Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 17 ஜூன், 2019

உலகை மாற்றிய 7 இசுலாமிய பொற்கால படைப்புகள்!



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com


இஸ்லாமிய பொற்காலம் என்பது கிபி 8 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் என்ற பொதுவான கருத்து நிலவிவருகிறது. இந்த காலக்கட்டம் இஸ்லாமிய கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் அறிவியல் அபிவிருத்தியில் முக்கிய பங்குவகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 உலகை மாற்றிய 7 இசுலாமிய பொற்கால படைப்புகள்! இந்த பொற்காலமானது பேரழிவை ஏற்படுத்திய மங்கோலிய படையெடுப்பு மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற 1258 ஆம் ஆண்டின் பாக்தாத் முற்றுகை காரணமாக முடிவுக்கு வந்தது

 இந்த காலக்கட்டம் முழுவதும், இஸ்லாமிய சிந்தனையாளர்கள் மனித இனத்திற்கு உதவக்கூடிய சில சுவாரஸ்யமான சாதனங்கள், கருத்துருக்கள், கட்டமைப்புகள் மற்றும் கருவிகளை உருவாக்க முடிந்தது. பின்வரும் கட்டுரையில், இஸ்லாமியர்களின் "பொற்காலம்" முழுவதும் அவர்களின் மிக முக்கியமான ஏழு கண்டுபிடிப்புகளை காண்போம்.
 1) கிடைமட்ட காற்றாலைகள்
 1) கிடைமட்ட காற்றாலைகள்
காற்றாலையின் முந்தைய வடிவங்கள் கிபி 1 ஆம் நூற்றாண்டில் "ஹீரோ ஆப் அலெக்ஸாண்டிரியா" என்பவரால் உருவாக்கப்பட்டிருந்தாலும், கிடைமட்ட காற்றாலைகள் முதல்முதலாக கிபி10 ஆம் நூற்றாண்டில் அகமத் ஒய். அல் ஹசன் என்பவரால் விவரிக்கப்பட்டது. தொழில்நுட்ப ரீதியாக "பேன்மோன் காற்றாலை" என்று அழைக்கப்படும்

இவை, பாய் அல்லது துணியால் மூடப்பட்டிருக்கும் ஆறு முதல் பன்னிரண்டு பாய்மரங்களால் உருவாக்கப்பட்டது. செய்யப்பட்ட பின்னர் "உண்மையான" காற்றாலை வடிவம் உருவாக்கப்பட்டு, தானியங்களை அரைக்க அல்லது நீர்நிலையிலிருந்து தண்ணீரை இறைக்க பயன்படுத்தப்பட்டன.

செங்குத்தான காற்றாலைகள் 12 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் காணப்பட்டன. ஆனால் இவை முந்தைய பேன்மோன் வடிவில் இருந்து உருவாக்கப்பட்டதா என்பது தெளிவாக இல்லை எனினும், 10 நூற்றாண்டுகளில் மத்திய மற்றும் தூர கிழக்கு நாடுகளில் பரவலாகின.
 Image result for ஆஸ்ட்ரோலேப்
 2. இஸ்லாமிய வானியலாளர்களால் மாற்றியமைக்கப்பட்ட "ஆஸ்ட்ரோலெப்"

 ஆஸ்ட்ரோலெப் என்பது ப்ளேனிஸ்பியர் (அடிப்படை நட்சத்திர விளக்கப்பட இயந்திர கணினி) மற்றும் டயோப்ட்ரா (சைட்டிங் டியூப்) இடையேயான கலவையாகும். இந்த இயந்திர வழிகாட்டி சாதனங்கள் உண்மையில் மிகவும் பழமையானவை.

தொல்பொருள் மற்றும் இலக்கிய சான்றுகளின் படி கி.மு. 220 மற்றும் 150 இடையே கிரேக்கத்தில் ஹெலனிஸ்டிக் காலத்தில் முதன்முதலாக இவை கண்டுபிடிக்கப்பட்டன. 4 ஆம் நூற்றாண்டிஸ் அலெக்ஸாண்டிரியாவின் தியோன் இதைப்பற்றி விரிவாக எழுதப்பட்டன.

 ரோமானிய பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பசின்டின் காலத்தில் கிரேக்க மொழி பேசும் பகுதி முழுவதும் ஆஸ்ட்ரோலெப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இடைப்பட்ட காலத்தில், முஸ்லீம் வானியல் வல்லுநர்கள், அதன் வடிவமைப்பில் கோண அளவீடுகளை சேர்ப்பதன் மூலம் அதன் தொழில்நுட்பத்தை மறுவரையறை செய்தனர் .

மேலும் அவர்கள் திசைகோணங்களை சுட்டிக்காட்டும் வட்டங்களை சேர்த்தனர். இந்த புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கணிதவியலாளர் முஹம்மத் அல்-ஃபாஸரி. இந்த மாற்றப்பட்ட சாதனங்கள் பின்னர் பரவலாக பயன்படுத்தப்பட்டன மற்றும் வழிநடத்துதலுக்காகவும் மெக்காவில் கிப்லாவைக் கண்டறியவும் பயன்படுத்தப்பட்டன.
 3) ஓட் இசைக்கருவி
3) ஓட் இசைக்கருவி
சிறு வீணை அல்லது கிடார் போன்ற வடிவமைப்பில் இருக்கும் ஓட் என்ற இசைக்கருவி முதலில் இஸ்லாமிய உலகில் பொற்காலத்தில் தோன்றியது. பல இசை வரலாற்றாசிரியர்கள் இதை ஐரோப்பிய லுட் க்கு முன்னோடியாக கருதுகின்றனர்.
 சுவாரஸ்யமாக இது இந்த கதையின் முடிவு இல்லை. ஆனால் இந்த ஓட் கருவி முந்தைய பாரசீக பார்பதுரிலிருந்து பெறப்பட்டிருக்கலாம். மற்ற ஒத்த இசை கருவிகள் மத்திய கிழக்கில் பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றன.

ஓட் இசைக்கருவியின் ஆதார விளக்கம் 11 ஆம் நூற்றாண்டின் முஸ்லீம் இசைக்கலைஞர் அல் ஹசன் இபின் அல் ஹெய்தம் என்பவரிடம் இருந்து வருகிறது. இன்று ஓட் இன்னும் பரவலாக மத்திய கிழக்கு நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் உலகம் முழுவதும் உள்ள இசைக்கலைஞர்கள் மிகவும் பிடித்தமான ஒன்றாக விளங்குகிறது
 4. பிடில்-க்கு முன்னோடியாக ரிபாப்
4. பிடில்-க்கு முன்னோடியாக ரிபாப்

 பிடில்-க்கு முன்னோடியாக ரிபாப் ஜாவ்சா அல்லது டிஜோசா என்றும் அழைக்கப்படும் கம்பியுள்ள இசைக்கருவியான ரிபாப், கிபி 8 ஆம் நூற்றாண்டின் முதல் முறையாக காணப்பட்டது.

இது வட ஆப்பிரிக்கா, மத்திய , தூர கிழக்கு, மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் வர்த்தப்பாதை வழியாக இஸ்லாமிய நாடுகளை சுற்றி பரவியது. ஐரோப்பாவின் ஃபிடில் (கிபி 10 ம் நூற்றாண்டு ) போலவே, மற்ற அனைத்து கம்பிவகை இசைக்கருவிகளுக்கு முன்னோடியாக ரிபாப் உள்ளது என கூறப்படுகிறது.

ஆனால் முதலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் தோன்றிய ரவானாஸ்டிரோன் என்று இசைக்கருவி தான் பழமையான கம்பியுள்ள இசைக்கருவியாகும் .
 Image result for இராணுவ இசைக்குழுவின் அணிவகுப்பு
5. இராணுவ இசைக்குழுவின் அணிவகுப்பு

டிரம்ஸ் மற்றும் ஊதுகுழல் போன்ற இசைக்கருவிகள் பல நூற்றாண்டுகளாக இராணுவத்தால் அணிவகுப்புகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உண்மையில் டிரம்ஸ் மற்றும் கோங்ஸ் ஆகியவை கிட்டத்தட்ட 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சன் டிஹூ'ஸ் "தி ஆர்ட் ஆப் வார்' ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரோமானிய படையினரும் எனியேட்டர்கள் எனப்படும் சிறப்பு நிபுணர்கள் கொம்பு என்ற இசைக்கருவி (Horns) பயன்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இவை முக்கியமாக போர்க்களத்தில் உள்ள படைகளுக்கு அறிவுறுத்தல்களையும் கட்டளைகளையும் வழங்க பயன்படுத்தப்பட்டன.

மேலும் சடங்கு நோக்கங்களுக்கவும் பயன்பட்டன. போர் அல்லாத நடவடிக்கைகளுக்கான உத்தியோகபூர்வ இராணுவக் குழுவின் முதல் எடுத்துக்காட்டாக கி.பி 11 ஆம் நூற்றாண்டில் ஒட்டோமான் இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது கூறப்படுகிறது.
 6) கண்ணாடி மூலம் உருபெருக்குதல் (பூதக்கண்ணாடி)
6) கண்ணாடி மூலம் உருபெருக்குதல் (பூதக்கண்ணாடி)

 பூதக்கண்ணாடி போன்ற ஒரு சாதனத்தின் முதல் எழுத்துப்பூர்வ ஆதாரம் அரிஸ்டோபேன்ஸ் உடைய கிமு 5 வது நூற்றாண்டு-ன் "தி க்ளைவுட்ஸ்" என்பதிலிருந்து கிடைக்கிறது. இந்த ஆவணத்தில், டிண்டரைப் பற்றவைக்க லென்ஸ்கள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது பற்றி அவர் நகைச்சுவையாகக் கூறுகிறார்.

மேலும் பலர் இதுகுறித்து பழங்காலத்திலிருந்து குறிப்பட்டு வந்தாலும், கிபி 11 ஆம் நூற்றாண்டில் இபின் அல் ஹெய்தின் எழுதிய புக் ஆப் ஆப்டிக்ஸ் புத்தகத்திலிருந்து உருபெருக்க நிகழ்விற்கான குவி லென்ஸின் முதல் விளக்கம் உள்ளது.
 7. காகித ஆலைகள்
 7. காகித ஆலைகள்
காகிதம் ஆலைகள் அல்லது காகிதத்தை உருவாக்கும் தொழிற்சாலைகள், இஸ்லாமிய உலகின் பொற்காலத்தின் போது முதன்முதலில் தோன்றியிருக்கலாம்.

ஆனால் பிரச்சனை என்னவெனில் அந்த காலத்தில் கிடைத்த சான்றுகள் மற்றும் ஆவணங்கள் குழப்பம் மற்றும் முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளன. முஸ்லீம் மற்றும் சீன காகித தயாரிப்பாளர்கள் மனிதர் மற்றும் விலங்குகள் மூலம் இயங்கும் ஆலைகள் மூலம் காகிதம் தயாரித்தனர் என்பதே அனைவருக்கும் தெரிந்தது.
பிரத்யேக கட்டிடத்தை காட்டிலும், காகித தயாரிப்பிற்கான இடம் அல்லது உற்பத்தி மையங்களை பொதுவாக "மில்" என்று அழைக்கிறோம். இவை முதன்முதலில் பாக்தாத்தில் அப்பாசித் ஆட்சியில் கிபி 8 ஆம் நூற்றாண்டில் காணப்பட்டன.

எனினும் காகித மில்லின் முதல் தெளிவான சான்றுகள் கிபி 1262 ஆம் ஆண்டில் ஆரோகன் ஸ்பெயின் ராஜ்யத்தை குறிக்கின்றன.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக