இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
மூலவர் : விருத்தபுரீஸ்வரர் (பழம்பதிநாதர்).
தல விருட்சம் : புன்னை, சதுரகள்ளி, மகிழம், குருந்த மரம்.
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்பு.
ஊர் : திருப்புனவாசல்.
மாவட்டம் : புதுக்கோட்டை.
தல வரலாறு :
பிரம்மா படைக்கும் தொழிலை, ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாமல், செய்த தவறுக்காக இழக்க வேண்டியதாயிற்று. பார்வதியின் அறிவுரைப்படி, பூலோகத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, மீண்டும் தனது தொழிலைப் பெற பூஜை செய்து வந்தார்.
லிங்க அபிஷேகத்திற்காக தீர்த்தம் ஒன்றை உருவாக்கினார். பிரம்மன் உருவாக்கிய தீர்த்தம் என்பதால் பிரம்ம தீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டது. நான்கு முகங்களைக் கொண்டவர் என்பதால், லிங்கத்தின் நான்கு பகுதிகளிலும் சிவமுகத்தை உருவாக்கினார். இது சதுர்முக லிங்கம் எனப்பட்டது.
சதுர் என்றால் நான்கு என்று பொருள். இந்த லிங்கமே இங்கு வழிபாட்டில் இருந்தது. பிற்காலத்தில், இரண்டாம் சுந்தர பாண்டியன், சோழநாட்டு பாணியையும், பாண்டியநாட்டு பாணியையும் கலந்து ஒரு கோவிலை எழுப்பினான்.
சோழர் கோவில்களில், ராஜகோபுரம் சிறிதாகவும், விமானம் உயரமாகவும் இருக்கும். பாண்டியர் கோவில்களில் இதற்கு நேர்மாறாக இருக்கும். இது கலப்படக் கோவில் என்பதால், ராஜகோபுரமும், விமானமும் மிக உயரமாக அமைக்கப்பட்டது.
மூலஸ்தானத்தில் பிரம்மாண்டமான ஆவுடையாருடன் கூடிய லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவரை விருத்தபுரீஸ்வரர் என அழைத்தனர். விருத்தம் என்றால் பழமை. இவர் பழம்பதிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாவே வணங்கிய தலம் என்பதால், இது மிகப்பழமையான ஊராகக் கருதப்படுகிறது.
தல பெருமை :
வைகாசி விசாகத்தன்று மூலவரின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் பட்டு சூரியபூஜை நடக்கிறது. தஞ்சையை விட பெரிய ஆவுடை உள்ள கோவில் ஆகும். இவ்வளவு பெரிய ஆவுடையை வேறு எந்த கோவிலிலும் பார்க்க முடியாது. இதுவே இத்தலத்தில் மிகச்சிறந்த சிறப்பம்சமாகும்.
பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் :
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தொட்டில் கட்டும் வழக்கமும், செவ்வாய்க்கே தோஷம் போக்கிய இத்தலத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும் என்கிறார்கள். கேட்டதை கொடுக்கும் சிவபெருமானுக்கு வேஷ்டியும் துண்டும் சிவனுக்கென தனியாக நெய்து காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
திருவிழா :
இத்தலத்தில் வைகாசி விசாகம் 11 நாள் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
முகவரி :
அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் (பழம்பதிநாதர்) திருக்கோவில்,
திருப்புனவாசல்-614 629,
புதுக்கோட்டை மாவட்டம்,
போன் : 91- 4371-239 212, 99652 11768.
செல்லும் வழி :
சென்னை - பாண்டிச்சேரி பகுதியிலிருந்து வருபவர்கள் திருச்சி வழியாக புதுக்கோட்டை வந்து, அங்கிருந்து 30 கி.மீ., தொலைவிலுள்ள அறந்தாங்கியை அடைய வேண்டும். இங்கிருந்து 42 கி.மீ., தொலைவிலுள்ள திருப்புனவாசலுக்கு பேருந்து வசதி உள்ளன.
மதுரையில் இருந்து செல்பவர்கள் காரைக்குடி வழியாக அறந்தாங்கி சென்று திருப்புனவாசலை அடையலாம். அல்லது தொண்டி வழியாக எஸ்.பி.பட்டினம் சென்று அங்கிருந்து திருப்புனவாசலை அடையலாம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக