இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
யோகப்பயிற்சி : யோகப்பயிற்சி மிகப்பழங்காலத்திலிருந்தே
பாரதநாட்டில் யோகிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் இயற்கைக்கு அப்பாற்பட்ட
சில சக்திகளை கிடைக்கும் என்பது யோகம் எனும் தத்துவத்தின் கருத்து.
பதினெட்டு யோகஸித்திகளும் பலன்களும்:-
1. பஞ்ச மகாபூதங்களின் வடிவத்தை
”தன்மாத்திரை” என்பர். இதையே சூட்சும வடிவாகக் கொண்டு பிரம்மத்தில், மனதை
நிலைநிறுத்தி தியானிப்பதால் ‘அணிமா’ என்ற சித்தி கிடைக்கிறது. இந்த சித்தி மூலம்
தன் உடலை அணுவைபோல் மிகமிகச் சிறிய வடிவத்தை எடுக்கலாம்.
2. ’மஹத்’ எனும் தத்துவரூபமாக
விளங்கும் இறைவனிடம் மனதை நிலைநிறுத்தி தியானிக்கும் யோகிக்கு ‘மஹிமா’ எனும்
சித்தி கிடைக்கிறது. இந்த சித்தி மூலம் தன் உடலை மலைப் போல் மிக மிகப்
பெரிதாக்கிக் கொள்ள முடியும்.
3. நிர்குணபிரம்மத்தில் (அருவ நிலை)
மனதை நிலை நிறுத்தும் யோகிகள் மிக உயர்ந்த பேரானந்தத்துடன் விருப்பங்களின் இறுதி
எல்லையை அடைந்து “காமா வஸாயிதா” என்ற சித்தி அடைந்த யோகி, இதனையே தன்
விருப்பங்களின் இறுதி எல்லை (காமா வஸாயிதா) என்ற சித்தியாக கூறுகிறார்கள்.
4. பகவான் எனும் சொல்லிற்கு பொருளாக
இருக்கும், விராட், இரண்யகர்பன், அந்தக்கரணம் எனும் மூன்று நிலைகளை கடந்து,
நாலாவது நிலையான துரிய நிலையில் பிரம்மத்தில் மனதை செலுத்தும் யோகிக்கு
‘வசித்துவம்’ எனும் சித்தி கிட்டுகிறது. இதன் மூலம் யோகிக்கு அனைத்தையும்
வசப்படுத்தும் ஆற்றல் உண்டாகிறது.
5. பிறப்பு இறப்பு இல்லாத பகவானின்
’மஹத்’ எனும் தத்துவமே ‘சூராத்மா’. ஆகும். சூராத்மாவில் மனதை நிலைப்பெறச் செய்பவர்கள்
‘பிராகாம்யம்’ எனும் சித்தி பெற்ற யோகி பிரம்மாண்டம் முழுமைக்கும் தலைமை
தாங்குகிறார்.
6. பகவானை ‘பரமாணுவாக’ தியானிக்கும்
யோகிக்கு ‘லகிமா’ எனும் சித்தி கிட்டுகிறது. இந்த சித்தி மூலம் உடலை காற்றைப் போல்
இலேசான எடையுடன் மாற்றிக் கொள்ள முடியும்.
7. பரப்பிரம்மத்தின் அஹங்கார
தத்துவத்தில் தன் மனதை நிலைநிறுத்தும் யோகிக்கு, ’பிராப்தி’ எனும் சித்தியால்
ஐம்புலன்களைத் தன் ஆளுகைக்கீழ் கொண்டு வரும் ஆற்றல் பெறுகிறார்.
8. முக்குணமயமான மாயைக்கு அதிபதியும்,
படைத்தல், காத்தல், அழித்தல் சக்தியும் கொண்ட பகவானிடத்தில் மனதை இலயிக்கும்
யோகிக்கு ‘ஈசித்வம்’ எனும் சித்தி கிடைக்கிறது. இந்த சித்தியினால் நான்முகன்
முதலான தேவர்களுக்கு ஆணையிடும் தகுதி பெறுகிறார்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக