இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இந்தியாவில் வேலைகளை உருவாக்குவதே மிகக் கடினமான வேலையாக இருக்கிறது. இப்போது வேலைவாய்ப்புகளை (Job) உருவாக்குவது இன்னும் சிரமமாகப் போவதை முன் கூட்டி எச்சரிக்கிறது டீம் லீஸ் என்கிற மனித வள மேம்பாட்டு நிறுவனத்தின் இரண்டு அறிக்கைகள்.The Jobs and Salaries Primer 2019, மற்றும் Employment Outlook Report - HY1 2019-20 என இரண்டு அறிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து சில அதிர்ச்சிகரத் தகவல்களை வெளியிட்டிருக்கிறது.
டீம்
லீஸ் நிறுவனத்தின் இந்த இரண்டு அறிக்கைகளும், அடுத்த சில மாதங்களில், புதிய வேலை வாய்ப்புகளை
உருவாக்கும் பல துறைகளில் வேலைவாய்ப்புகள் (Job) குறையும் எனச் சொல்லி
இருக்கிறார்கள்
இ
காமர்ஸ், வங்கித் துறை, நிதித் துறை, இன்ஷூரன்ஸ் துறை, ஐடி சார்ந்த பிபிஓ வேலை
வாய்ப்புகள் (Job) அடுத்த சில மாதங்களில் நான்கு ஆண்டுகளில் 37 சதவிகிதம் வரை
வேலைவாய்ப்புகள் (Job) குறையலாம் என எச்சரித்திருக்கிறார்கள். புரிய வில்லையா.
2018 - 2022 ஆண்டுகளில் உருவான அல்லது உருவாக்கப்பட இருக்கும் வேலைவாய்ப்புகளை விட
2019 - 2023 ஆண்டுகளில் இருக்கும் வேலைவாய்ப்புகள் குறைவாகத் தான் உருவாகும்
என்கிறார்கள்.
சந்தைப்படுத்துதல்,
விளம்பரம் விவசாயம் மற்றும் விவசாய ரசாயனங்கள், டெலிகாம், ஐடி, மீடியா, பார்மா,
எண்டர்டெயின்மெண்ட், ஹெல்த் கேர் என பல துறைகளில் ஏற்கனவே புதிய வேலைவாய்ப்புகள்
(Job) குறைந்து வருவதையும் சொல்லி இருக்கிறார்கள்.
ஆட்டோமேஷனால்
மற்றும் ஆர்டிஃபீசியல் இண்டலிஜென்ஸ் (Artificial Intelligence), ரோபாட் பயன்பாடு
போன்ற இயந்திரமயப் பிரச்னைகளை அரசாங்கமும், நிறுவனங்களும் அலசி ஆராய்ந்து சரியான
முடிவுகளை எடுக்கும் வரை புதிய வேலைவாய்ப்புகள் உருவாவது குறைந்து கொண்டே தான்
இருக்கும் என டீம் லீஸ் நிறுவனத்தின் செயல்பாட்டுத் துணைத் தலைவர் ரிதுபர்னா
சக்ரபர்த்தி (Rituparna Chakraborty) சொல்லி இருக்கிறார்.
டீல்
லீஸ் சர்வேக்கு பதிலளித்த நிறுவனங்களில், 95 சதவிகிதம் பேர், தங்கள்
நிறுவனங்களுக்கு, இந்த ஏப்ரல் - செப்டம்பர் 2019 காலத்திலேயே, அதிக நபர்களை
வேலைக்கு எடுக்க விரும்புவதாகவும் சொல்லி இருக்கிறார்களாம். அது தான் இந்த
அறிக்கையில் கொஞ்சம் நிம்மதி கொடுக்கக் கூடிய விஷயம்.
இந்தியாவிலேயே
2018 - 2022 காலத்தை விட 2019 - 2023 காலத்தில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிய
துறையாக FMCD - Fast Moving Consumer Durable இருக்கிறது. கடந்த (2018 - 2022) 4
ஆண்டு காலத்தை விட தற்போதைய (2019 - 2023) 4 ஆண்டு காலத்தில் சுமார் 65% கூடுதலாக
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போகிறதாம்.
அதே
போல 2018 - 2022 ஆண்டுகளை விட 2019 - 2023-ல் மிகக் குறைவான வேலைவாய்ப்புகளை
உருவாக்கிய துறையாக விவசாயம் மற்றும் விவசாய ரசாயனத் துறை இருக்கிறது. கடந்த (2018
- 2022) 4 ஆண்டு காலத்தை விட தற்போதைய (2019 - 2023) 4 ஆண்டு காலத்தில் சுமார் 70%
குறைவான புதிய வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கப் போகிறதாம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக