Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 2 ஜூலை, 2019

பேஸ்புக் வழங்கும் மாதம் ரூ.1400 வருமானம் : பின்னாடி வில்லங்கம் இருக்குமா?



 study from facebook  சிறப்பம்சம்:


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


பேஸ்புக் பொறுத்தவரை உலகளவில் பல மில்லயன் மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக இந்த தளத்தில் தகவல்கள், செய்திகள் மற்றும் பலவேறு புதிய அனுபவங்களைப் பெற முடியும். மேலும் இந்த பேஸ்புக் நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்த உள்ளது.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் கிட்டத்தட்ட 1400 ரூபாயை அனைத்து பயனர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது, அதன்படி இதற்கு நாம் செய்ய வேண்டியது ஒரே ஒரு ஆப் இன்ஸ்டால் செய்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியென்ன அப்ளிகேஷன் அது?
அதைப் பயன்படுத்தும் போது எதற்கு நமக்கு 1400 ரூபாய் கொடுக்க வேண்டும்? இது பாதுகாப்பானதா? என்ற கேள்வி வரும். இதை முழுமையாகத் தெரிந்துகொள்ள இந்த கட்டுரையை முழுமையாகப் படிக்கவும்.

முன்னால் சொன்னது போல் பேஸ்புக் தளத்தை உலகளவில் பல மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர், இந்த தளத்தைப் பயன்படுத்த நம்மிடம் அவர்கள் எந்தவித கட்டணமும் கேட்பதில்லை, ஆனால் அவர்கள் மட்டும் பில்லியன் கணக்கில் சம்பாதிக்கின்றனர், எப்படித் தெரியுமா?

நம் பயன்படுத்தும் டேட்டா-வை வைத்துத் தான் சம்பாதிக்கின்றனர்.

பிளிப்கார்ட் தளத்தில்..
ஒரு உதரணமாக நீங்கள் பிளிப்கார்ட் தளத்தில் மொபைல் அல்லது எதாவது ஒரு பொருளை பாரத்துவிட்டு வந்தால், அதே மொபைல் அதே பொருள் உங்களது பேஸ்புக் தளத்திலும் வரும். அது எப்படியென்றால், நம்மை முழுக்க முழுக்க கண்காணிக்கிறது பேஸ்புக்.

மற்ற நிறுவனங்களுக்கு கொடுத்து சம்பாதிக்கும்
உண்மை என்னவென்றால் நமது டேட்டாவையெல்லாம் சேகரித்து மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்து அதன் மூலம் சம்பாதிக்கிறது பேஸ்புக் நிறுவனம். குறிப்பாக நமது அனைத்து தகவலையும் பேஸ்புக் தளத்தில் கொடுத்துவிடுகிறோம், மொபைல் எண், அப்பா பெயர், என்ன படிப்பு? என்ன வேலை? பிடித்த உணவு, உடை,ஸ்டேட்டஸ் போன்ற அனைத்து தகவலையும் அந்த பேஸ்புக் தளத்தில் நாம் கொடுத்துவிடுகிறோம்.

இது போன்ற சிறு சிறு தகவல்களையும் எடுத்து பேஸ்புக் நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்குக் கொடுத்துச் சம்பாதிக்கும்.
 எதிர்கால திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும்
தெரிந்தே டேட்டாவை எடுக்க முடிவு செய்துள்ளது
அண்மையில் பல்வேறு பயனர்களின் டேட்டாகளை முறைகேடாக எடுத்து பேஸ்புக் விற்றுவிட்டது எனப் புகார்கள் வந்தது, அதை ஒப்புக் கொண்டது பேஸ்புக் நிறுவனம். இனிமேல் பயனர்களுக்குத் தெரிந்தே டேட்டாவை எடுக்க முடிவு செய்துள்ளது பேஸ்புக், அதற்கு வேண்டி study from facebook என்ற அப்ளிகேஷனை கொண்டுவந்துள்ளது அந்நிறுவனம்.

எதிர்கால திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும்
Study from facebook என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தி நமக்கு தெரிந்தே நமது தகவல்களை வாங்குகிறது பேஸ்புக், எப்படியென்றால் நம் போனில் என்னென்ன அப்ளிகேஷன் பயன்படுத்துகிறோம் என்ற முழுத் தகவலையும் எடுத்துக் கொள்ளும்

இந்த புதிய அப்ளிகேஷன். குறிப்பாக இந்த அப்ளிகேஷன் மூலம் எடுக்கப்பட்ட பயனர்களின் டேட்டாவை விற்காமல் பேஸ்புக் நிறுவனமே தனது எதிர்கால திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் எனத் தெரிவிக்க்பபட்டுள்ளது.

குறிப்பு: நீங்கள் போனில் பயன்படுத்தும் தனித்தனி அப்ளிகேஷன்களுக்கு பதிலாக பேஸ்புக் தளத்திலேயே அனைத்துவிதமான அப்ளிகேஷன்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது பேஸ்புக் நிறுவனம்.

Study From Facebook சிறப்பம்சம்:
Study from facebook பிளே ஸ்டோர் தளத்தில் இருக்கும், ஆனால் இந்த அப்ளிகேஷனை உங்களது போனில் நேரடியாக இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியாது. study from facebookசார்பாக ஒவ்வொரு பயனருக்கும் தனித்தனி அழைப்பிதழ் வரும். இந்த அழைப்பிதழ் வந்த பிறகு தான் இந்த அப்ளிகேஷனை செயல்படுத்த (பயன்படுத்த) முடியும்.

இந்த அப்ளிகேஷன் உள்நுழைந்த பின்பு கேள்விகள் கேட்கப்படும்.. அது என்னவென்றால்
 1.நீங்கள் அதிகம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் எது?
 2.ஒரு அப்ளிகேஷனை எத்தனை மணி நேரம் பயன்படுத்துகிறீர்கள் 3.நீங்கள் எந்த நாடு? உங்களுடைய வேலை? என்ன சம்பளம்?
4.நீங்கள் எந்த நெட்வொர்க் பயன்படுத்துகிறீர்கள்
5.நீங்கள் பயன்படுத்தும் அலைப்பேசி மாடல் மற்றும் மாடல் எண் இதுபோன்ற அனைத்து தகவல்களையும் நம்மிடம் பெற்றுக் கொண்டு மாதம் ரூ.1400-வரை வழங்குகிறது பேஸ்புக் நிறுவனம்

ஐடி மற்றும் பாஸ்வேர்டு
பேஸ்புக் நிறுவனம் சார்பில் கூறப்படுவது என்னவென்றால் பெறப்படும் டேட்டா அனைத்தையும் கண்டிப்பாக விற்பனை செய்யப்பட மாட்டாது. எங்களது எதிர்கால திட்டத்திற்கு மட்டுமே இந்த தகவல்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐடி மற்றும் பாஸ்வேர்டு வாங்கப்பட மாட்டாது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு வாய்ப்பு உண்டு:
உங்களுக்குத் தெரிந்தே டேட்டா எடுக்கப்படுகிறது என்றால், உங்களுடைய போன் ஹேக் செய்வதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது, உதாரணமாக உங்களுடைய வங்கிக் கணக்கு சார்ந்த தகவல்களை போனில் வைத்திருந்தால் உடனே ஹேக் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.

ஒருவேளை நீங்கள் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ய விரும்பினால் வங்கி கணக்கு இல்லாத போனில் இன்ஸ்டால் செய்யவும்,அதுவே நல்லது. பின்பு அழைப்பிதழ் வந்தால் மட்டுமே study from facebook அப்ளிகேஷனை பயன்படுத்த முடியும்.

இப்போது ஆண்ட்ராய்டு மொபைலில் மட்டுமே இந்த அப்ளிகேஷனை பயன்படுத்த முடியும், ஐஒஎஸ் இயங்குதளத்தில் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக