வெள்ளி, 14 ஜூன், 2019

கிச்சு கிச்சு தம்பலம்

Image result for கிச்சு கிச்சு தாம்பூலம்
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com


கிச்சு கிச்சு தாம்பாலம்  சிறுவர், சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. இது சிறுமணல் கரையில் துரும்பை மறைத்து கண்டுபிடிக்கச் செய்யும் விளையாட்டு ஆகும்.

எத்தனை பேர் விளையாடலாம்?

இரண்டு பேர்.

விளையாட தேவையானது :

கொஞ்சம் மணல்

சிறிய குச்சி

எப்படி விளையாடுவது?

விளையாடும் இரண்டு நபர் நேரெதிராக அமர்ந்துகொள்ள வேண்டும். நடுவில் ஒரு அடி நீளத்திற்கு மணல் அல்லது மண்ணை நீளவாக்கில் குவித்துக்கொள்ள வேண்டும்.

யாராவது ஒருவர் கையில் சிறிய குச்சி ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கிச்சு கிச்சு தம்பலம்...

கிய்யா கிய்யா தம்பலம்...

மச்சு மச்சு தம்பலம்...

மாயா மாயா தம்பலம்...
என பாடிக்கொண்டே நீளவாக்கில் குவித்து வைத்திருக்கும் மணல் அல்லது மண்ணுக்குள்ளே அந்த குச்சியை மறைத்து வைக்க வேண்டும்.

எடுத்த உடனே மறைத்து வைக்காமல், மணலை முன்னும், பின்னும் தள்ளிக்கொண்டே அந்த சிறிய குச்சியை மறைத்து வைக்க வேண்டும். அப்பொழுது எதிரே அமர்ந்திருப்பவர் கண்களை மூடிக்கொள்ள வேண்டும். கண்களை திறக்கவும் என்று சொல்லும்போது தான் கண்களை திறக்க வேண்டும்.

இப்பொழுது எதிரில் இருப்பவர் அந்த குச்சி எங்கே உள்ளது என்பதை தங்களது இரு கைகளை பின்னி மறைக்க வேண்டும்.

கையை மூடிய இடத்தில் அந்த குச்சி இல்லை என்றால், மீண்டும் அந்த குச்சியை வைத்தவரே விளையாட வேண்டும்.

அவுட் :

இரு கைகளை பின்னி மறைத்த இடத்தில் அந்த குச்சி இருந்தால் குச்சியை மறைத்து வைத்தவர் அவுட்.

அதன்பின் அவுட் ஆனவரின் இரண்டு கைகளையும் முன்னே நீட்ட சொல்லி கை நிறைய மண்ணை நிரப்பி அதன் நடுவில் அந்த குச்சியை சொருக வேண்டும்.

பின் அவரின் கண்களை பொத்திக் கூட்டிக்கொண்டு ரகசியமான ஒரு இடத்தில் மண்ணோடு குச்சியையும் சேர்த்து அப்படியே குவித்து வைக்க வேண்டும்.

அதன்பின் கண்களை திறக்காமல் மீண்டும் பழைய இடத்திற்கே அவரை கூட்டிவர வேண்டும். பின் அவரின் கண்களை திறந்துவிட்டு, இப்போ அந்த குச்சி எங்கே இருக்கிறது? கண்டுபிடி... என்று சொல்ல வேண்டும்.

குச்சியை வைத்த இடத்தை சரியாக கண்டுபிடித்தால், மற்றொருவர் இந்த விளையாட்டை தொடர வேண்டும்.

ஏன் விளையாட வேண்டும்?

துப்பறியும் திறன் மேம்படும்.

மதிநுட்பம் கூடும்.

தெளிந்த சிந்தனை மேலோங்கும்.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்