இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
மூலவர் : சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்).
அம்மன் : பெரிய நாயகி.
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்பு.
ஊர் : திருவாலந்துறை.
மாவட்டம் : பெரம்பலூர்.
தல வரலாறு :
ஒரு சமயம் திருமால், பிரம்மா இருவருக்கும் தங்களுள் யார் பெரியவர் என்ற போட்டி உருவானது. அவர்களுக்கு திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தந்த சிவபெருமான் உண்மையைப் புரிய வைத்தார். மேலும் இந்த தலத்திலேயே சிவபெருமான் அவர்களின் சந்தேகத்தைத் தீர்த்து வைத்தார்.
திருமாலும் அயனும் சிவனை வழிபட்ட துறை எனும் பொருளில் திருமால் அயன்துறை என வழங்கி, காலப்போக்கில் திருவாலந்துறையென மருவியதாகச் சொல்லப்படுகிறது. கூகையூர் கோட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த மூன்றாம் குலோத்துங்க மன்னன் வானவ கோவராயர் கி.பி. 1179-ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் ஒன்றாம் தேதி இவ்வாலயத்துக்கு வருகை புரிந்திருக்கிறார்.
இறை தரிசனத்தின்போது இறைவனுக்கு அருகே படமெடுத்த கோலத்தில் நாகம் ஒன்று காட்சி தந்து மறைந்தது. இதனையடுத்து, அம்மன்னன் இவ்வாலயத்திற்கு நிலங்கள் தந்து இதனை விரிவுபடுத்திக் கட்டினான் என்று ஆலய வரலாறு கூறுகிறது.
தல பெருமை :
திருமாலும், பிரம்மனும் சிவபெருமானிடம் வந்து தங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டது முதல், கரிகாலச் சோழன் வந்து வணங்கியது வரை பல சிறப்புகளைக் கொண்டது இக்கோவில்.
பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் :
ராகு-கேது தோஷம், நாகதோஷம், சனி பாதிப்பு உள்ளவர்கள் இக்கோயிலில் உள்ள கிணற்று நீரில் நீராடி பிரார்த்தனை செய்தால் பாதிப்பு குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள இறைவனுக்கு புது வஸ்திரம் சார்த்தியும், நெய் அபிஷேகம் செய்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
திருவிழா :
இத்தலத்தில் சிவராத்திரி, பிரதோஷம் ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 9 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
முகவரி :
அருள்மிகு சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோவில்,
திருவாலந்துறை,
பெரம்பலூர் மாவட்டம்.
செல்லும் வழி :
பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 25 கிலோமீட்டர் செல்லும் தொலைவில் இக்கோவில் உள்ளது. பெரம்பலூர் மாவட்டம், ராமநத்தத்திலிருந்து திருவாலந்துறையில் அருள்மிகு சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோவில் அமைந்துள்ளது. பேருந்து வசதியும் உள்ளன.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக