Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 13 ஜூன், 2019

கொல கொலயா முந்திரிக்கா


Image result for கொல கொலயா முந்திரிக்கா 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com

 அப்போதெல்லாம் மரத்தடியில் விளையாடினோம்... நோய் நொடிகள் இல்லாமல் வாழ்ந்தோம்...

 ஒன்றாக சேர்ந்து விளையாடிய காலங்கள் போய்... இன்று நான்கு சுவற்றுக்குள்ளேயே விளையாடும் காலம் வந்துவிட்டது.

 இதற்கு முக்கிய காரணம் குழந்தைகளின் பெற்றோர்களே. வெளியே விளையாடுவதை அனுமதிக்காமல் கைப்பேசியில் விளையாடுவதை தங்களின் குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துகிறார்கள்.

 எனவே, கைப்பேசியில் விளையாடுவதை தவிர்த்து நம் கிராமத்து விளையாட்டுகளை சொல்லி கொடுப்போம்.

எத்தனை பேர் விளையாடலாம்?

எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் ஒன்றாகச் சேர்ந்து இந்த விளையாட்டை விளையாடலாம்.

எப்படி விளையாடுவது?

இந்த விளையாட்டின்போது இடையிடையே பாடல் வரும். இந்த பாடலை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக பாடுவார்கள்.

முதலில் ஒரு நபரை விளையாட்டின் தொடக்கத்தில் சுற்றிவர தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு மீதமுள்ளவர்கள் வட்டமாக உட்கார்ந்துக்கொள்ள வேண்டும்.

எல்லோரும் வட்டமாக உட்கார்ந்ததும் சுற்றி வருபவர் துண்டு அல்லது துணியைச் சுருட்டிவைத்து கொல கொலயா முந்திரிக்கா... என பாடிக் கொண்டே சுற்றி வருவார். அப்பொழுது வட்டமாக அமர்ந்திருக்கும் மற்ற குழந்தைகளும் நரிய நரிய சுத்தி வா.. என்று பாடுவார்கள்.

அடுத்து, கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்..? என்று சுற்றி வருபவர் கேட்க, எல்லோரும், கூட்டத்தில் இருக்கான் கண்டுபிடி..! என்று ஒரே குரலில் சொல்வார்கள்.

இவ்வாறு பாட்டுப் பாடிக்கொண்டே சுற்றி வருபவர் கையில் வைத்திருக்கும் துணியை யார் பின்னாலாவது அவருக்குத் தெரியாமல் போட்டுவிட்டு வட்டத்தைச் சுற்றி வருவார்.

சுற்றி வருபவரின் கையில் துணி இல்லாததைப் பார்த்துவிட்டு, யார் பின்னால் துணி இருக்கிறதோ, அவர் அந்தத் துணியை எடுத்துக்கொண்டு சுற்றி வருபவரை துரத்திக்கொண்டு போக வேண்டும்.

துணியால் முதுகில் அடிக்க வேண்டும். அப்படி அடித்தால் அவர் அவுட். சுற்றி வருபவர் வேகமாக ஓடி வந்து, யார் பின்னால் துணியைப் போட்டாரோ, அவருடைய இடத்திலே வந்து உட்கார்ந்துவிட்டால் துணியைக் கையில் வைத்திருப்பவர் அவுட்.

ஒருவேளை துணி பின்னால் இருப்பதை உட்கார்ந்திருப்பவர் கவனிக்கவில்லையென்றால், பக்கத்திலே உட்கார்ந்திருப்பவர் சைகையாலேயே சொல்வார்கள். அப்படியும் சொல்வதைக் கவனிக்காமல் இருந்தால், சுற்றி வருபவர் வட்டத்தை ஒரு சுற்று சுற்றி வந்து, பின்னால் போட்ட துணியை எடுப்பார்.

கவனிக்காமல் உட்கார்ந்திருப்பவர் முதுகில் ஒரு போடு போடுவார். உட்கார்ந்திருப்பவர் இப்போது எழுந்து, முதலில் சுற்று வந்தவரை விரட்டிப் பிடிக்க வேண்டும். இதில் அவுட் ஆனவர் யாரோ, அவர் பாட்டுப் பாடிக்கொண்டே விளையாட்டைத் திரும்பவும் விளையாட வேண்டும்.

பயன்கள் :

தங்களுடைய தனித்திறனையும், ஆளுமையையும் வெளிக்கொண்டு வர இந்த விளையாட்டு கற்றுத்தருகிறது.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக