இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
குஜராத்
மாநிலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலமான முந்த்ரா துறைமுகப் பகுதியில் சுமார்
ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் போயிங் விமானங்களை இயக்கும் வகையில் அதானி
குழுமம் தனியார் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
முந்த்ரா
துறைமுகப் பகுதியில் ஏற்கனவே சிறிய ரக விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் இயக்கும்
வகையில் 45 ஹெக்டேர் பரப்பளவில் விமான ஓடு தளம் அமைந்துள்ளது. அதையே தற்போது
விரிவுபடுத்தி, பொது விமான சேவைப் போக்குவரத்துக்காக பயன்படுத்த அதானி குழுமம்
திட்டமிட்டுள்ளது.
குஜராத்தின்
சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள முந்த்ரா பகுதியில் அதானி
குழுமத்தால் கடந்த 1998ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முந்த்ரா துறைமுகமாகும்.
முந்த்ரா போர்ட் கடந்த 2012ஆம் ஆண்டில் அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல்
எக்கனாமிக்கல் ஜோன் (Adani Ports and Special Economical Zone Ltd-APSEZ) என பெயர்
மாற்றம் செய்யப்பட்டது.
இது ஆண்டுக்கு
சுமார் 12 கோடி டன் சரக்குகளை கையாண்டு நாட்டிலேயே அதிக சரக்குகளை கையாளும்
துறைமுகங்களில் முதல் இடத்தில் உள்ளது. அதோடு நாடு முழுவதும் சமார் 10 இடங்களில்
துறைமுகங்களையும் சரக்கு பெட்டகங்களை கையாளும் முனையங்களையும் நடத்தி வருகிறது.
முந்த்ரா
துறைமுகம் அமைந்துள்ள பகுதியில் ஏற்கனவே சிறிய ரக விமானங்களையும்
ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்தும் வகையில் 45 ஹெக்டேர் பரப்பளவில் சிறிய ரக
விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தும் வகையில் ஓடுதளம் அமைந்துள்ளது.
அதையே தற்போது சுமார் ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில், மேலும் 522 ஹெக்டேர்
பரப்பளவுக்கு விரிவுபடுத்தி பொது விமான சேவைப் போக்குவரத்துக்கு பயன்படுத்த அதானி
குழுமம் திட்டமிட்டுள்ளது.
புதிதாக
அமைக்கப்படும் விமான நிலையத்தை அதானி குழுமத்தின் முந்த்ரா சர்வதேச விமான நிலைய
நிறுவனம் பராமரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமான நிலையம்
போயிங் 747-400 ரக விமானங்களை இயக்கும் வகையில் விரிவுபடுத்தி அமைக்கப்பட உள்ளது.
வரும் 2022ஆம் ஆண்டு வாக்கில் விமான சேவை தொடங்கப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான
அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், வனத்துறையும் ஒப்புதல் வழங்கயுள்ளது.
மத்திய அரசின் உதான் (UDAN) திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்புதல்
வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிதாக அமைய
உள்ள விமான ஓடுதளம் சுமார் 4000 மீட்டர் நீளமும் 60 மீட்டர் அகலமும் கொண்டதாக
அமைக்கப்பட உள்ளது. அதேபோல், ஓடுதளத்தை விரிவுபடுத்தி தனியார் போக்குவரத்துக்கு
பயன்படுத்தும் வகையில் மத்திய விமானப் போக்குவரத்து துறை இயக்குநரகமும் அனுமதி
அளித்துள்ளது.
முந்த்ரா விமான
நிலையம் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் நாட்டிலேயே தனியார் வசம் இருக்கும்
மிகப்பெரிய விமான நிலையமாக விளங்கும் என்பது இதன் சிறப்பம்சமாகும். கடந்த பிப்ரவரி
மாதத்தில், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களை பராமரித்து நிர்வகிக்கும்
பொறுப்பை தனியார் வசம் விடும் திட்டத்தை கொண்டு வந்தது.
அதன் முதல்
கட்டமாக அஹமதாபாத், கவுகாத்தி, ஜெய்ப்பூர், லக்னோ, மங்களூரு மற்றும்
திருவனந்தபுரம் ஆகிய ஆறு விமான நிலையங்களை பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பை மோடியின்
நண்பரான அதானி குழுமத்திற்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக