Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 13 ஜூன், 2019

சின்னக்குற்றாலம் : கும்பக்கரை அருவி !!

Image result for சின்னக்குற்றாலம் : கும்பக்கரை அருவி !!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com




தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் இயற்கை எழில் சூழ மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து நீர்வரத்து வருகிறது.

தேனி மாவட்டத்தின் 'சின்னக்குற்றாலம்" என அழைக்கப்படுவது கும்பக்கரை அருவி தான்.

கொடைக்கானல் மலையில் இருந்து உருவாகும் நீரூற்று மலையடிவாரத்தை அடையும் அழகான இடம்தான் கும்பக்கரை எனப்படுகின்றது.

சிறப்புகள் :

இயற்கையின் ஒரு விந்தை இந்த அருவி. பாறைகளிடையே பாய்ந்து வரும் நீரின் மோதலும், கண்ணுக்கு ஒரு கம்பீரமான காட்சியாக அமைகிறது.

கானகத்தின் கண் கவர் காட்சிகள் இந்நீர்வீழ்ச்சிக்கு மேலும் அழகை கூட்டுகின்றன. கொட்டும் அருவியின் இரைச்சலும், பறவைகளின் விநோத ஒலிகளும் தாலாட்டு பாடுவதைப் போலவே அமைந்துள்ளது.

இந்த அருவியின் நீரில் மூலிகைகள் மற்றும் தாதுப்பொருட்களின் நற்குணங்கள் பெருகியுள்ளது.

இயற்கையாகவே உருவாகியுள்ள இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றிலும் எழும் பறவைகளின் கீச்சிடும் குரல்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு நல்ல வரவேற்பளிக்கும் அம்சமாகும். இந்த கும்பக்கரை நீர்வீழ்ச்சி இரண்டு அடுக்குகளையுடையது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்நீர்வீழ்ச்சி கொடைக்கானல் அருகில் உள்ள பாம்பாறு பகுதியில் தோன்றி பாறைகளிடையே பாய்ந்து கீழே நீர்வீழ்ச்சியாக விழுகிறது.

மழைக் காலத்தில் நீர்வீழ்ச்சியில் விழும் தண்ணீர் அதிகமாகவும், கோடை காலத்தில் குறைவாகவும் இருக்கும். நீரின் வேகம் அதிகமாகும்போது அருவியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

எப்படி செல்வது?

தேனி மாவட்டம் பெரியகுளம் நகரிலிருந்து இந்த நீர்வீழ்ச்சிக்கு பேருந்து வசதி உள்ளது. திண்டுக்கல்லில் இருந்தும் பெரியகுளத்திற்குச் சென்று அங்கிருந்து கும்பக்கரையை அடையலாம்.

விமானம் வழியாக :

மதுரை விமான நிலையம் அருகில் உள்ளது.

ரயில் வழியாக :

மதுரை ரயில் நிலையம் அருகில் உள்ளது.

செல்லும் காலம் :

செப்டம்பர் முதல் ஜனவரி வரை உள்ள காலங்களில் சென்று வரலாம்.

எங்கு தங்குவது?

பெரியகுளத்தில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளது.

பார்க்க வேண்டிய இடங்கள் :

சோத்துப்பாறை.

கும்பக்கரை நீர்வீழ்ச்சிப் பகுதியில் இந்த நீர்வீழ்ச்சி தவிர தண்ணீர் செல்லும் தடங்களிலுள்ள வழுக்குப் பாறை, யானைக் கெஜம், உரல் கெஜம், பாம்பு கெஜம் என்று அழைக்கப்படும் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நீராடி மகிழ்கின்றனர்.

இதர சுற்றுலாத்தலங்கள் :

கொடைக்கானல்.
சுருளி அருவி.
மேகமலை அருவி (சின்னசுருளி).
வைகை அணை.
போடி மெட்டு.
வனவியல் பயிற்சிக் கல்லூரி.
சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவில்.
குரங்கனி.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக