Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 29 ஜூலை, 2019

கே.ஜி.எஃப்-2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு... வில்லன் யார் தெரியுமா?...


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



கே.ஜி.எஃப்-2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றுள்ளது. 

கே.ஜி.எஃப். ஃபீவர்:

நிஜ வாழ்வில் பேருந்து ஓட்டுனரின் மகனாக பிறந்து, ’சினிமா’ என்ற நிழல் வாழ்வில் சூப்பர்ஸ்டாராக திகழ்கிறார் யாஷ். இவர் கே.ஜி.எஃப் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலமாக தம்முடைய திரைப்பயணத்தின் அடுத்தகட்டத்திற்கு சென்றுள்ளார். கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகம் வசூல் ரீதியாகவும், மேக்கிங் ரீதியாகவும் சாதனை மேல் சாதனை படைத்ததைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றது. 


கே.ஜி.எஃப். இரண்டாம் பாகம்:

முதலாவது பாகத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ரசிகர்களின் எதிர்பார்ப்புளை தூண்டி விடும் வகையில் சில ட்விஸ்ட் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அதில் மிக முக்கியமான காட்சியாக கருதப்படுவது அதீரா என்ற வில்லன் கதாபாத்திரத்தின் எழுச்சி. இந்த கதாபாத்திரத்தின் குரல் மட்டுமே முதல் பாகம் முழுக்கவும் கேட்கப்பட்டு வந்த நிலையில் படத்தின் இறுதிக்காட்சி வரை முகம் யாருடையது என்பது மட்டும் மர்மமாகவே இருந்து வந்தது. இதனால், அதீரா கதாபாத்திரத்தில் களமிறங்கி, ராக்கி பாய்க்கு ஈடு கொடுக்கும் அந்த ஒரு வில்லன் யார்? அவர் எந்த மாஸ் நடிகராக இருப்பார்? என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டிருந்தது. இந்த பரபரப்பு சினிமா அப்டேட்டுக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அந்த மாஸ் நடிகர் வேறு யாருமல்ல Mother Of All Collisons என வர்ணிக்கப்படும் சஞ்ஜெய் தத் தான்.


பிறந்தநாள் பரிசு:

'பாலிவுட் சினிமா உலகின் பாபா' என்ற மாஸ் அந்தஸ்துடன் வலம் வருபவர் சஞ்ஜெய் தத். ஹீரோவாக முத்திரை பதித்த இந்த அசுர நடிகனை வில்லனாகவும் திரையில் தோன்ற வைத்து மோதிர முத்திரையை பதித்தது பாலிவுட் சினிமாத்துறை. இடையில் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தபோதும் சினிமா பயணத்தை மட்டும் சஞ்ஜெய் தத் ஒருபோதும் விடுவதாக இல்லை. இன்று அவரது 60-வது பிறந்த நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்ஜெய் தத் நடிக்கவிருக்கும் தகவலை படக்குழு உறுதிபடுத்தியுள்ளது. மேலும், சஞ்ஜெயின் பிறந்தநாள் பரிசாக கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 


ஹீரோவை மிஞ்சிய வில்லன்:

பொதுவாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்றாலே படத்தின் ஹீரோ கதாபாத்திரத்திற்கே அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால், கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏகோபித்த அளவு மாஸ் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ராக்கி பாய் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ள விதத்தை விட, அதீரா கதாபாத்திரம் கனக்கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது கேஜிஎஃப் ரசிகர்களுக்கு. எது எப்படியிருந்தாலும், கேஜிஎஃப் முதல் பாகம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது போல் இரண்டாம் பாகமும் சக்கை போடு போடும் என எதிர்பார்த்து காத்துள்ளனர் யாஷ் ரசிகர்கள். 


பாகுபலி Vs. கேஜிஎஃப்:

பாகுபலி இரண்டாம் பாகத்திற்கு அடுத்தபடியாக கேஜிஎஃப் இரண்டாம் பாகத்திற்குத் தான் இந்தளவு ரசிகர்களின் எதிர்பார்ப்பு கணிசமாக உள்ளது. இது மட்டுமின்றி, இப்படம் புதிய சாதனைகளுடன் வசூல் வேட்டை நடத்தும் என்பது சினிமா விமர்சகர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. கன்னட திரையுலகின் மைல்கல் படமான கேஜிஎஃப் முதல் பாகமானது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என வெவ்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டதைப் போன்றே இரண்டாம் பாகமும் டப் செய்யப்படலாம் என சினிமா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம், ராக்கி பாய் மற்றும் அதீரா இடையிலான காட்சி அமைப்புகள் எந்தளவு மாஸாக வடிவமைக்கப்படும் என்பதை...



என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக