Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 1 ஜூன், 2019

மின்சார விபத்து

Image result for மின்சார விபத்து 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

மழைக் காலங்களில் மின்சார விபத்து சர்வ சாதாரணம். அண்மைக் காலங்களில் வீட்டிலேயே மின்சார விபத்து பல்வேறு விதங்களில் ஏற்படுகிறது. இந்த எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் விபத்துக்களை நாம் எப்படி சமாளிப்பது?
மின் தாக்குதலுக்கு உள்ளானவரை காப்பாற்ற போகிறவர்கள், முதலில் அவரை எந்தக் காரணம் கொண்டும் நேரடியாகத் தொட்டு விடக் கூடாது. மெயின் ஸ்விட்சை ஆஃப் பண்ணி மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும். வோல்டேஜ் அதிகமாக இருக்கும்போது, பிளக் பாயின்ட், ஸ்விட்ச், எலெக்ட்ரிகல் சர்க்யூட் போன்ற மின்சார உபகரணங்களில் இருந்து அவரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இதற்கு கண்டிப்பாக மரத்தால் (dry wood) செய்யப்பட்ட பொருட்களைத் தான் பயன்படுத்த வேண்டும்.
தாக்குதலுக்கு ஆளானவரைச் சுற்றி தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உயர மான இடத்தில் இருந்து மின்சாரம் தாக்கிக் கீழே விழும்போது, கழுத்துப் பகுதியில் அடிபட நிச்சயம் வாய்ப்பு உள்ளது. எனவே, உயரமான இடங்களில் இருந்து மின்சாரம் தாக்கி கீழே விழுந்தவரின் கழுத்தை அசைக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
அவருக்கு சுயநினைவு உள்ளதா? எந்தவித சிரமமும் இல்லாமல் சுவாசிக்க முடிகிறதா? இதையெல்லாம் பரிசோதனை செய்ய வேண்டும். வீட்டில் உள்ளவர்களின் உடலில் ஈரப்பதம் இருந்தாலும், பாதுகாப்பான காலணிகள் அணியாமல் இருந்தாலும் வீட்டில் உபயோகப்படுத்தப்படும் குறைந்த அளவு மின்சாரத்தாலும் ஆபத்து ஏற்படும். மின்சாரம் தாக்கி சுயநினைவு இழந்தவர்கள், சுவாசிக்க சிரமப்படுபவர்கள், நெஞ்சுவலி, படபடப்பு மற்றும் தீக்காயங்களால் அவதிப்படுபவர்கள், மின்சார தாக்குதலுக்கு ஆளான குழந்தைகள், தாய்மை அடைந்த பெண்கள் ஆகியோரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
பொது இடங்களில் யாராவது மின்சாரம் தாக்கப்பட்டு கிடந்தால், உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு மூச்சு சுவாசம் மற்றும் நாடித்துடிப்பு சீராக இல்லையென்றால், முதலுதவி செய்ய தெரிந்தவர்கள் நெஞ்சை அழுத்திவிடுதல் என்ற Cardiopulmonary resuscitation என்ற C.P.R. முதலுதவி சிகிச்சையை செய்வது அவசியம். மயக்கமாக இருப்பவர்களுக்கு வாய் வழியாக சாப்பிட எதுவும் கொடுக்கக்கூடாது. அவ்வாறு கொடுக்கப்படும் உணவுப் பொருளால் சுவாசக் குழாய்க்குள் அடைப்பு ஏற்பட்டு நிலைமை இன்னும் மோசமாகும்.
மின்சார தாக்குதல் காரணமாக உடலில் ஏற்பட்ட தீக்காயங்களை துணியால் சுற்றக்கூடாது. தீப்புண்கள் மீது ஐஸ்கட்டி வைப்பதோடு, குளிர்ந்த நீரையும் மெதுவாக ஊற்றலாம். கரன்ட் ஷாக்கால் உள்ளுறுப்புகள் பாதிப்பு அடைய வாய்ப்புகள் அதிகம். முக்கியமாக, இதயம், மூளை, சதைப் பகுதிகள் பாதிப்பு அடையும். கிட்னியும் பாதிக்கப்படலாம். மின்சார தாக்குதலுக்கு உள்ளானவர்களின் முகத்தில் தண்ணீர் தெளிக்கக் கூடாது. வலிப்பு மாதிரி அவர்களுக்கு ஏற்பட்டால், இரும்புப் பொருள் எதுவும் கொடுக்கக் கூடாது.
அவர்களை இடதுபுறமாக படுக்க வைப்பது நல்லது. கரன்ட் ஷாக் காரணமாக கை, கால்களை உதறும்போது எலும்புகள் உடைய வாய்ப்பு உள்ளது. எனவே, கை, கால்கள் இயல்புக்கு மாறான நிலையில் இருந்தால் அவை அசையாமல் இருக்கும்படி நீளமான பொருளுடன் சேர்த்து கட்டி மருத்துவமனைக்கு கொண்டு வருவது நல்லது. முதலுதவி சிகிச்சையைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு வந்த பிறகும் சுவாசம், இதயத்துடிப்பு சீராக இல்லையென்றால், C.P.R. முதலுதவி சிகிச்சையைத் தொடர்ந்து, உரிய சிகிச்சைகள் கொடுக்க வேண்டும்.
எனினும், முதலுதவி எனும் பெயரில் தவறாக எதுவும் செய்வதைவிட, நேரத்தை வீணாக்காமல் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது நல்லது.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  

உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 

மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 

உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

Follow Us:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக