திங்கள், 29 ஜூலை, 2019

கல் எடுத்தல்.


Image result for கல் எடுத்தல்.

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



விளையாட்டுகள் என்பது குழந்தைகளுக்கு பொதுவாக பொழுதுபோக்காகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். கற்பித்தல் முறையில் கூட ஒரு விளையாட்டை சொல்லி கொடுப்பார்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாட்டுகளில் ஆர்வமாகவும், ஈடுபாட்டுடனும் விளையாடி மகிழ்வார்கள் என்று சொல்லலாம்.

கிராமப்புறங்களில் ஓடி ஆடி, சுறுசுறுப்பாக விளையாடும் விளையாட்டுகள் அதிகம் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் 'கல் எடுத்தல்".

எத்தனை பேர் விளையாடலாம்?

இந்த விளையாட்டை 5 பேர் விளையாடலாம்.

எப்படி விளையாடுவது?

இந்த விளையாட்டை விளையாடுவதற்கு முதலில் 20-க்கு 20 அடி அளவுள்ள பெரிய சதுரமொன்றை வரைந்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்தச் சதுரத்தை நான்கு சதுரங்களாக்கிக்கொள்ள வேண்டும். நான்கு சதுரங்கள் சந்திக்கும் மையப்புள்ளியில் சிறிய வட்டத்தை வரைந்துக் கொள்ள வேண்டும். அந்த வட்டத்தில் நான்கு சிறு கற்களை வைத்துக் கொள்ளுங்கள்.

முதல் போட்டியாளர் ஒருவரை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு விளையாட்டை தொடங்கலாம்.

விளையாடும் ஐந்து போட்டியாளர்களில் நான்கு போட்டியாளர்கள் சதுரங்களின் மூலைகளில் நின்றுக்கொள்ள வேண்டும். முதல் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சதுரத்தின் எல்லாப் பக்கங்களிலும் சுற்றிச் சுற்றி ஓடி வர வேண்டும்.

மீதமுள்ள நான்கு போட்டியாளர்கள் முதல் போட்டியாளர் அருகே இல்லாதபோது மற்றும் கவனிக்காத நேரமாகப் பார்த்து சதுரத்தின் நடுவில் இருக்கும் கல்லை வேகமாய் சென்று எடுத்துக் கொண்டு மீண்டும் நின்ற இடத்திற்கு வர வேண்டும்.

அவ்வாறு கல்லை எடுக்கும்போது பிறபோட்டியாளார்களை முதல் போட்டியாளர் சதுரத்தின் எந்த பகுதியில் இருந்தும் தொடுவதற்கு ஓடி வருவார். அவர் உங்களை தொட்டுவிட்டால் நீங்கள் அவுட் ஆகிவிடுவீர்கள். அவருக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

ஐந்து போட்டியாளர்களில் யார் அதிக மதிப்பெண்களை எடுத்து இருக்கிறார்களோ? அவரே போட்டியின் வெற்றியாளார் ஆவார்.

விதிமுறைகள் :

போட்டியாளர்கள் சதுரத்தின் வெளியே செல்லக்கூடாது.
முதல் போட்டியாளார் சதுரத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் உள் நுழையலாம்.

பலன்கள் :

புத்திக்கூர்மை ஏற்படும்.
இலக்கை நிர்ணயிக்கும் திறன் மேம்படும்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்