இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Contact us : oorkodangi@gmail.com
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
N.G.K - கேள்வியின் நாயகன்.
என்.ஜி.கே படம் பார்த்துவிட்டு
கிட்டத்தட்ட பெரிய டெக்னீஷியன்கள் கூட்டமே என்னை செம்மத்தியாய் ஏமாற்றி
விட்டார்கள் என்று கடுப்பேறி விட்டது. காரணம் படத்தில் உள்ள அபத்தங்களின்
அணிவகுப்பு. முழுக்க முழுக்க ஸ்பாயிலர் பதிவு. படம் பார்க்காதவங்க ஓடி போயிருங்க.
படத்தின் முதல் காட்சியில் இடி
மின்னல்களுக்கு இடையே மண்ணிலிருந்து புறப்படத் தாயார் போல எழுந்து கொள்கிறார்.
பின்னர் வீட்டின் அருகே பைக்கை வைத்துவிட்டு, தன் வீட்டிற்கே பைப் பிடித்து
ஏறுகிறார்?. ஏதாவது தீவிரவாத செயலில், புரட்சி கூட்டத்தின் தலைவனா? என்று
பார்த்தால் அப்படியெல்லாம் இல்லை. எம்.டெக், பிஎச்டி படித்துவிட்டு, ஆர்கானிக்
விவசாயம் பார்க்கிறாராம். நட்ட நடு ஹாலில் அம்மாவின் முன்னால் ஒரே குல்பியை
ஆளுக்கொரு முறை சப்பிக் கொள்கிறார்கள்.
என்.ஜி.கே இருக்கும்
ஸ்ரீவில்லிப்புத்தூரில் இவரால் நான் ஆர்கானிக் வியாபாரம் படுத்துவிட்டதால்
எல்லோரும் சேர்ந்து இவர் ஆர்கானிக் விவசாயம் செய்ய கூடாது என்கிறார்கள். அதனால்
இவரின் வயல் வெளிகளை விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு கெடுக்கிறார்கள். வீட்டை
எல்லாம் அடித்து நொறுக்குகிறார்கள். ஏன்?
எம்.டெக், பிஎச்டி படித்தவருக்கு ஒரு
எம்.எல்.ஏ, கவுன்சிலரின் பதவியின் பவர் தெரியாது என்பதை நம்புகிற அளவிற்கு
காட்சிகள் அமைக்கப்படாததால் சூர்யாவை பார்க்க பாவமாய் இருக்கிறது.
ஏன் எல்லோரும் “ஹலோ யாராச்சும்
இருக்கீங்களா? “ என்று தனுஷ் புதுப்பேட்டையில் ஜெயில் பேசுவது போலவே கத்தி கத்தி
பேசிக் கொண்டிருக்கிறார்கள்?.
500 பேரை கூட்டி வந்து கட்சியில்
சேர்க்கிறேன் என்று சொல்லி சேர்க்கிறார் எம்.ஜி.கே. எப்படி?
என்.ஜி.கேவின் அஜெண்டாதான் என்ன?
புகைப்போட்டால் அருகில் இருக்கும்
போலீஸுக்கு கூட தெரியாதா?
ஏற்கனவே இவரின் நடவடிக்கையை ஆளாளுக்கு
ஜூம் போட்டு டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.பின் எப்படி யாருக்கும்
தெரியாமல் போனது?
கார்பரேட் முதலாளிகளை சந்திக்க
வேண்டுமென்கிறார் என்.ஜி.கே. அது என்ன ஆனது?
வானதிக்கும் என்.ஜிக்கேவுக்கும் இடையே
ரிலேஷன்சிப் வர காரணம்?
எதற்காக ஹை கமாண்ட் ஆபீஸுக்கு
எம்.எல்.ஏ கையில் ஒர் பெட்டியை அணைத்தபடி பயந்து போகிறார்? எதற்காக? அந்த
பெட்டியில் என்ன இருக்கிறது?.
எதற்காக வானதியின் பிஸ்டலை எடுத்து
வைத்துக் கொண்டு வானதியில் அறையில் இருக்கிறார் என்.ஜி.கே?
ஒருவனை ஒழிக்க நினைக்கும் எதிர்கட்சி
தலைவர் எதற்காக அவருக்கே பாராட்டு விழா நடத்த வேண்டும்?
மீடியா எதிரே பாராட்டுவது ஓகே.
அதுவும் சுத்தத்தமிழில் பத்து நிமிஷம் எதற்காக பொண்வண்ணன் பேசுகிறார்?. அதுவும்
போட்டோகிராபர் எல்லாம்
அவரது பின்பக்கம் இருக்கும் போது?
எதற்காக சைக்கிளில் போக வேண்டும்?
ஊருக்கே உழைக்கும் என்.ஜி.கேவை
தாக்குகிறார்கள் ஒருவரும் உதவிக்கு கூட வருவதில்லையே ஏன்?
போலீஸ்காரர் ஒருவர் இந்த பக்கம்
போகக்கூடாது மார்கெட் வழியா போ என யாருக்கு பாராட்டு விழா நடத்துகிறார்களோ அவரையே
அடையாளம் தெரியாமல் சொல்வது கூட ஓகே ஆனால் அங்கிருக்கும் ஒருவருக்கு கூடவா
தெரியாது?
க்ளைமேக்ஸில் அத்தனை கூட்டத்திற்கு
நடுவில் என்.ஜி.கேவை காப்பாற்ற வானதி துப்பாக்கியால் சுடுகிறாள். ஆனால் ஊரும்
சரி போலீசும் சரி கூட்டத்தை கண்ட்ரோல்
பண்ணிக் கொண்டிருக்கிறது ஏன்?
ஊருக்கே நல்லவரான என்.ஜி.கேவை
காப்பாற்ற ஏன் ஒருவரும் வரவில்லை?
எதற்காக அம்மா அப்பாவை கொல்ல
வேண்டும்.?
அந்த பாடல் எதற்காக படமாக்கப்பட்டது?
என்.ஜி.கேவின் அப்பா எதோ ஒரு ஸ்பெஷல்
லைன் போட்டு ஆர்மி ஆளுடன் பேசுகிறார் அது எதுக்காக?
இப்படத்தில் நல்லதே இல்லையா? என்று
கேட்டீர்களானால் இருக்கிறது. அடிபட்ட தொண்டரை அழைத்து வந்து படியேறி எம்.ஜி.ஆர்
பேக்ட்ராபில் அரசியலுக்கு வரப்போவதை காட்டும் காட்சி. சூர்யாவின் நடிப்பு.
பர்பியூம் காட்சி என ஒரு சில.
எத்தனையோ படங்களை பார்க்கிறோம். அதில்
எல்லாம் எத்தனையோ கேள்விகள் படம் பார்த்தபின் வருகிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு
இப்படி இத்தனை கேள்விகள் கேட்கிறாயே? என்று கேட்பீர்களானால் அந்த படங்கள் எல்லாம்
படம் பார்த்த பின் எழுந்த கேள்விகள். இது படம் பார்க்கும் போதே எழுந்த கேள்விகள்.
ஒரு படம் பார்க்கும் போது கேள்விகள் எழக்கூடாது. அப்படி எழுந்தால் அந்த படம் நம்மை
ஈர்க்கவில்லை என்று அர்த்தம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத
கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என
வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக