இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
ராமேஸ்வரம், இராமநாதபுரம்
மாவட்டத்தில் பாம்பன் தீவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். தீபகற்ப பகுதியுடன்
பாம்பன் பாலம் இத்தீவை இணைக்கின்றது. மதுரையிலிருந்து 172 கி.மீ தொலைவில்
அமைந்துள்ளது.
சிறப்புகள் :
இந்தியாவின் முன்னாள் குடியரசுத்
தலைவர் யு.P.து.அப்துல்கலாம் இங்குதான் பிறந்தார்.
இது வங்காள விரிகுடா கடலின் கரையில்
அமைந்துள்ளது.
12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட,
பழமைக்கு சொந்தமானதுமான புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றான ராமநாதசுவாமி ஆலயம் இங்கு
உள்ளது. உலகில் மிக நீண்ட பிரகாரம் என்ற பெருமை இந்த கோவிலுக்கு உண்டு.
தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும்
தீவு. கோவில்களின் தீவு எனவும் அழைக்கப்படுகிறது. வாரணாசிக்கு இணையான புனித
வழிபாட்டுத் தலமாக ராமேஸ்வரம் கருதப்படுகின்றது. பாவங்களை போக்கும் தளமாகவும்
விளங்குகிறது.
இராமர் இலங்கையிலிருந்து தனது மனைவி
சீதையை மீட்க இங்கிருந்துதான் பாலம் அமைத்ததாக நம்பப்படுகின்றது.
மக்கள் இங்கு வந்து புனித
தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றனர்.
பாம்பன் பாலம் :
இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான
பாம்பன் பாலம் மிகவும் புகழ்பெற்றது. தரைப்பாலமும், ரயில் பாலமும் இங்கு
இருக்கிறது. பெரிய கப்பல்கள் செல்லும்போது பாலம் இரண்டாகப் பிரிந்து வழிவிடும்
வசதி இருக்கிறது.
கடலுக்கு மேல் பாலத்தின் மீது பயணம்
செய்வது அற்புதமான அனுபவத்தைத் தரும். இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும்.
இந்தப் பாலத்தை இருவழிப் பாலம் என்று கூட அழைக்கலாம்.
தனுஷ் கோடி :
தனுஷ் கோடி கடற்கரையில், வங்காள
விரிகுடா மற்றும் இந்திய பெருங்கடல் ஆகியவை ஒன்றிணைகின்றன. இப்பகுதி 'அரிச்சல்
முனை" என்று அழைக்கப்படுகிறது.
எப்படி செல்வது?
சென்னை உட்பட அனைத்து முக்கிய
நகரங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கு பேருந்து வசதிகள் இருக்கிறது. ராமேஸ்வரம்
பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து அல்லது ஆட்டோ மூலமாக பயணம் செய்யலாம்.
ரயில் நிலையம் :
ராமேஸ்வரம் ரயில் நிலையம்.
விமான நிலையம் :
மதுரை விமான நிலையம்.
செல்லும் காலம் :
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
பல்வேறு கட்டணங்களில் தங்கும்
விடுதிகள் மற்றும் சத்திரங்கள் உள்ளது.
பார்க்க வேண்டிய இடங்கள் :
முனைவர் யு.P.து.அப்துல்கலாம் மணி
மண்டபம்.
பாம்பன்.
தனுஷ் கோடி.
ஏகாந்த ராமர் கோவில்.
கோதண்டராமர் கோவில்.
அனுமார் கோவில்.
சீக்கியர் மடம்.
நம்பு நாயகி அம்மன் கோவில்.
கந்தமாதனம்.
தங்கச்சி மடம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக