இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு
விபத்து ஏற்பட்டால் ஒருவருக்கு கீழ்கண்ட வகையில் நாம் உதவலாம்.
அதற்கு முன்,
முதலுதவி செய்ய முன் வருபவர்கள்
முக்கியமாகக் கவனிக்க வேண்டியது:-
வாகனம் ஓடிக்கொண்டு இருந்தால், இன்ஜினை
நிறுத்தவும். முடிந்தால் பேட்டரிகளின் இணைப்புகளைத் துண்டிக்கவும். பெட்ரோல் -
டீசல் பாதையை மூடவும். அதே போல, ஒருவேளை வாகனத்துக்கு அடியில் மனிதர்கள்
சிக்கியிருந்தால் சக்கரங்களின் அடியில் கட்டைகளை வைத்து, வாகனத்தை நகராமல்
பார்த்துக் கொள்ளவும். பெட்ரோல் கசிந்து சிந்தியிருக்கும் இடங்களில் எளிதில்
தீப்பிடித்துவிடும். இதனால் பெட்ரோல் டாங்க் வெடிக்கவும் வாய்ப்பு உண்டு. அதனால்
யாரும் சிகரெட் பிடிக்காமலும், எண்ணை, விளக்கு போன்ற எரியும் பொருட்களை அருகில்
எடுத்துச் செல்லாமலும் கவனமாக இருக்க வேண்டும்.
விபத்தில் முதுகெலும்புகளும்,
கழுத்தெலும்புகளும் சேதமடைந்திருக்கலாம். பாதிக்கப்பட்டவரை அசைத்து வளைத்து
தூக்கினால், எலும்புகள் மேலும் சேதமடைந்து கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம்.
அதனால், அடிபட்டவரை நான்கு பேர் சேர்ந்து தூக்க வேண்டும்.
முதலாமவர் காதுகளையும் தலையையும்
அணைத்தாற்போல் பிடித்துக்கொள்ள வேண்டும். இரண்டாமவர், தோள்பட்டை, மார்புக்கு
அடியில் இரு கைகளையும் சொருகிப் பிடித்துக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர், வயிறு
இடுப்புக்கு அடியில் கைகளைக் கொடுத்து தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
நான்காம் நபர் தொடைக்கு அடியில் ஒரு கையையும், கெண்டைக்காலுக்கு அடியில் ஒரு
கையையும் கொடுத்து, நால்வரும் ஒரே சமயத்தில் தூக்கி ஒரு ஜமுக்காளத்திலோ, அல்லது
அதைப் போன்ற துணியிலோ படுக்க வைக்க வேண்டும்.
பின் அந்த ஜமுக்காளத்தை உடலின் மீது
போர்த்தியது மாதிரி சுற்றி, துணி நழுவாமல் இருக்க ஆங்காங்கே சிறு கட்டுகள் போட
வேண்டும். பின் பாதிக்கப்பட்டவரின் இடது பக்கம் மூன்று பேரும், வலது பக்கம்
ஒருவரும் வந்து தலையையும் கழுத்தையும் ஆதரவாகத் தாங்கிப்பிடித்து, கட்டை போல
அசையாமல் நேராகத் தூக்கி ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து மருத்துவமனைக்கு கொண்டு
செல்ல வேண்டும்.
மேற்கண்ட இவை தவிர, உடனடியாக
தொலைபேசியில் தொடர்புகொண்டு மருத்துவ ஊர்தி, மீட்புப் பணி, (தீ விபத்து இருந்தால்)
தீயணைப்பு படை போன்றவர்களை உதவிக்கு அழைக்கவும். (அவசர உதவி தொலைபேசி எண் 103
மற்றும் 1063)
இருசக்கர வாகனத்தில் செல்பவருக்கு
விபத்து ஏற்பட்டால் : முதலில் அவர் அணிந்து இருக்கும் ஹெல்மெட்டை கழற்றுவது
நல்லது. அதிலும், தாடையையும் ஹெல்மெட்டையும் இணைத்துள்ள ஒட்டு நாடாவை பிரிக்க
முடியாவிட்டால் வெட்டி எடுக்க வேண்டும். ஒருவர் கைவிரல்களை ஹெல்மெட்டுக்குள்
நுழைத்து ஒருகையால் கழுத்துப் பகுதியையும், மற்ற கையால் கீழ்த்தாடையையும் தாங்கி
உறுதியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். இன்னொருவர் ஹெல்மெட்டை சற்றே முன்னோக்கிச்
சாய்த்து பின்பக்கமாக மெள்ள மெள்ள தூக்கி வெளியே எடுக்க வேண்டும். தாடையையும்
கழுத்தையும் பிடித்துக்கொண்டு இருப்பவர் ஹெல்மெட் முழுவதுமாக எடுக்கும் வரை
விடக்கூடாது.
தலையுடன் சேர்ந்து ஹெல்மெட் நசுங்கி
இருக்கும் சமயங்களில், ஹெல்மெட்டை மட்டும் தனியே கழற்ற முயற்சித்தால்... தோலும்
ஹெல்மெட்டோடு சேர்ந்து கழன்று வந்து விடும். அதனால், நேரடியாக மருத்துவமனைக்கு
வந்துவிடுங்கள். மீறி ஹெல்மெட்டைக் கழற்றினால், தலையிலிருக்கும் தோலும் சேர்ந்து
பிய்ந்துவிடும், கவனமாக செயல்படுங்கள்!
இதே போல, அனைத்து வகையான
விபத்துகளுக்கும் எப்படி முதலுதவி அளிக்க வேண்டும் என்னும் முறைகளை 'செயின்ட் ஜான்
ஆம்புலன்ஸ் அசோசியேஷன்’ அமைப்பினர் கற்றுத் தருகிறார்கள். முதலுதவி சிகிச்சை
பயிற்சி தருவதற்கு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே அமைப்பு இதுதான்!
இவர்களிடம் பயிற்சி பெற்றால் முதலுதவியில் சிறந்து விளங்கலாம். இன்றைய காலத்தில்
இது மிகவும் அவசியம். மருத்துவ மனை சார்ந்த வேலை வாய்ப்புகளுக்கும் இப்பயிற்சி
பிற்காலங்களில் உதவும்.
இரு சக்கர வாகனத்தில் செல்லும்
சமயத்தில் கீழே விழுவதால் ஏற்படும் லேசான எலும்பு முறிவுக்கு செய்ய வேண்டிய
அடிப்படை முதலுதவி சிகிச்சைகள் சில :-
இருசக்கர வாகனத்தில் செல்லும் சமயத்தில்
கையிலோ அல்லது காலிலோ அடிபட்டு எலும்பு முறிவு ஏற்படும்போது கை அல்லது கால்
விரல்களில் உணர்ச்சி இருக்கிறதா என்பதை முதலில் பாருங்கள். பின்னர் உடனடியாக
பாதிக்கப்பட்டவரை டாக்டரிடம் கொண்டு செல்ல வேண்டும். டாக்டர் பார்க்கும் வரை கை
கால்களை அசைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கைவிரல் அல்லது கால் விரல்களில்
காயம்பட்டிருந்தால் விரல்களை அசைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். எலும்புமுறிவுக்
காயத்தில் எலும்பு வெளியே தெரிந்தால், அதைச் சுத்தமான துணியால் மூடி டாக்டரிடம்
அழைத்துச் செல்லுங்கள். எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் அழுத்தி நீவுதலோ அல்லது
வெளியில் தெரிகின்ற எலும்பினை உள்ளே பழைய நிலைக்கு அமுக்கி வைக்கவோ, நேரே நிறுத்தி
வைக்கவோ முயற்சி செய்யாதீர்கள். எலும்பு முறிவுக் காயத்திற்கு மேல் அல்லது கீழ்
உள்ள மூட்டுக்களை ஆட்டவோ அசைக்கவோ கூடாது. டாக்டரை பார்ப்பதற்கு முன்னால், எலும்புமுறிவு
எற்பட்டவருக்குத் தண்ணீரோ வேறு எந்த நீராகாரமோ அல்லது உணவோ கொடுக்கக்கூடாது.
எலும்பு முறிவுகளும் அதற்கான முதல் உதவி
சிகிச்சைகளும்
ஒரு நபர் விபத்தில் சிக்கி விட்டார்
எலும்புகள் முறிந்து விட்டது இந்நிலையில் அவருக்கு நம்மால் என்னென்ன முதல் உதவிகள்
செய்ய முடியும். வாருங்கள் பார்ப்போம்.
முதலில் விபத்தில் சிக்கிக் கொண்ட அந்த
குறிப்பிட்ட நபருக்கு எலும்புகள் முறிந்து விட்டதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள
வேண்டும்.
அடிபட்ட நபருக்கு எலும்பு முறிந்துள்ளதா
என்று தெரிந்துகொண்ட பின்னரே, முதலுதவியைத் தொடங்க வேண்டும். அதற்குக்
கீழ்க்காணும் அறிகுறிகள் உதவும்.
1. விபத்து ஏற்பட்ட உடல் பகுதியில்
வலியும், வீக்கமும் இருக்கும். அத்துடன் அடிபட்ட பகுதியை அசைக்க முடியாது.
அசைத்தால் வலி உயிர் போகும். மேலும், முறிவுள்ள பகுதியைத் தொட்டாலே வலி அதிகரிக்கும்.
2. அதே போல எலும்புகள் ஒருவேளை
முறிந்திருந்தால் அப்பகுதியில் எலும்புகள் உள்ளுக்குள் உராய்வதை பாதிக்கப்பட்ட
நபர் உணர்வார்.
3. இவை தவிர, முறிவு ஏற்பட்ட பகுதியில்
வளைவு அல்லது குழி தோன்றலாம் அல்லது முறிவுக்குக் கீழ் உள்ள பகுதி பலமில்லாமல்
இருக்கும்.
மேற்கண்ட நிலையில் நாம் செய்ய வேண்டிய
சில பொதுவான முதலுதவிகள் :-
1. முதலில் அடிபட்ட நபரை அவ்விடத்தில்
இருந்து நகர விடக் கூடாது. அதிலும் குறிப்பாக விபத்துக்கு உள்ளான பாகத்தை
அசைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
2. முடிந்தால் மெல்ல அடிபட்டவரை படுக்க
வைக்கலாம். அவருக்கு நினைவு இருக்குமாயின் அவரது பதற்றத்தை போக்கலாம். ஒருவேளை
காயம் இருந்தால் சுத்தமான ஈரத் துணி அல்லது கை குட்டையால் துடைக்கலாம்.
3. ரத்தக்கசிவு பெருகி வருமாயின்,
துணியைப் பல மடிப்புகளாக மடித்து, காயத்தின் மீது வைத்து, அழுத்தமாகக் கட்டுப்
போடலாம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக