பிளாஸ்டிக் கழிவுகளுக்கு நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும்.. 52 நிறுவனங்களுக்கு அதிரடி நோட்டீஸ்!
புதிய பொடியன்
வியாழன், ஜூலை 11, 2019
நாட்டில்
பிளாஸ்டிக் உபயோகத்தை தடுக்க முக்கிய நடவடிக்கை பல எடுத்து வந்தாலும், அதை
முழுவதுமாக ஒழிக்க முடியவில்லை. அதை
முழுவதும் அகற்ற முடியாவிட்டாலும் கூட, இருக்கும் பிளாஸ்டி கழிவுகளையாவது
மறுசுழற்சி செய்து உபயோகப்படுத்த வேண்டும் என்று அரசு கூறி வருகிறது. ஆனால் அதை பல
ஆன்லைன் நிறுவனங்கள் செய்வதேயில்லை. குறிப்பாக அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட பல
நிறுவனங்களுக்கு அரசு இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாம்..
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்..
இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
ஆமாங்க..
இது குறித்து பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமேசான்,
பிளிப்கார்ட் ,பதஞ்சலி உள்ளிட்ட 52 நிறுவனங்களுக்கு மத்திய மாசு கட்டுப்பாடு
வாரியம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், இதில் பிளாஸ்டிக் கழிவு
மேலாண்மை விதிகள் 2016-ன் படி, உற்பத்தி மற்றும் பேக்கேஜிங்கில் பிளாஸ்டிக்
பயன்படுத்தும் நிறுவனங்கள், அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பொறுப்பையும்
ஏற்க வேண்டும். இதை
நிறுவனங்களோ அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவோ, அந்த பிளாஸ்டிக்கை சேகரித்து மறு
சுழற்சி செய்ய வேண்டும். ஆனால் இதை மேற்கொள்ள தவறியதாகக் அமேசான், பிளிப்கார்ட்,
டானோன், பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் உள்ளிட்ட 52 நிறுவனங்களுக்கு மத்திய அரசு
நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கான
திட்ட அறிக்கையை கால அளவீட்டுடன் தர தவறும் பட்சத்தில் அபராதமும்,
சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
குறிப்பிடத்தக்கது. இந்த
நிலையில் இந்தியாவில் முன்னர் இருந்ததை விட பிளாஸ்டிக் கழிவுகள் உபயோகம்
கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,
பிளாஸ்டிக்கை நிர்வகிப்பதில் சற்று முன்னேற்றம்
கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு Central Pollution
Control Boardன் மதிப்பின் படி, இந்தியாவில் ஒரு நாளைக்கு 15,000 டன் பிளாஸ்டிக்
கழிவுகளை வெளியேற்றப்படுகிறதாம்.
இதில்
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மூலம் வெளியேற்றப்படும் கழிவுகளாக
இருக்கிறதாம். இதில் கிட்டதட்ட 40 சதவிகிதம் சேகரிக்கப்படுவதே இல்லையாம். இவ்வாறு
மறுசுழற்சி செய்யப்படும் இந்த கழிவுகளால் மழை நீரும் மண்ணும் வெகுவாக
பாதிக்கப்படுகின்றனவாம்.
இதில்,
பிளாஸ்டிக் பேக்கேஜிங் தான் முக்கிய பங்களிப்பாளாராக உள்ளதாம். இதனை தடுக்க அரசு
பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழ்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
ஏப்ரல் 30, 2019க்குள் அதற்கான திட்டத்தினையும் தொகுப்பினையும் சமர்பிக்க வேண்டும்
என்றும் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு
இந்த தவறுகளை சரி செய்து கொள்ளாத மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும்
ரூ.1 கோடி அபாராதம் விதிக்கப்படும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக
பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்
குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத
கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம்
என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து
பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக