இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
வால்பாறை கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். கோயம்புத்தூரிலிருந்து 109 கி.மீ தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய இடம்தான் வால்பாறை. வால்பாறையின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
சிறப்புகள் :
கூகுள் சர்ச் ஆப்ஷனில் 'செவன்த் ஹெவன்’ என்று டைப் செய்தால், அடுத்த வார்த்தை வால்பாறை என்றுதான் வரும்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆனைமலை மலைத்தொடரில் வால்பாறை அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மேடு பள்ளங்களாக... அந்த மலைப்பகுதியில் எங்கு நோக்கினாலும் பச்சை பசேலென்று கம்பளி போர்த்தப்பட்டது போல தேயிலைத் தோட்டங்கள்.
அதிகாலையில் பனி மூட்டம் மூடியிருக்கும் வேளையிலும், மழைக்காலங்களில் மேகங்கள் உருவாகி தேயிலைத் தோட்டங்களைத் தழுவிச் செல்லும் காட்சி கண்ணுக்கு விருந்து, நெஞ்சிற்கு சுகம், கற்பனைக்கு ஊற்று. வால்பாறை உண்மையிலேயே ஏழாவது சொர்க்கம்தான்.
இம்மலைத்தொடர் தேயிலை தோட்டங்கள் நிறைந்த சுற்றுச்சூழல் மாசற்ற சூழலுடன், பசுமை போர்த்திய மலைகள் மற்றும் அழகிய காடுகளால் மிகுந்த செழிப்பாக உள்ளது. வால்பாறைக்கு பயணம் செய்வது ஒரு இனிய அனுபவத்தை தரும்.
எப்படி செல்வது?
கோயம்புத்தூரிலிருந்து, பொள்ளாச்சி சென்று அங்கிருந்து பேருந்தில் செல்லலாம். வால்பாறையில் ஜீப்புகள் கிடைக்கின்றது. கோவையில் இருந்தே ஒரு வாகனத்தின் மூலம் சென்றால், வழியில் நின்று ஆர அமர ரசித்துக்கொண்டே பயணிக்கலாம்.
விமானம் வழியாக :
கோயம்புத்தூர் விமான நிலையம்.
ரயில் வழியாக :
பொள்ளாச்சி ரயில் நிலையம்.
கோயம்புத்தூர் ரயில் நிலையம்.
எங்கு தங்குவது?
வால்பாறையில் நல்ல விடுதிகள் உள்ள குடில்கள், பங்களாக்கள் உள்ளன. மேலும் பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மற்றும் பழனி போன்ற இடங்களில் பல்வேறு கட்டணங்களுடன் விடுதி வசதிகள் உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள் :
சோலையார் அணை.
பிர்லா.
புல் குன்று.
ஆழியார் அணை.
ஆனைமலை வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா.
கிராஸ் ஹில்ஸ்.
வியூ பாயிண்ட்ஸ்.
சின்னக்கல்லார்.
நல்லமுடி வியூ பாயின்ட்.
நீரார் அணையும், ஊசிமலையும்.
இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா.
பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம்.
குரங்கு நீர்வீழ்ச்சி.
கரமலை அன்னை வேளாங்கன்னி தேவாலயம்.
இதர சுற்றுலாத்தலங்கள் :
மேட்டுப்பாளையம்.
மருதமலை முருகன் கோவில்.
ஈஷா யோகா மையம்.
வெள்ளியங்கிரி மலை.
சிறுவாணி அருவி.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக