Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 2 ஜூலை, 2019

201 முட்டை உணவுகளுடன் கலக்கும் மீனாட்சி அண்ணன்.. கோயமுத்தூரை கலக்கும் "விஜயலட்சுமி ஆம்லெட்"!

கைக்கொடுக்கும் தொழில்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




தொழிலை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றினால் மட்டுமே அதில் நாம் ஜெயிக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டு தான் நம்ம அண்ணன் மீனாட்சி குமார்.

அனைவராலும் மீனாட்சி அண்ணன் என்று பாசமாக அழைக்கப்படும், இவரின் சொந்த ஊர் அருப்புக் கோட்டை. இவருக்கு 4 குழந்தைகள். ஆமாங்க 3 பெண், 1 ஆண் குழந்தைகள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அண்ணன் மீனாட்சி குமாருக்கு உணவக தொழில் என்பது பாரம்பரியத் தொழில் கிடையாது என்பது தான்.

ஆமாங்க தங்க நகை செய்யும் தொழிலாளியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 நகை வடிவமைப்பாளர்
நகை வடிவமைப்பாளர்
அண்ணன் மீனாட்சி குமார் முன்னர் தங்க நகைகளை வடிவமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் நாளுக்கு நாள் தொய்ந்து வரும் தொழிலை விட்டு வேறு ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணியவருக்கு திடீரென உதித்த ஐடியாதான் இந்த ஆம்லெட் கடை.

ஒரு காலத்தில் விளையாட்டாக கற்றுக் கொண்ட இந்த சமையல் கலை, அதிலும் குறிப்பாக இந்த முட்டை உணவுகள் தான் இன்று தனக்கு கைகொடுத்தாக கூறுகிறார் மீனாட்சி குமார்.

கைக்கொடுக்கும் தொழில்
ஒரு காலத்தில் விளையாட்டாக கற்றுக் கொண்ட இந்த சமையல் கலை, அதிலும் குறிப்பாக இந்த முட்டை உணவுகள் தான் இன்று தனக்கு கைகொடுத்தாக கூறுகிறார். எட்டாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் அண்ணனுக்கு இன்னும் இந்த கடையை பெரிய அளவில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதே ஆசை.

தற்போதைக்கு துணைக்கு ஒரு ஆளை மட்டுமே வைத்து, வேலை செய்து வரும் நிலையில், பலரை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்றும் கடையை விரிவுபடுத்த வேண்டும் என்பதே இவரின் தற்போதைய குறிக்கோளாக உள்ளது.

சாப்பிடும் உணவில் வேண்டாமா?
நாம் அணியும் அணிகலன்களிலேயே பல வெரைட்டிகளை எதிர்பார்க்கிறோம். இந்த நிலையில் சாப்பிடும் உணவில் இவ்வாறு வெரைட்டிகளை கொடுத்தால் மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள் என்று எண்ணியதாக கூறுகிறார்.

இதன் வெளிப்பாடாகவே ஆரம்பத்தில் வெறும் 21 வகையான உணவுகளை மட்டுமே கொடுத்து வந்த மீனாட்சி அண்ணன், பின்னர் 51 வகையாகவும், அதன் பின்னர் தற்போது 201 வகையாகவும் கொடுத்து வருகிறார்.

தீபாவளிக்கு பின் வெரைட்டியும் அதிகம்?
தற்போது சிறிய அளவில் மட்டுமே செயல்பட்டு வரும் இந்த "விஜயலட்சுமி ஆம்லெட் கடை" தீபாவளிக்கு பின் பெரிய அளவில் மாற்றம் செய்ய உள்ளதாகவும், அதோடு 201 வகைகளை கொடுத்து வரும் மீனாட்சி அண்ணன் 301 வகைகளை கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகிறார்.

 உணவின் விலை எப்படி?
 இங்கு பரிமாறப்படும் உணவுகள் குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கூறுகிறார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இங்கு வரும் வாடிக்கையாளர்கள், அண்ணனின் கைப்பக்குவத்தோடு பாசத்தையும் சேர்த்தே, இந்த உணவுகள் மிக சுவையாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.


லேண்ட் மார்க்?
கோயமுத்தூர் போரூர் செல்லும் வழியில், பெத்தாக் கவுண்டர் வைத்தியசாலைக்கு பின்புறம் அமைந்துள்ளதாகவும் கூறுகிறார். அதோடு கூகுள் மேப்பில் விஜயலட்சுமி ஆம்லெட் செண்டர் என்று போட்டலே சரியான வழியை காட்டிவிடும் என்கிறார் அண்ணன்.
 என்னென்ன உணவுகள்?
என்னென்ன உணவுகள்?
குறிப்பாக இவரின் கடையில் சிந்தாமணி, சிந்தாமாணி சிக்கன், காளான் முட்டை பொரியல், பூண்டு முட்டை பொரியல், முட்டை பீட்சா, முட்டை, காரா முட்டை பிரட்டல், முட்டை சிந்தாமணி, பிரியாணி முட்டை பொரியல் உள்ளிட்ட 201 வகைகள் உள்ளனவாம்.

இதில் சிந்தாமணி சார்ந்த ஐயிட்டங்கள் தற்போது மிக பேமஸாம்.
 லேண்ட் மார்க்?
உணவுகளுக்கு வைக்க பெயர் தான் இல்லை?
வகை வகையாய் சமைக்கும் அண்ணனுக்கு இந்த உணவுகளுக்கு பெயர்தான் தெரியவில்லையாம். ஆமாங்க.. பல உணவுகளுக்கு பெயரை சாப்பிட வருபவர்களே வைக்கிறார்கள் என்றால் பாருங்களேன். கடை 3 மணிக்கு திறக்கும் அண்ணன் இரவு 10 மணி வரை இருக்கும் என்கிறார்.

தொழிலில் ஈடுபடுவது என்பதை விட வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், அவர்களை தக்க வைக்கும் வகையில் வகை வகையாக அதை அபிவிருத்தி செய்வதுதான் மிக முக்கியம்.

மீனாட்சி அண்ணனின் கைப்பக்குவம் எப்படி மணக்கிறதோ அதேபோல அவரது வியாபார உத்தியும் கலக்குகிறது. பிறகென்ன அண்ணன் கடைக்கு வண்டியை விடலாமே மக்களே.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக