
இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
இன்றைய வாழ்க்கையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேதான் செல்கிறது. ஒருபக்கம் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருந்தாலும், மறுபக்கம் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது.
இப்பொழுது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாகனத்தை ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இனி நாம்தான் எச்சரிக்கையாக வாகனத்தை ஓட்ட வேண்டும். அப்போதுதான் எந்தவொரு விபத்தையும் தவிர்க்க முடியும்.
இன்று பெரும்பாலானோர் ஓட்டுவது இருசக்கர வாகனத்தை தான். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பின்பற்ற வேண்டியவை என்னென்ன? நாம் எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
முதலில் இருசக்கர வாகனத்தை ஓட்டும் முறையை நன்கு அறிந்த கொள்ள வேண்டும்.
வாகனம் ஓட்டும்போது கிளர்ச்சை பிடித்து கொண்டும், பிரேக்கை அழுத்திக் கொண்டும் ஓட்டக்கூடாது. அவ்வாறு ஓட்டினால் வாகனம் மிக விரைவில் பழுதாகிவிடும்.
வாகனத்தை ஓட்டும்போது எண்ணெய் (ஆயில்), காற்று, வாகன ஒலிக்கருவி, பெட்ரோல் இவைகள் சரியாக இருக்கிறதா? என நன்கு கவனித்து பின் ஓட்ட வேண்டும்.
வாகனத்தை ஓட்டுவதற்கு முன்பு இருசக்கர வாகன (ஸ்டாண்டு) தாங்கியை எடுத்துவிட்டு ஓட்டுங்கள். இல்லாவிடில் வாகனத்திற்கும், உங்களுக்கும் பெரும் சேதம் ஏற்படும்.
வாகனத்தில் ஓட்டுநர் உரிமம் காப்பீட்டு நகல்கள், மற்ற வாகனம் சம்பந்தப்பட்ட முக்கிய தாள்களை பத்திரமாக வாகனத்திலேயே வைத்திருக்க வேண்டும்.
எச்சரிக்கை :
அலைபேசி பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
சாலையில் செல்லும்போது சிக்னல் விழுந்தால் (சடன் பிரேக்) உடனடியாக வண்டியை நிறுத்தாதீர்கள். அவ்வாறு செய்தால் பின்னால் வரும் வாகனம் உங்கள் மீது இடித்துவிடும்.
நடுரோட்டில் வாகனம் ஓட்ட வேண்டாம். அவ்வாறு செல்வதால் பெரும் வாகனங்கள் செல்வது கடினம்.
உங்களுக்கு பின்னால் வருபவர்கள் ஒலி எழுப்பினால் வழிவிடுங்கள்.
உங்கள் வாகனத்தின் பக்கக்கண்ணாடியை பார்க்காமல் இடது, வலதுபுறம் திரும்பாதீர்கள்.
உங்களுக்கு முன்பு செல்லும் வாகனத்தை முந்த வேண்டும் என்றால் முதலில் வாகன ஒலி எழுப்பி, பின்பு வாகன வேகத்தைக் கூட்டி வலதுபுறமாக முந்துங்கள்.
கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து வாகனத்தை ஓட்டுங்கள்.
மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டாதீர்கள்.
வாகனம் ஓட்டும்போது உங்களுக்கு முன்பு, பின்பு, வலது, இடதுபுறங்களில் வரும் வாகனத்தை கவனித்துக்கொண்டே வாகனத்தை ஓட்டுங்கள்.
வலதுபுறமாகவோ அல்லது இடதுபுறமாகவோ வாகனத்தை திருப்பும் முன் சைகை காட்ட வேண்டும்.
வழித்தடம் மாறும் முன் முறையான சைகையை காட்டி வாகனத்தை செலுத்த வேண்டும்.
வாகன ஓட்டுநர் தனக்குமுன் செல்லும் வாகனத்திற்கும், தனது வாகனத்திற்கும் குறிப்பிட்ட அளவு இடைவெளி இருக்குமாறு சென்றால், வண்டிகள் மோதிக்கொள்ளும் விபத்தினை தவிர்க்கலாம்.
விதிகளை மதிப்போம்.... வேதனைகளை தடுப்போம்...!!
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக