தை மூக்கில் ஊற்றலாம்.
4. காது வலி போக்கும் சொட்டு மருந்து ஊற்றலாம். எனினும், காதில் சீழ் வடிந்தால் அல்லது காது சவ்வில் துவாரம் விழுந்திருந்தால், காதில் சொட்டு மருந்து ஊற்றக்கூடாது.
காதில் அந்நியப் பொருள்கள் நுழைந்தால் செய்ய வேண்டிய முதலுதவிகள்:
குழந்தைகள் விளையாட்டுத்தனமாக காதில் பலப்பம், மரக்குச்சி, ரப்பர், வேப்பமுத்து போன்றவற்றைப் போட்டுக்கொள்வார்கள். இவை காது சவ்வை அழுத்தி வலியை ஏற்படுத்தும். அதே போல, காதில் பூச்சி நுழைந்து விட்டாலும் காது வலிக்கும். சில சமயங்களில், காதில் குரும்பி சேர்ந்து காது வெளிக் குழலை அடைத்துவிடும். அந்த சமயங்களில் அந்தக் குரும்பியில் தண்ணீர் பட்டதும் அதை உறிஞ்சிப் புடைத்துவிடும். அப்போதும் காது வலிக்கும். இந்நிலையில் செய்ய வேண்டிய சில முதலுதவிகள் வருமாறு.
1. குரும்பியை வெளியில் எடுப்பதற்குக் குச்சி, ஊக்கு, பட்ஸ் போன்றவற்றால் எடுக்க முயற்சி செய்வது தவறு. அப்படிச் செய்தால் காதில் உள்ள பொருள் இன்னும் உள்ளே போய்விடும். எனவே, குரும்பி மற்றும் பிற அந்நியப் பொருள்கள் காதில் இருந்தால், மருத்துவரிடம் காண்பித்து உரிய கருவி மூலம் வெளியில் எடுப்பதே சாலச் சிறந்தது.
2. ஒருவேளை, காதில் பூச்சி புகுந்திருந்தால், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைக் காதில் ஊற்றலாம். பூச்சி எண்ணெயில் இறந்துவிடும். பிறகு சிறிதளவு தண்ணீரைக் காதில் ஊற்றித் தலையைச் சாய்த்தால், பூச்சி வெளியில் வந்துவிடும். மற்றபடி எக்காரணம் கொண்டும் காய்ச்சிய எண்ணெய்யை காதில் ஊற்றக் கூடாது. இது தவறான சிகிச்சை.
3. சாதாரணமாகக், காதில் புகுந்த பொருள் கண்ணுக்குத் தெரிந்தால், தலையைச் சாய்த்துப் பொருளைக் கீழே விழ வைக்கலாம்.
 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக