Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 9 ஜூலை, 2019

பறவைகள் சரணாலயம் : வேடந்தாங்கல்


Image result for பறவைகள் சரணாலயம் : வேடந்தாங்கல்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



வேடந்தாங்கல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சென்னையிலிருந்து ஏறத்தாழ 88கி.மீ தொலைவிலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து 48கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

சிறப்புகள் :

இங்குள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மிகவும் புகழ்பெற்றது. இங்கு ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன.

சரணாலயத்தின் காடுகளானது பல்வேறு வகையான பறவைகளுக்கு ஒரு மிதக்கும் வசிப்பிடமாக உள்ளது.

இவ்விடத்திற்கு கனடா, சைபீரியா, வங்களாதேசம், பர்மா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு தங்கி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும்.

பறவைகள் இங்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது இங்கு நிலவும் பருவநிலையும், இனவிருத்தி செய்து தங்கள் வம்சத்தை பெருக்கிக் கொள்ள சாதகமான சூழ்நிலை நிலவுவதே ஆகும். நம் நாட்டின் சிறிய பறவை புகலிடங்களில் ஒன்றாகவும், மிகவும் பழமை வாய்ந்ததுமான வேடந்தாங்கல் சிறப்பான வரலாற்றைப் பெற்றுள்ளது.

பரந்த ஏரிக்குள் இருக்கும் மரங்களில் கூடு கட்டி, முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொரித்து, தங்கள் குடும்பத்துடன் தன் தாய் நாட்டிற்குச் செல்கின்றன. ஏரியைச் சுற்றிலும் நடைபாதை சிறிது தொலைவிற்கு போடப்பட்டுள்ளது. உயரத்திலிருந்து பறவைகளைப் பார்ப்பதற்கு டவர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பறவைகளின் பல்வேறு விதமான ஒலிகள், ஏரியில் இரை பிடிப்பது, குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுவது, கூட்டம் கூட்டமாக பறந்து செல்வது, வட்டமிடுவது என பறவைகள் செய்யும் ஒவ்வொரு செயலும் அத்தனை அத்தனை அழகு.

பருவகால பறவைகளின் வருகை காரணமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நாடு முழுவதிலும் இருந்து பறவை ஆர்வலர்களையும், பறவைகளை நேசிப்பவர்களையும் ஈர்க்கிறது.

இந்த சரணாலயம், சென்னை வன உயிரியல் காப்பாளர் (வண்டலூர்) கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.

எப்படிச் செல்வது?

சென்னை, தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

விமானம் வழியாக :

சென்னை விமான நிலையம்.

ரயில் வழியாக :

செங்கல்பட்டு ரயில் நிலையம்.

எப்போது செல்வது?

நவம்பர் முதல் மார்ச் வரை நல்ல சீசன். சில சமயங்களில் மே வரையிலும் கூட பறவைகள் இருப்பது உண்டு. மாலை நேரங்களில் சென்று பறவைகளை பார்ப்பது அற்புதமான நிகழ்வாகும்.

எங்கு தங்குவது?

சென்னை, காஞ்சிபுரத்தில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

பார்க்க வேண்டிய இடங்கள் :

கிண்டி சிறுவர் பூங்கா.
எழும்பூர்.
பிர்லா கோளரங்கம்.

இதர சுற்றுலாத்தலங்கள் :

மெரினா கடற்கரை.
அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா.
விவேகானந்தர் இல்லம்.
சாந்தோம் தேவாலயம்.
வள்ளுவர் கோட்டம்.
எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக