இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சீத்தாப்பழத்தின்
தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.
சீத்தாப்பழத்தில்-நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து, புரதம்,
கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்
சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில்
அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.
சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.
சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை
பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.
இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள்
ஆறும்.
விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு
கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.
சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை
குணப்படுத்தும்.
சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து
எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி
உதிராது.
சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து
குளித்து வந்தால் முடி உதிராது.
சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு
உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.
சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு
ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில்
தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது.
பேன்களை ஒழிக்கும். பொடுகு காணாமல் போகும்.
சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம்
பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக