Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 13 மே, 2019

எலும்பு முறிவுகளுக்கான சில முதலுதவிகள்

எலும்பு முறிவுகளுக்கான சில முதலுதவிகள் க்கான பட முடிவு


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்







கை எலும்பு முறிவுக்கான முதலுதவி
கை எலும்பு முறிந்திருந்தால், கையின் இரு பக்கங்களிலும் மூங்கில் தப்பைகளை வைத்துத் துணியால் கட்டுப்போடவும். மூங்கில் தப்பைகள் கிடைக்காவிட்டால், சிறிய மரப்பலகை அல்லது அடி ஸ்கேல்களை வைத்தும் கட்டுப்போடலாம்.
முறிந்த உறுப்புகள் மேன்மேலும் அசைவதைத் தடுக்க, ஓர் ஆதாரம் தருவது தான் இந்த முதலுதவியின் நோக்கம்.
அடுத்து, முறிந்த பாகத்தைத் தொங்கப்போடக் கூடாது. ஏனென்றால், தொங்கப்போடும் போது, முறிவுக்குக் கீழே ரத்தம் தேங்கி வீக்கமும் வலியும் அதிகமாகும். இவற்றின் விளைவால், முறிந்த எலும்புகளை நேராக எடுத்து வைத்துக் கட்டுவதில் சிரமம் ஏற்படும்.
இப்போது, அடிபட்டவரின் முழங்கையை ‘L’ வடிவில் உள்நோக்கி மடக்கி, மார்போடு சேர்த்து வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்.
இனி, கழுத்துக்கும் கைக்கும் சேர்த்துத் துணியால் ஒரு தொட்டில் போலக் கட்டுப் போட வேண்டும். இதற்குத் துணி கிடைக்காவிட்டால் சட்டையைப் பயன்படுத்தலாம்.
தொட்டில் போலக் கட்டும் முறை:-
ஒரு மீட்டர் அளவுள்ள ஒரு துணியை வெட்டிக் கொள்ளுங்கள். அதை ஒரு முக்கோண வடிவில் மடக்கிக் கொள்ளுங்கள். முறிவு ஏற்பட்டுள்ள பகுதியை உங்கள் கையால் தாங்கிக் கொள்ளுங்கள். பிறகு, முக்கோண பாண்டேஜின் ஒரு முனையை அடிபட்டவரின் மார்புக்கும் முழங்கைக்கும் இடையே கொண்டு செல்லுங்கள். முக்கோண பாண்டேஜின் மற்றொரு முனையை முன்னங்கை முன்புறமாகச் சுற்றிக் கொண்டு சென்று, அடிபட்டவரின் கழுத்தைச் சுற்றிப் பின்பக்கமாகக் கொண்டு சென்று, முன்புறமாகக் கொண்டு வாருங்கள். இப்போது மார்போடு சேர்ந்திருக்கும் முதல் முனையுடன் இந்த இரண்டாவது முனையை முடிச்சுப் போட்டுவிடுங்கள். தொங்கிக் கொண்டிருக்கும் பேண்டேஜின் மீதமுள்ள பகுதியை மடித்து ஒரு ஊக்கு அல்லது குண்டூசி கொண்டு பாதுகாப்பாகக் குத்திக் கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வரை இந்தத் தொங்குக் கட்டை கழற்றாதீர்கள்.
இடுப்பு எலும்பு முறிவு, தொடை எலும்பு முறிவு, கீழ்க்கால் முறிவு ஆகியவற்றிற்கு செய்ய வேண்டிய முதல் உதவிகள்:-
விபத்திலோ அல்லது சாதாரணமாகவோ கால் வழுக்கி விழுந்தாலே இடுப்பு எலும்பு, தொடை எலும்பு, கீழ்க்கால் எலும்பு மற்றும் பாத எலும்புகளில் முறிவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு. இடுப்பு எலும்பு முறிந்திருந்தால், முதலில் அடிபட்டவரைப் படுக்க வையுங்கள். கால்கள் நேராக நீட்டி யிருக்க வேண்டும். ஓர் அகலமான துணியால் இடுப்பைச் சுற்றிக் கட்டுப் போட வேண்டும். பிறகு, இடுப்புக்குக் கீழே தொடைகள் தொடங்கும் இடத்தில் மற்றொரு கட்டுப் போட வேண்டும். இந்த இரண்டு கட்டுகளிலும் முடிச்சு, பக்கவாட்டில் இருந்தால் நல்லது.
அதுவே, தொடை எலும்பு முறிந்திருக்குமானால், மிருதுவான துணி மடிப்புகளை இரண்டு தொடைகளுக்கும் நடுவில் வைக்க வேண்டும். பிறகு, இரண்டு தொடைகளையும் சேர்த்து மூன்று இடங்களில் துணிக்கட்டுப் போட வேண்டும்.
இதே போல கீழ் கால் முறிவு ஏற்பட்டாலும் தொடை எலும்பு முறிவுக்குச் செய்வதைப் போலவே தான் செய்ய வேண்டும். அதாவது, மிருதுவான துணி மடிப்புகளை இரண்டு கால்களுக்கும் நடுவில் வைக்க வேண்டும். பிறகு, இரண்டு கால்களையும் சேர்த்து மூன்று அல்லது நான்கு இடங்களில் துணிக்கட்டுப் போட வேண்டும். கட்டுகளின் முடிச்சுகள் பக்கவாட்டில் இருக்க வேண்டும்.
இடுப்பு, தொடை மற்றும் கால் எலும்பு முறிந்துள்ள நபரை, ‘ஸ்ட்ரெச்சரி’ல் தான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். ஸ்ட்ரெச்சர் கிடைக்காத போது, ஒரு கனமான போர்வையில் அவரைப் படுக்க வைத்து, போர்வையின் இரு முனைகளை ஆளுக்கு ஒருவராகப் பிடித்துத் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.
பாதங்களில் ஏற்படும் எலும்பு முறிவுகளுக்கான சில முதலுதவிகள்:-
பாதத்தின் மீது கனமான பொருள்கள் விழுதல், வழுக்கிவிழுதல், வாகனங்கள் பாதத்தில் ஏறுதல், உயரமான இடத்திலிருந்து விழுதல், தாண்டிக் குதித்தல் போன்றவற்றால் பாத எலும்புகளில் முறிவு ஏற்படலாம்.
மெத்தென்று துணியை மடித்து, பாதத்தின் கீழே அணைப்புக் கொடுங்கள்.
அந்தத் துணி அணைப்பைச் சேர்த்து ஓர் அகலமான பாண்டேஜ் துணியால் பாதம் முழுவதும் கட்டுப் போடுங்கள்.
பாண்டேஜ் துணியின் முனைகளை ‘8’ போல கணுக்காலின் பின்பக்கமாகக் கொண்டு சென்று, பிறகு முன்பக்கமாகக் கொண்டு வந்து முடிச்சுப் போட வேண்டும்.
முடிச்சு பாதத்தின் மேற்புறம் மத்தியில் வர வேண்டும்.
எலும்பு முறிந்த பாதத்தைத் தரையில் ஊன்றக் கூடாது.
பாதிக்கப்பட்டவரை ‘ஸ்ட்ரெச்சரி’ல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது நல்லது.
இதே போல கீழ்த்தாடை முறிவுக்கும் இவ்வாறு முதலுதவி செய்யலாம்:-
முறிவு ஏற்பட்ட தாடையை உங்கள் கையால் தாங்கிக் கொள்ளுங்கள்.
துணியை மடித்துத் தாடைக்குக் கீழ் அணைப்புக் கொடுங்கள்.
ஒரு பாண்டேஜ் துணியால் தாடையோடு அழுந்தும்படி கட்டுப்போட்டு, முனைகளைத் தலைக்கு மேலே கொண்டுவந்து உச்சித்தலையில் முடிச்சுப் போடுங்கள். இனி, அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.


 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக