இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
விளையாட்டு என்றாலே குழந்தைகளுக்கு ஆர்வம்தான். அதுவும் நண்பர்களோடு சேர்ந்து கூட்டாக விளையாடும் விளையாட்டில் பொழுது கழிவதே தெரியாது.
மீண்டும் மீண்டும் விளையாடும் தூண்டும், சளைக்காத விளையாட்டு தான் மெல்ல வந்து கிள்ளி போ.
எத்தனை பேர் விளையாடலாம்?
10திற்கும் மேற்பட்டோர் விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
முதலில் இரண்டு அணிகளை தனித்தனியாக பிரித்துக்கொள்ள வேண்டும். இரண்டு அணிகளிலும் தலைவர் ஒருவரை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பின் இரண்டு அணியினரும் எதிரெதிராக அமர்ந்துக்கொள்ள வேண்டும். இரண்டு அணி தலைவர்களும் தங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் பழத்தின் பெயரையோ, பூவின் பெயரையோ ரகசியமாக வைக்க வேண்டும்.
யாருக்கு என்ன பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்று எதிரணியினருக்கு தெரியக்கூடாது.
இப்போது விளையாட்டு ஆரம்பிக்கப்படும். இரண்டு அணிக்கும் சுமார் ஐந்து அடியாவது இடைவெளி இருக்க வேண்டும்.
முதல் அணித்தலைவர் எதிரணியில் உள்ள ஒருவரின் கண்களை மூடிக்கொள்ள வேண்டும். மேலும் எதிரணியில் உள்ள மற்றவர்களும் தங்கள் கண்களை மூடிக்கொள்ள வேண்டும் அல்லது கீழே குனிந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது முதல் அணித்தலைவவர் தங்கள் அணியில் உள்ள ஒருவரை மல்லிகைப்பூவே மல்லிகைப்பூவே மெல்ல வந்து கிள்ளிப்போ என்பார்.
உடனே மல்லிகைப்பூ பெயர் கொண்டவர் சத்தமில்லாமல் எழுந்து வந்து கண்ணை மூடியுள்ளவரை கிள்ளி விட்டு போய் அமர்ந்து கொள்வர்.
முதல் அணித்தலைவர், எல்லோரும் தலையை வெட்டி நாய்க்கு போடுங்க.. என்று கூறுவார். உடனே முதல் அணியில் உள்ள அனைவரும் கீழே குனிந்து கொள்வர்.
அதன்பின் முதல் அணி தலைவர், கண்களைத் திறந்து விடுவார். இப்போது கிள்ளு வாங்கியவர் தன்னை கிள்ளிய மல்லிகைப்பூ யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
யார் திருட்டு முழி முழிக்கிறாரோ, யார் நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறாரோ, யார் பதற்றமாக இருக்கிறாரோ அவர்தான் கிள்ளியிருப்பார் என்று யூகிப்பர்.
கண் பொத்தப்பட்டவருக்கு, யார் கிள்ளினார்கள் என்பதைச் சொல்லவோ, குறிப்பாகவோ காட்டக்கூடாது.
தன்னை கிள்ளிய மல்லிகைப்பூ யார் என்பதை சரியாக காட்டி விட்டால் இரண்டாவது அணியினர் ஆட்டத்தை தொடரலாம்.
தவறாக சொல்லிவிட்டால் முதல் அணியினரே ஆட்டத்தை தொடர்வர்.
பலன்கள் :
யூகிக்கும் திறன் மேம்படும்.
குழு ஒற்றுமை உண்டாகும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக