இந்த
செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த
செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
தனுர்
என்றால் வில். வில்லைப் போல் உடலை வளைப்பதால் இந்த யோகசனத்திற்குத் தனுராசனம் என்ற
பெயர் ஏற்பட்டது. பஸ்சிமோத்தாசனத்திற்கு மாற்று யோகாசனம் இது.
செய்முறை
:-
1.
விரிப்பில் குப்புறப் படுத்துக்கொள்ள வேண்டும்.
2.
பின்னர் இரு கைகளையும் உடலோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
3.
இரு கால்களையும் முழங்கால்களை மடக்கி ஒன்று மாற்றி ஒன்றாகத் தூக்கிக் கொண்டு சில
முறை பயிற்சி செய்துவிட்டுப் பின்னர் இரு கால்களையும் முழங்காலை மடக்கித் தூக்கிய
வண்ணமே இரு கைகளாலும் பிடிக்க வேண்டும்.
4.
அப்படியே கால்களைத் தலைக்கு நேராகக் கொண்டு வந்த வண்ணமே தலையையும், நெஞ்சுப்
பகுதியையும் மேல் நோக்கித் தூக்கிக்கொள்ள வேண்டும்.
5.
இரு பாதங்களும் மேலே சேர்ந்த வண்ணம் இருக்க வேண்டும். :முழங்கால்கள் ஒட்டி இருக்க
வேண்டும் என்ற அவசியம் இல்லை. :வயிற்றுப்பகுதி தரையில் அழுந்தி இருக்க உடல் வில்
போல் வளைய வேண்டும்.
6.
சுவாசம் இயல்பாக இருத்தல் நலம்.
பலன்கள்
: இதைத் தொடர்ந்து செய்தால் தொந்தி குறைவதோடு, இடுப்பு, தொடைகளின் சதைகளும்
கரையும். உடல் பின்னோக்கி வளைக்கப் படுவதால் ரத்த ஓட்டம் சீராகும்.
ரத்தக்குழாய்கள் நன்கு செயல்படும். அதிகப்படியான பிராணவாயு கிடைக்கும். வயிற்றுத்
தொல்லைகள், வாயுத் தொல்லைகள் குறையும். இதயம் நன்கு சுருங்கி விரிந்து
சுறுசுறுப்பாக இயங்கும். நுரையீரல் நன்கு செயல்படுவதால் ஆஸ்த்மா நோயாளிகளுக்குப்
பலனளிக்கும். இந்த ஆசனமும் நீரிழிவு நோய்க்கு நல்ல பலனை அளிக்கும்.
சாப்பிட்டதும்
இந்த ஆசனம்செய்யக் கூடாது. மேலும் ஆபரேஷன் செய்து கொண்டவர்களும் இந்த ஆசனத்தைச்
செய்யக் கூடாது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத
கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என
வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
Follow Us:
Join our Whatsapp Group
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக